பாம்பு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பேச்சு:ரத்தப்புடையன் பக்கத்தில் இருந்த உரையாடல்

தொகு

முதன்மைக் கட்டுரையற்ற, பேச்சு:ரத்தப்புடையன் பக்க உரையாடல் இங்கே நகர்த்தப்பட்டுள்ளது.

புடையன்

தொகு

புடையன் பாம்பு அதிக விஷம் கொண்ட பாம்பு, அதற்க்கு தமிழ் நாட்டில் வேறு பெயர் இருக்கின்றவா?? அல்லது தமிழ் நாட்டிலும் புடையன் என்ற பெயரா?? விரியன் என்று எந்த இனத்து பாம்பை அழைக்கிறீர்கள்??--சிவம் 13:42, 8 செப்டெம்பர் 2012 (UTC)

பல்வேறு வகையான பாம்புகள் பற்றி விக்கியில் உள்ள கட்டுரைகளின் பகுப்பைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 13:49, 8 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் கனகஸ். கண்டிப்பாக பார்த்துள்ளேன் ஆனால் அதில் இருக்கும் புடையன் பாப்பு இனத்தை விரியன் என்று சொள்ளப்பட்டுடிருக்கு, அதனால்த்தான் தமிழ் நாட்டில் புடையன் என்ற பாம்பைத்தான் விரியன் என்று சொல்லுகிறார்களோ தெரியவில்லை, அந்த சந்தேகத்தை தீர்ப்பதுக்குத்தான் கேட்டுள்ளேன். ஆனால் இலங்கையிலும் விரியன் என்று சொல்ல கூடிய புடையன் பாம்புகள் இருக்கின்றன. ஆனால் புடையனும் ,விரியனும் ஒரே இனத்தை சேர்ந்தாலும் விரியன் இனத்துக்கு தான் தலை பகுதிய சற்று விரிக்க முடியும், அதாவது நாக பாம்பு போல் அல்லாமல் சிறிய படம் எடுக்கும்.--சிவம் 13:58, 8 செப்டெம்பர் 2012 (UTC)

புடையன் பாம்பு வேறு, விரியன் பாம்பு வேறு. இந்த நூலை 18ஆம் பக்கத்திலிருந்து படித்துப் பாருங்கள் (புடையன் என்பது Krait. விரியன் என்பது Viper. இந்நூலினுடைய தமிழ்ப் பதிப்பை எட்டாந்தரத்திற்கற்றிருந்தேன்.). இரண்டு பாம்புகளுக்குமிடையிலான வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. --மதனாகரன் (பேச்சு) 05:08, 9 செப்டெம்பர் 2012 (UTC)Reply


வணக்கம் மதனாஹரன். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்னுடைய சந்தேகம் இப்போ தீர்ந்து விட்டது புடையன் என்பது வேறு விரியன் என்பது வேறு. யாழ்பாணத்தில் சில கிராமங்களில் விரியன் இனத்தை சேர்ந்த பாம்புகளையும் புடையன் என்றுதான் அழைக்கிறார்கள், காரணம் என்னவென்று தெரியவில்லை, உதாரணம்: முத்திரை விரியனை, முத்திரை புடையன் என்றுதான் அளிக்கிறார்கள். மணல் விரியனை மணல் புடையன் என்கிறார்கள்.--சிவம் 17:00, 9 செப்டெம்பர் 2012 (UTC)

சிவம்.தலைப்பை இரத்தப் புடையன் என அமைத்தால் என்ன?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:05, 9 செப்டெம்பர் 2012 (UTC)Reply

காரணம் என்னவென்று தெரியவில்லை. தவறாக அழைக்கப்படுகின்றன என்று நினைக்கின்றேன். இரத்தம் என்ற வடசொல்லைத் தவிர்த்துத் தலைப்பைக் குருதிப் புடையன் என்றமைக்கலாமே! அறிவியற்பாடநூல்களிலும் இப்போது இரத்தம் என்பதற்குப் பதிலாகக் குருதி என்பதே பயன்படுத்தப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 04:52, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply
கட்டுரை இன்னும் உருவாகவில்லை. ஆனாலும் பொதுவான புடையன் என்ற தலைப்பில் கட்டுரையைத் தொடங்கலாம்.--Kanags \உரையாடுக 08:28, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாம்பு&oldid=2639964" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாம்பு" page.