பேச்சு:பிராவைஸ் அணிக்கோவை

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

கணிதத்தில் அணிக்கோவை எனபது, determinant-ஐக் குறிக்கும் (தமிழ்நாட்டுப் பள்ளி பாடநூல்கள்). ஆகவே lattice-க்கும் அணிக்கோவை என்ற மொழிபயர்ப்பு சரியானதாகுமா? இரண்டிற்கும் குழப்பம் நேரலாம். lattice-க்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லை பரிந்துரக்கும்படி பயனர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:59, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைச்சொல் அகராதியில் இரண்டு சொற்களுக்குமே அணிக்கோவை என்று தான் கூறப்பட்டுள்ளது. இரண்டும் வெவ்வேறு துறைச்சொற்கள் என எண்ணுகிறேன். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 05:59, 14 அக்டோபர் 2013 (UTC)Reply
Bravais என்பதை பிராவே என்று ஒலிக்கவேண்டும். Lattice என்பது பலகணி என தமிழில் அழைக்கப்படும். இது சன்னல் என்னும் பொருளில் வருவது. Lattice bridge என்பது பலகணிப்பாலம் என சென்னைப் பேரகராதி சொல்லுகின்றது. ( இங்கே பார்க்கவும் ). வேலி என்னும் பொருளில் அழி என்னும் சொல் தமிழில் lattice என்பதற்கு ஈடாக வருகின்றது. ஆனால் இங்கே பலகணி என்பதுபோல சீர்கணி எனலாம். சன்னலுக்குப் பலகணி என்பது பல ஓட்டைகள் (கண் என்றால் துளை, ஓட்டை) உள்ள சாளாரம் என்னும் பொருளில் வருவது. Lattice என்பது பல புள்ளிகள் சீராக இடைவெளிவிட்டு பாங்கில் (pattern) அமைத்திருப்பது. இங்கே கண்-கணி என்பது இடைவெளியைக் குறிப்பதாகக் கொள்வது பொருந்தும். இடைவெளி என்னும் கருத்தே புள்ளிகளோ கோடுகளோ, தளங்களோ எல்லையை வரையறை செய்ததால்தான் உண்டாகும். எனவே சீரான அடுக்கில் புள்ளிகளோ, கோடுகளோ ஒரு பாங்கில் அமைந்த அமைப்பைச் சீர்கணி எனலாம். எனவே பிராவே சீர்கணி என பெயரிடலாம். பார்க்கவும்: @Booradleyp1:, @Inbamkumar86: --செல்வா (பேச்சு) 03:19, 21 நவம்பர் 2015 (UTC)Reply
ஒலிப்பு: http://forvo.com/word/bravais/#fr
Return to "பிராவைஸ் அணிக்கோவை" page.