பேச்சு:பீறிடும் வெந்நீரூற்று

பீறிடும் வெந்நீரூற்று எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கலை இந்தக் கட்டுரையை நீங்கள் மிக அழகாக வளர்த்தெடுதுள்ளீர்கள்!! உங்கள் கட்டுரைகள் தரமான நல்ல கட்டுரைகளுக்குச் சிற்ந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன! நல்வாழ்த்துகள்! --செல்வா 23:07, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நன்றி செல்வா--கலை 10:29, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply

உரை திருத்தம் பற்றி

தொகு
  • நீரூற்றுக்கள் என்பனவற்றை நீரூற்றுகள் என்று மாற்றியுள்ளேன்.
  • சில இடங்களில் மீற்றர் என்று இருந்ததை மீட்டர் என்று மாற்றியுள்ளேன்.
  • ஐசுலாந்து என்றும் இது போன்ற எளிமைப்படுத்தலும் செய்துள்லேன்.
  • அதியுயர் என்று பல இடங்களில் வருகின்றன. இவற்றைப் பெரும்பாலான இடங்களில் அப்படியே விட்டிருக்கின்றேன். இவற்றை உயர்வெப்ப என்று மாற்றலாம் என்பது என்கருத்து (ஆங்கிலத்தில் extreme என்னும் சொல்லைப் பயன்படுத்தினாலும், உயர்வெப்பம் என்பதே பொருள். மிகுவெப்பம், மிகுவெப்பநிலை எனலாம். extreme environment என்று பற்பல சூழல்களில் வரக்கூடும் (இங்கு இல்லை) - மிகுந்த கதிர்வீச்சு, மிகுந்த அழுத்தம், மிகக்குறைந்த அழுத்தம் இப்படிப் பல. அங்கெல்லாம் எல்லைதொடு கடுவாழ்வு, எல்லைக்கோட்டுக் கடுவாழ்வு, எல்லைக்கோட்டுக் கடுஞ்சூழல் என்பது போன்று கூறலாம். வெப்பம் மட்டும் எல்லைக்கோட்டு நிலையில் இருந்தால், மிகுவெப்பநிலைச் சூழல் என்பது போல் சொன்னால் போதும் என்று நினைக்கின்றேன். அத்து (< அற்று (எல்லை)) என்னும் சொல்லையும் ஆளலாம்.--செல்வா 23:48, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply


'அதியுயர் வெப்பம்' என்பதை தற்போது 'உயர் வெப்பம்' என்று மாற்றியுள்ளேன்.--கலை 10:29, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கன்னியா வெந்நீரூற்று

தொகு

கன்னியா வெந்நீரூற்று என அழைக்கப்படுபவை, உண்மையில் வெந்நீரூற்றுக்களின் (Geysers) இயல்பைக் கொண்டிருக்கவில்லை எனத் தோன்றுகின்றது. அதனால் அதனை இங்கே இணைப்பது சரியா? அவற்றை கன்னியா வெந்நீர்க் கிணறுகள் என அழைக்கலாமோ?--கலை 23:36, 23 அக்டோபர் 2010 (UTC)Reply

கன்னியாவில் உள்ள வெந்நீரூற்றுகளை நாம் சிறுவர்களாய் இருக்கும் போது சுடுதண்ணிக் கிணறு என்று தான் அழைப்போம். நீங்கள் குறிப்பிடும் Geyser களின் இயல்பை இவை கொண்டிருக்கவில்லை தான். ஆனாலும், இவை பரவலாக வெந்நீரூற்று என்று தான் இப்போது அழைக்கப்படுகிறது. கிணறு என்பது செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டவையைக் குறிக்குமா?--Kanags \உரையாடுக 06:02, 7 நவம்பர் 2010 (UTC)Reply
நன்றி Kanags. உண்மைதான் நானும் முன்னர் அவற்றைச் சுடுதண்ணிக் கிணறுகள் என்றுதான் அறிந்திருந்தேன். அங்கே உள்ளது இயற்கையான வெந்நீரூற்றாக இருப்பினும், அவற்றில் செயற்கையாக அமைக்கப்பட்ட கிணறுகள் இருப்பதனால், இவ்வாறு பெயர் பெற்றிருக்கலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் Geysers, Hot Springs க்குத் தனித்தனியான கட்டுரைகள் உள்ளன. ஆனால் அவை இரண்டையும் வேறுபடித்திக் காட்டக் கூடிய தமிழ்ச் சொற்கள் எவை எனத் தெரியவில்லை. இவற்றிற்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்தால் நல்லது.--கலை 12:28, 7 நவம்பர் 2010 (UTC)Reply
  • Hot spring என்பதையே வெந்நீரூற்று என்று அழைத்தல் சரியெனக் கருதுகிறேன். Hot spring இன் ஒரு வகையே Geyser என்பது அந்தக்கட்டுரைகளில் இருந்தும் அகரமுதலிகளில் இருந்தும் புலனாகிறது.

gey·ser n. 1. A natural hot spring that intermittently ejects a column of water and steam into the air. 2. (gzr) Chiefly British A gas-operated hot-water heater.

பெயர் வந்த விதம்:

[After Icelandic Geysir, name of a hot spring of southwest Iceland, from geysa, to gush, from Old Norse; see gheu- in Indo-European roots.] The American Heritage® Dictionary of the English Language, Fourth Edition

எனவே geyser என்பதை பீறிடும் வெந்நீரூற்று அல்லது வெந்நீரூற்றுப் பீச்சு எனக் கருத்து வருமாறு அழைக்கலாம் எனக் கருதுகிறேன்.--சி. செந்தி 16:15, 8 நவம்பர் 2010 (UTC)Reply

நீங்கள் சொல்வது சரியாகத்தான் தோன்றுகின்றது செந்தி. மற்றவர்களும் என்ன கூறுகின்றார்கள் என்று பார்த்துவிட்டு, Geysers க்கு 'வெந்நீரூற்று' எனக் கொடுத்திருப்பதை மாற்றி 'பீறிடும் வெந்நீரூற்று' எனக் கொடுக்கலாம் என நினைக்கிறேன். --கலை 21:09, 8 நவம்பர் 2010 (UTC)Reply

இந்தப் பக்கத்துக்கு வந்து பல நாட்களாயிற்று. தலைப்பை 'பீறிடும் வெந்நீரூற்று' க்கு நகர்த்துகின்றேன்--கலை (பேச்சு) 10:33, 3 ஆகத்து 2012 (UTC)Reply

Return to "பீறிடும் வெந்நீரூற்று" page.