பேச்சு:பிரிசன் பிரேக்


கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட மதிப்பீடு - சில கருத்துகள் தொகு

  • English sentence structure ஐ அப்படியே தமிழில் தர முயன்றுள்ளார். complex sentence தமிழில் ஒத்துவராது. எ.கா. முதல் சொற்றொடர்- பிரிசன் பிரேக் (சிறை உடைப்பு) என்பது, பால் ஸ்கெரிங் உருவாக்கி 2005, ஆகஸ்டு 29 அன்று பாக்ஸ் ஒளிபரப்பு நிறுவனத்தில் முதலில் ஒளிபரப்பப்பட்ட நாடக தொலைக்காட்சித் தொடராகும். இதைப் படிக்கும் போது தமிழ் படிப்பது போலவா இருக்கிறது. இதையே பிரிசன் பிரேக் பாக்ஸ் ஒளிபரப்பு நிறுவனத்தில் ஒளிபரப்பப்பட்ட நாடக தொலைக்காட்சித் தொடராகும். பால் ஸ்கெரிங்கால் உருவாக்கபட்ட இத்தொடர் ஆகஸ்டு 29, 2005 இல் முதலில் ஒளிபரப்பப்பட்டது என்று பிரித்து சிறிய எளிய தொடர்களாக எழுதப்படவேண்டும்.
  • long-term prospects என்பது நீண்டகால தொலைநோக்கைக் என்று மாறியுள்ளது. literal meaning சரியென்றாலும் இங்கே prospects என்பது நிலைக்கும் தன்மை / நீண்டகால் வாய்ப்புநிலை என்ற அர்தத்தில் வர வேண்டும்--சோடாபாட்டில் 20:19, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
  • tie-in novel எப்படி உலகளாவிய நோக்கில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஆனது. “in" என்று பார்த்தவுடன் இன்டர்நேஷனல் என்று டூல்கிட் முடிவு கட்டிவிட்டதோ?
  • season - பருவம் என்று மொழி பெயர்த்திருக்கலாமே? அதே போல் penitentiary - சிறைச்சாலை
  • முதன்மைக் கட்டுரைகள் இல்லையென்றால் red links ஐ எடுத்து விட வேண்டும்.
  • "The Fugitive times eight" - என்றால் The Fugitive படத்தைப் போல எட்டு மடங்கு (த்ரில்லிஙகாக) இருக்கும் என்று பொருள் அதை அப்படியே ”த ஃபியூஜிட்டிவ் டைம்ஸ் எயிட்"
  • முதல் சீசனில் பத்து நடிகர்கள் நடித்துள்ளனர், அவர்கள் ஸ்டார் பில்லிங் பெற்றவர்களும் சிகாகோவைச் சேர்ந்தவர்கள் அல்லது பாக்ஸ் ரிவர் ஸ்டேட் பெனிட்டென்ஷியரியைச் சேர்ந்தவர்களாவர். நடிகர்களுக்கும் பாத்திரங்களுக்கும் குழப்பபட்டு

ள்ளன. நடிகள் சிறையில்/சிகாகோவைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் நடித்த பாத்திரங்கள் தான் (கதையில்) சிகாகோவிலும்/ சிறையிலும் இருக்கின்றன.

  • "would come in playing mysterious, but it was so cheesy and false." = "பலர் வந்து நடித்த போது, அது கொஞ்சம் புதிரான நடிப்பாகும், அதற்கான அவர்களின் நடிப்பெல்லாம் மிகவும் மோசமானதாகவும் தவறானதாகவும் இருந்தது."

தெலுங்கு பட டப்பிங் டையலாக் போலவே இருக்கிறது.

  • Conception = உருவாக்கம். கருத்து என்று literal ஆக் மொழி பெயர்த்துள்ளார்?

--சோடாபாட்டில் 07:39, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரிசன்_பிரேக்&oldid=3477672" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிரிசன் பிரேக்" page.