பேச்சு:பிரிட்டன்
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
Britain என்பதை "ஐக்கிய இராச்சியம்" என்று கூறுவதில்லை. ஐக்கிய இராச்சியம் (UK) என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லந்து மற்றும் வட அயர்லாந்து போன்ற நான்கும் இணைந்ததன் பின்னர் வழங்கப்படும் பெயராகும்.
அதேவேளை "Britain" என்பது பிரித்தானியா தீவை மட்டுமே குறிக்கும். அதாவது அரசியல் ரீதியாக பிரித்தானியா தீவுக்குள் அடங்கியிருக்கும் வேல்ஸ், ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து மூன்று நாடுகளின் நிலப்பரப்பைக் குறிக்கும் பெயராகும். உரோமர்கள் கெல்டிக் பூர்வக்குடிகளுடன் போரிட்டு அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பைக் கைபற்றியதன் பின்னர், அவர்கள் அத்தீவுக்கு வழங்கியப் பெயர் "Brittania" என்பதாகும். அப்பெயரே அதன் பின்னர் மருவி "Britain" என வழங்கப்பட்டது. Brittania வில் வாழ்ந்த பூர்வக்குடிகளை உரோமர், "Briton" என்றும் அழைத்தனர்.
- Briton = பிரிட்டனியர் (பிரித்தானியாவில் வாழ்ந்த பூர்வக்குடிகளின் பெயர்)
- Britain = பிரித்தானியா (நிலப்பரப்பின் பெயர் அல்லது தீவின் பெயர்)
எனவே மேலுள்ளவாறு அமைதலே பொருத்தமானது என கருதுகிறேன். --HK Arun 06:18, 17 பெப்ரவரி 2011 (UTC)