பேச்சு:பிட்டி தியாகராயர்

கூடுதலாகச் சேர்க்கப்பட வாய்ப்புள்ள தகவல்கள்: தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில் தான் முதன் முதலாகப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, மற்ற எல்லோரையும் விட 1916 ஆம் ஆண்டிலே ரூ 10,000 நன்கொடை வழங்கிய-நீதிக் கட்சித் தலைவர் தியாகராயருக்கு விழா மேடையிலே உட்காரப் பார்ப்பனர்கள் அனுமதிக்கவில்லை! அதே நேரத்தில் தியாக ராயரின் பார்ப்பன கிளர்க்குகளுக்குக் கூட அந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது! இந்த அவமானத்தைக் கண்டு கொதித்தெழுந்த தியாகராயர், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பில் மிகத் தீவிரவாதியாக மாறினார் (source : இங்கே)

இந்திய அரசின் தொலைத் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத் துறையின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்த நாளன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் மன்றத்தில் பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசனார், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய பெருமக்களுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.


தியாகராயர் மேயராக இருந்த போது கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தையும் பரிசீலித்திருக்கிறார். (ஆதாரம்: சென்னை மாநகராட்சி இணைய தளம்) --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 15:55, 13 சனவரி 2011 (UTC)Reply


தியாகராயர் நீதிக்கட்சியைத் தொடங்கியதற்குக் காரணம் அவரை பிராமணர்கள் 1916ல் தோற்கடித்தது; இந்த கும்பாபிஷிகேம் விஷயம் நீதிக்கட்சி பற்றிய வரலாற்றுப் புத்தகங்களில் காணக்கிடைக்கவில்லை. திராவிட இயக்கத் தலைவர்களுக்கு பிற்காலத்தில் நிகழ்ந்த மீட்டுருவாக்கத்தின் காரணமாகக் கூட இந்தக் காரணம் சொல்லப்பட்டிருக்கலாம். எனினும் வலைப்பதிவுகளில் உள்ள செய்திகளை நம்பி இதனை சேர்க்க வேண்டாம். இர்ஷ்சிக், மற்றும் ராஜாராமன் போன்ற புத்தகங்களில் தேடிப் பார்க்கிறேன். இருந்தால் சேர்க்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 16:09, 13 சனவரி 2011 (UTC)Reply
மேலும் அது மதிய உணவல்ல காலை உணவு என்றும் நினைவு; செட்டி நகர்மன்றத் தலைவராக இருந்தார் (chairman of city council) மேயர் அல்ல. மேயர் பதவி 1933 இல் உருவாக்கப்பட்டது.--சோடாபாட்டில்உரையாடுக 16:09, 13 சனவரி 2011 (UTC)Reply
  • வலைப்பக்கங்களில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த ஐயப்பாடு காரணமாகவே அவற்றைப் பேச்சுப் பக்கத்தில் இட்டேன். தங்கள் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான கட்டுரைகள் பலவ‌ற்றை எழுதியுள்ளீர்கள். எனக்கு ஏதாவது தெரியுமாயின் பேச்சுப் பக்கத்தில் இடுகிறேன். தாங்கள் அதைப் பிறகு கட்டுரையில் சேர்க்க முடியுமானால் வேண்டிய இடத்தில் சேருங்கள். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 16:15, 13 சனவரி 2011 (UTC)Reply
உறுதி செய்து விட்டேன் 1920ல் செட்டி நகர்மன்றத் தலைவராக இருந்த போது ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்த மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவு வழங்க உத்தரவிட்டார். பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு இது விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் 1924-25ல் ஆங்கில அதிகாரிகள் நிதியுதவியை நிறுத்தியதால் திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் 1927ல் சுப்பராயன் அரசு இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. (ராஜாராமன் பக். 286-7) இதனை சேர்த்து விடுகிறேன்.
Return to "பிட்டி தியாகராயர்" page.