பேச்சு:பின்தங்கிய சிப்பாய்
பின் தங்கிய சிப்பாய் என்பதில் பின்தங்கிய என்பது ஒரு சொல்லில் வருவதே நல்லது.--Kanags \உரையாடுக 08:03, 5 நவம்பர் 2014 (UTC)
னகர மெய்யை அடுத்து தகரம் வரின், தகரம் றகரமாக மாறும் என்பது இலக்கணம். அதனாற்றான், அதனைப் பிரித்து எழுதியாக வேண்டியுள்ளது. இங்கே நல்லது கெட்டது எல்லாம் இல்லை. இலக்கணத்தை மட்டுமே பார்த்து அதனை இரு சொற்களாகப் பிரித்து எழுதியிருந்தேன். நீங்கள் உங்கள் விருப்பப்படி மாற்றி விட்டீர்கள்.--பாஹிம் (பேச்சு) 02:45, 6 நவம்பர் 2014 (UTC)
நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு மேற்படி சொல் தனிச்சொல் என்பதற்கு என்ன ஆதாரம், கனகு?--பாஹிம் (பேச்சு) 02:56, 6 நவம்பர் 2014 (UTC)
- பின்தங்கிய என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல். பின்றங்கிய என்றே இலக்கணப்படி எழுத வேண்டுமானால் அப்படியே எழுதுங்கள். அதற்காகப் பிழையாக எழுதக்கூடாது. பின் தங்கிய என்ற சொற்றொடர் இலக்கணப்படி தவறு என்றே நினைக்கிறேன், ஏன் என்று கேட்காதீர்கள், எனக்குத் தெரியாது:).--Kanags \உரையாடுக 03:01, 6 நவம்பர் 2014 (UTC)
பின் தங்கிய என்று பிரித்து எழுதுவது தவறென்று எப்படிக் கூறுவது? வெறுமனே தவறு என்று நினைப்பதனால் இலக்கணப் புறம்பாக எழுதுவது சரியாகி விடுவதில்லை. பிரித்து எழுதுவதே முறை. எனினும், நான் இதனைப் பற்றிய உரையாடலை நீடிக்க விரும்பவில்லை.--பாஹிம் (பேச்சு) 03:17, 6 நவம்பர் 2014 (UTC)