பேச்சு:புகழ்பெற்ற இந்தியர்கள்

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

உள்ளே புகழ்பெற்ற இந்தியர்கள் என்று இருப்பது போலவே தலைப்பும் புகழ்பெற்ற இந்தியர்களின் பட்டியல் என்று இருக்கலாமே? மாறலாமா? --செல்வா 22:00, 30 நவம்பர் 2008 (UTC)Reply

தகவற் பிழை

தொகு

இந்தக் கட்டுரையில் பலரது பெயர்கள் தவறாக இடம்பெற்றுள்ளன. அசோகச் சக்கரவர்த்தி, கரிகாற் சோழன், ராஜராஜ சோழன், இளங்கோவடிகள் எனப் பலரது பெயரும் தவறாக இடம் பெற்றுள்ளது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்ற பெயரில் ஒரு நாடு இருக்கவுமில்லை, அவர்கள் தம்மை இந்தியர்களென்று அழைத்துக் கொள்ளவுமில்லை. அவர்கள் தம்மைச் சோழன் என்றோ சேரன் என்றோ பாண்டியன் என்றோ பலவாறு தத்தம் நாடுகளின் பெயர்களால் அழைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் இந்தியர்களல்லர். இன்றைய இந்தியாவின் பகுதிகள் அவர்களின் ஆட்சிப் பகுதிக்குள் அல்லது அவர்கள் வாழ்ந்த நாட்டின் ஆட்சிப் பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம். அதற்காக அவர்களெல்லோரும் இந்தியர்களாகி விட முடியாது. இந்தியா என்பது மிகப் பிந்திய காலத்தில் உருவான ஒரு நாடு. இத்தகையோரில் சிலர் இன்று காணப்படும் பல்வேறு நாடுகளுக்கும் உரித்தாகலாம். எடுத்துக் காட்டாக, அசோகச் சக்கரவர்த்தி புகழ் பெற்ற வங்காளதேசத்தினர் அல்லது பாக்கித்தானியர் அல்லது நேபாளத்தினர் அல்லது பூட்டானியர் போன்ற வரையறைகளுக்குள் வரலாம். அவ்வாறே ராஜராஜ சோழன் புகழ்பெற்ற இலங்கையர் என்பதற்குள்ளும் வரலாம். அவனது மகன் இராசேந்திர சோழன் இந்தோனேசியர் என்பதற்குள்ளும் வரலாம். எனவே இத்தகைய தவறான பயன்பாடுகளைக் களைய வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 02:17, 9 செப்டம்பர் 2015 (UTC)

Return to "புகழ்பெற்ற இந்தியர்கள்" page.