பேச்சு:புச்சியித்தா தெத்துசுயா
Untitled
தொகுதாங்கள் இடும் அகேனம் குறிய்யிட்டினால் நீங்கள் கொட்டுக்கும் பெயரையோ தலைப்பையோ பார்க்க என்னால் முடியவில்லை இது எனது கணணியின் கோளாறா தெரியவில்லை இச்சொல்லை உங்களால் அவதானிக்க முடிகின்றதா.--சக்திவேல் நிரோஜன் 02:54, 26 செப்டெம்பர் 2006 (UTC)
தேடுபொறிகளில் எவ்வாறு அஃகன்னா எடுத்தாளப்படுகின்றது என எனக்குத் தெரியாது. த.வியின் முதற்பக்கத்தில் அகர வரிசையில் தமிழல்லா ஸ, ஹ எல்லாம் உள்ளது, ஆனால் தமிழுக்குச் சிறப்பாக உள்ள ழகர, ஆய்த எழுத்துக்களில் ஆய்த எழுத்து இல்லை. விக்கி வல்லுநர்கள் தான் விளக்கம் தரவேண்டும். இருக்கும் எழுத்துக்களிலும், தமிழ் அகர வரிசைப்படி சொற்கள் அடுக்கப்படுவதில்லை. சுந்தர், ரவி போன்றோர் உதவக்கூடும். நான் வேற்று மொழி ஒலியாகிய Fa, Fi, Fu என்பதை ஃப, ஃபி, ஃபு என்பதற்குப் பதிலாக ஃவ, ஃவி, ஃவு என எழுதுகிறேன். இதுவே பொருத்தமானது என்பது என் கருத்து. Faகரம் வகரத்தின் திரிபே (வகரத்தைப் போல கீழுதடே தொழிற்படுகின்றது. சற்று காற்றொலி கலந்த வகரம் தான் Faகரம் - நாம் தமிழில் ஒலிப்பதற்கு இது போதும்). பகரம் ஈருதடு (மேலுதடு, கீழுதடு இரண்டும்) தொழிற்படும் ஓர் ஒலி. Faகரத்திற்கு பகரத்தைத் திரித்துக் காட்டுதல் (ஃ மூலம்), தவறு. முன்னேற்றக் கருத்துக்களை எடுத்தாளவேண்டும் என்பது என் அவா. --C.R.Selvakumar 04:03, 26 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
நிரோ, சொல்லின் முதலில் ஆய்த எழுத்து வந்தால் சில கணினிகள், உலாவிகளில் சரியாக காட்டாது (என் கணினியில் நன்றாகத் தான் தெரிகிறது!). எனவே இது உங்கள் கணினிக் கோளாறு தான். இதை சரிசெய்வதற்கான உதவிக் குறிப்பு ஏதும் இணையத்தில் இருந்தால், தருகிறேன். என் உலாவி IE 7, இயங்கு தளம் windows xp. செல்வா, fa ஓசைக்கு ஃவ பயன்படுத்தலாம் என்பது ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவில் ஏற்கனவே அலசி ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த மாற்றத்தில் பெரும்பாலானோருக்கு உடன்பாடே. எனவே, இவ்விவாதத்தை திரும்பத் தொடங்க வேண்டாம் :) நிரோ, புதிதாக இணைந்திருப்பதாலும், அவரது கணினியில் கோளாறு இருக்கக்கூடும் என்பதாலும், இந்த கேள்வியை எழுப்ப நேர்ந்திருக்கலாம். பிறகு, தமிழ் விக்கிபீடியா அகரவரிசைப்பட்டியலில் எல்லா தமிழ் எழுத்து தொடக்கங்களும் பட்டியிலிடப்படும். இது தானியக்க முறை. நிர்வாகிகள் எதையும் நீக்க வில்லை, நீக்கவும் முடியாது. தற்போது, ழ எனத் தொடங்கும் கட்டுரைகள் ஏதும் தமிழ் விக்கிபீடியாவில் இல்லை. இருந்தால் கண்டிப்பாக அகர வரிசைப் பட்டியலில் வரும். ஆனால், ஆய்த எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள் அகர வரிசைப்பட்டியலில் உள்ளனவே (பார்க்க [1]). முதற்பக்க அகரவரிசை இணைப்புகளில் சில எழுத்துக்கள் இல்லாமல் இருப்பது எளிய விதயம். அதிகமாக கட்டுரை தொடங்காத ழ, ஃ போன்ற எழுத்துக்களுக்கு இணைப்பு தரப்படவில்லை. இணைப்பு தரப்படவில்லையே தவிர அவ்வெழுத்துக்களை அகர வரிசை தேடல் பட்டியலில் இட்டுத் தேடினால், பட்டியலில் உள்ளது சிக்கும். அவ்வளவு தான். இது பயனர்களுக்கு குழப்பம் தரும் போல் உள்ளது. எல்லா எழுத்துக்களுக்கான இணைப்பையும் விரைவில் தருகிறேன்--ரவி 05:21, 26 செப்டெம்பர் 2006 (UTC)
ரவி, தகவலுக்கு நன்றி. --C.R.Selvakumar 14:25, 26 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
- இப்பொழுது தலைப்பு ஃவு என்னும் எழுத்துக்கூட்டல் இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது. இதுவே இயல்பாகவும் தென்படுகின்றது.--செல்வா (பேச்சு) 15:28, 11 சூலை 2012 (UTC)