பேச்சு:பாலூட்டி
பாலூட்டிக்கு பதிலாக முலையூட்டி என்றும் கூறுவர் இல்லையா? முலையூட்டி என்பதை மீழ்வழிப் படுத்தலாமா (Redirect)? --ஜெ.மயூரேசன் 04:45, 28 மே 2006 (UTC)
- பாலூட்டி is the common term in TN. Personally, i hear the word முலையூட்டி first time. If its popular usage then we can very well redirect--ரவி 18:29, 28 மே 2006 (UTC)
- இலங்கை பாடப்புத்தகங்களில் முலையூட்டி எனும் சொல் பாவிக்கப்படுகின்றது. --ஜெ.மயூரேசன் 08:33, 10 ஆகஸ்ட் 2006 (UTC)
- இதனை முன்பே மீள்வழிப்படுத்தி விட்டேன். --சிவகுமார் 08:38, 10 ஆகஸ்ட் 2006 (UTC)
- இலங்கை பாடப்புத்தகங்களில் முலையூட்டி எனும் சொல் பாவிக்கப்படுகின்றது. --ஜெ.மயூரேசன் 08:33, 10 ஆகஸ்ட் 2006 (UTC)
- ஆம் கவனித்தேன். ஆயினும் உங்கள் தகவலுக்காக அதை இட்டேன்! ;-)--ஜெ.மயூரேசன் 09:18, 10 ஆகஸ்ட் 2006 (UTC)
பாலூட்டிகளின் வகைகளான placental, marsupial மற்றும் monotreme mammals என்பதற்கான தமிழாக்கங்கள் உள்ளனவா?
--Mojosaurus 11:22, 24 ஜூலை 2010 (UTC)
- அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியில் marsupial என்பதற்கு மதலைப்பை விலங்கு என்கிறார். placenta என்பதற்குச் சூல்கொடி (நஞ்சுக் கொடி), சூலொட்டு என்றும், கூட்டுச்சொற்கள் பலவற்றில் சூலமைவு என்றும் கூறுகின்றார். Monotreme என்னும் சொற்கு ஏதும் இடுகை இல்லை. மார்சூப்பியல் என்பதற்கு மதலைப்பை அல்லது மதலைப்பையி, மதலைப்பைப் பாலூட்டி எனலாம். பிளாசென்ட்டல் என்பதற்குக் சூல்கொடியி எனலாம். மோனோட்ட்ரீம் என்பதற்கு ஒற்றைக்கழிவாயி அல்லது ஒற்றைப்பின்வாயி எனலாம் (அறிவியற்ப்பெயர் என்பதால் :) ).இந்த ஒற்றைப்பின்வாயிகள் முட்டையிடும் பாலூட்டிகள். எனவே முட்டைப்பாலூட்டிகள் என்றும் கூறலாம் --செல்வா 15:30, 24 ஜூலை 2010 (UTC)
- நன்றி செல்வா. உயிர் தரும் placenta எவ்வாறு சூல்கொடி (நஞ்சுக்கொடி) ஆயிற்று என்பது வியப்பிற்குரியது. இதன் விளக்கம் உள்ளதா? மற்றும், மதலை என்பதன் பொருள் என்ன? --Mojosaurus 17:57, 24 ஜூலை 2010 (UTC)
மதலை என்றால் குழந்தை என்று பொருள். ஆனால் மற்ற பொருள்களையும் நோக்கினால், ஒட்டிக்கோண்டிருபது, தொங்கிக்கொண்டிருப்பது போன்ற பொருள்களும் தென்படும். தமிழ் லெக்ஃசிக்கன் (தமிழ்ப் பேரகராதி) கீழ்க்கண்டவாறு கூறுகின்றது:
- கலித். 28). 6. Ship, boat; மரக் கலம். (திவா.) கொழுநிதிக் குப்பையெல்லாம்... மதலையேற்றி (சீவக. 505). 7. Child, infant; குழந் தை. 8. Son; மகன். (பிங்.) மதலை யிற்றமை கேட்டலும் (சேதுபு. அக்கினி. 82). 9. Doll; பாவை. (திவா.) 10. Senna. See கொன்றை. (பிங்.) 11. Indian laburnum. See சரக்கொன்றை. (தைலவ. தைல.)
மரக்கலம்,நீரில் மிதப்பது, ஒட்டிக்கொண்டு, நீரில் தவழ்வது, சரக்கொன்றை சரமாக ஒட்டிக்கொண்டிருக்கும், குழந்தை, தாயின் இடுப்பில் (கைக்குழந்தை) பெரும்பாலும் இருப்பதால் மதலை. பொம்மை அல்லது பாவை என்பதும் ஏறத்தாழ எப்பொழுதும் கையில் வைத்திருப்பதால் அதுவும் மதலை எனப்படும். சூல்கொடி எப்படி நஞ்சாயிற்று என்று மரு.கார்த்தி உங்கள் பயனர் பக்கத்தில் கருத்திட்டிருக்கின்றார், பாருங்கள்.
--செல்வா 21:55, 24 ஜூலை 2010 (UTC)