பேச்சு:பாபிலோன்

பாபிலோன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மறுவல், மருவல் - எது சரி? மரூஉ என்ற சொல் இங்கு தொடர்புபடுத்திப் பார்க்கத்தக்கதா?--Ravidreams 11:45, 6 மார்ச் 2007 (UTC)

மருவல்தான் சரி என்று நினைக்கிறேன். மரூஉ தொடர்புபடுத்தி பார்க்கவேண்டியதே. --மு.மயூரன் 12:11, 6 மார்ச் 2007 (UTC)

மருவல், மருவுதல் என்றால் கலத்தல், பொருந்துதல், தழுவுதல் (அணைத்தல்), பதித்தல் முதலிய பொருட்களில் வரும். மருவி வரும் என்றால், காலத்தாலோ, இடத்தாலோ மாறி, திரிபுற்று (கலத்தல், தழுவுதல் என்னும் பொருள்வழி) வரும் என்று பொருள். இது மரூஉ என்பதின் வழி வந்ததே. மறுவல் என்றால் தமிழ் அகராதி கத்தூரி விலங்கு என்கின்றது. ஆனால், மறுவலிடுதல் என்றால் திரும்புதல் (மறு, மறுபடியும், மறுமுறை என்பதைப்போல); மறுவரல் என்றால் சுழற்சி (சில நேரங்களில் மயக்கம், கலக்கம் என்றும் பொருள் வரும்). மனம் மறுகுதல், மறுக்குறுகின்றது, மறுக்கம் என்றால் மனச்சுழற்சி. எனவே இரு சொற்களுக்கும் தொடர்புண்டு ஆனால் சுட்டும் பொருள் சற்று வேறானது. --செல்வா 13:29, 6 மார்ச் 2007 (UTC)

தலைப்பு

தொகு

இது பாபில் அல்லவா? நானறிந்த வரை அரபு, எபிரேயம் முதலான மத்திய கிழக்கின் மொழிகள் அனைத்தும் இதனை பாபில் என்றுதான் கூறுகின்றன. பாபேல் என்றன்று.--பாஹிம் 19:45, 26 மார்ச் 2011 (UTC)

அரபு மொழியில்: بابل, Babil; எபிரேயத்தில் בבל, Bābel. என்றாலும் ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு அமைய இக்கட்டுரையின் தலைப்பை தற்போது அழைக்கப்படும் பெயரான பாபிலோன் என அமைக்கலாம்.--Kanags \உரையாடுக 05:03, 27 மார்ச் 2011 (UTC)
பாபிலோன் --AntanO 02:03, 16 அக்டோபர் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாபிலோன்&oldid=3325026" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாபிலோன்" page.