பேச்சு:பிசுக்குமை

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by HariHaran Honest in topic Change picture

ideal என்பதற்கு இந்த இடத்தில் நல்லியல் பொருந்தாததுபோல் தோன்றுகிறதே? மெய்யியல் என்பதிலிருந்து வேறுபடுத்தி செவ்வியல் என்பதுபோலவொரு சொல்லைப் பயன்படுத்தலாமா? -- சுந்தர் \பேச்சு 03:10, 25 ஏப்ரல் 2008 (UTC)

சுந்தர், ஒரு பத்தாம் நிலைத் தமிழ் வேதியியல் பாட நூலில் ideal gas equationஐ நல்லியல்பு வாயுச் சமன்பாடு என்று பார்த்தேன். நல்லியல்பு என்பதை விட நல்லியல் என்று சுருக்கமாய்ச் சொல்வது நன்றாக இருப்பதாகப் பட்டது. செவ்வியல் என்பது classical என்னும் பொருள் வந்து பொருந்தாமல் போகுமே? --செல்வராஜ் 03:30, 25 ஏப்ரல் 2008 (UTC)
ஆம். செவ்வியல் பொருந்தவில்லைதான். நல்லியல் என்பது anthropomorphism (மாந்தர்நோக்கு? - அஃறிணைகளிலும் மாந்தரியல்புகளைப் பொருத்துதல்) ஆகிவிடுமோ என அஞ்சினேன். மாந்தர்களின் நல்ல, கெட்ட என்ற பாகுபாடு இவற்றிற்குப் பொருந்துமா? இது பெரிய சிக்கலில்லை, எல்லா மொழிகளிலும் இப்படித்தான். எல்லாம் என் ஆர்வக்கோளாறுதான். :-) -- சுந்தர் \பேச்சு 03:40, 25 ஏப்ரல் 2008 (UTC)
Ideal Gas என்பதற்கு கருத்தியல் வளிமம் அல்லது கருதியல்பு வளிமம் அல்லது கருத்தியல்வு வளிமம் என்று கூறலாம். ஏனென்றால், எடுத்துக்கொண்ட வளிம வடிவில் இருக்கும் ஒரு பொருளின் உட்கூறுகளாகிய அணுக்களோ, மூலக்கூறுகளோ அலைந்து உலாவும் பொழுது கருத்தியலான சில பண்புகள் கொண்டு இருப்பதாகவும், (உருண்டையான வடிவம் கொண்டது, ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது ஆற்றலிழக்காமல் மீண்மைப்பண்பு கொண்டது, மற்றபடி வேதியியல் வினைகள் கொளவதில்லை) சில விளைவுகள் முக்கியம் இல்லை என்றும் கருதி அதன் அடிப்படையில் வளிமத்தின் இயல்புகளைப் பற்றிய மாறா விதிகள் பெற்று, அந்த விதிகளின் படி இயங்கும் வளிமங்களைத்தானே கருத்தியல் வளிமம் என்கிறோம். --செல்வா 03:56, 25 ஏப்ரல் 2008 (UTC)
கருத்தியல் பொருத்தமாகவுள்ளது. செல்வராசு அவர்களுக்கும் ஏற்பென்றால் மாற்றிவிடலாம். ' anthropomorphism - தமிழில் என்ன? -- சுந்தர் \பேச்சு 04:03, 25 ஏப்ரல் 2008 (UTC)
ஒரு வகையில் கருத்தியல் பொருத்தமாகத் தான் இருக்கிறது. Real Fluids என்பது மெய்யான பாய்மங்களாகவும் அதனெதிரே Ideal Fluids என்பது வெறும் கருத்தியல் பாய்மங்களாகவும் கொள்ளலாம். என்னிடம் இருக்கும் ஒரு அகரமுதலியைப் பார்த்தபோது கருத்தியல் என்ற சொல்லை அங்கும் பாவித்திருக்கிறார்கள். அதோடு சுந்தர் முதலில் சொன்னது போல ideal gas என்பதற்கு செவ்விய வளி என்றும் இரண்டாவதாக ஒன்றைப் பாவித்திருக்கின்றனர். நாம் இங்கு கருத்தியலையே வைத்துக் கொள்ளலாம்.

−முன்நிற்கும் கருத்து Rselvaraj (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சுந்தர், anthropomorphism என்பதற்கு மாந்தவுருபியம் (மாந்தனின் அகப் புற பண்புகள் இருப்பது போன்ற உருவகித்துக் கூறுவது. மாந்தர்களின் தனிப்பண்புகளைப் பிற விலங்கு அல்லது உயிரற்ற அஃறிணைப்பொருட்களின் மேல் சாற்றிக் கூறுவது மாந்தவுருபியம்). --செல்வா 13:33, 25 ஏப்ரல் 2008 (UTC)

நன்றி செல்வா. மாந்தவுருபியம் பற்றி கட்டுரை ஆக்க வேண்டும். உங்கள் வரைவிலக்கணத்தைக் கொண்டே துவக்கலாம். -- சுந்தர் \பேச்சு 15:03, 25 ஏப்ரல் 2008 (UTC)

Change picture தொகு

Use the explanation picture which used in English page of viscosity HariHaran Honest (பேச்சு) 02:36, 9 ஆகத்து 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிசுக்குமை&oldid=2398113" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிசுக்குமை" page.