பேச்சு:புணர்ச்சி (இலக்கணம்)
சந்தி சமசுகிருத சொல்லா? ஆதாரத்துடன் சேக்கலாம். ஆனால் அடைப்புக்குறிக்குள் இட தேவை இல்லை என்று நினைக்கிறேன். --Natkeeran 02:36, 18 டிசம்பர் 2008 (UTC)
- புணர்ச்சி என்ற பொருளுடைய சமசுகிருதச் சொல் சந்தி என்று நினைக்கிறேன். தொல்காப்பியத்தில் புணரியல் என்ற தலைப்பில் ஒரு இயல் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 03:31, 18 டிசம்பர் 2008 (UTC)
சந்தி என்பது ஒரு தமிழ்ச்சொல் தான்.
- வினைச்சொல்: அவனை சந்தி, அவனை சந்தித்தேன்.
- தொழிற்பெயர்: சந்தித்தல்
- பெயர்ச்சொல்: இரண்டு பாதைகள் சந்திக்கும் ஒரு இடம் சந்தி,
- இரண்டு பேர் சந்தித்துக்கொண்டால் அந்த நிகவுக்கு பெயர்: சந்திப்பு
- மூன்று பாதைகள் சந்திக்கும் ஒரு இடம் முச்சந்தி
- நான்கு பாதைகள் சந்திக்கும் ஒரு இடம் நாற்சந்தி
- இலங்கை, கொழும்பில் இருக்கும் ஒரு சந்தி "ஐந்துவிளக்குச் சந்தி"> "ஐந்துலாம்புச் சந்தி".
- சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்படாத சொற்கள் தமிழில் உள்ளவை ஏராளம். சங்க இலக்கியங்களில் இல்லாத சொற்களை எல்லாம் தமிழில்லை என்பது முறையன்று. சங்க இலக்கியங்கள் அகரமுதலிகள் அன்று.
- சங்கதச் சொற்கள் என்று கருதிய பலச்சொற்களின் வேர் பாகதம், பாரசீகம் போன்ற ஆரிய மொழிக்குடும்பச் சொற்கள் வழி சங்கதம் வந்தவைகளாக உள்ளன. ஒரு சொல் சங்கதம் என்பவர் அதற்கான வேர்ச்சொல்லை ஆரிய மொழிக்குடும்ப மொழிகளில் இருந்தோ அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் இருந்தோ காட்ட வேண்டும். குறைந்தது சங்கதத்தின் மூல நூல்களான வேதங்களில் இருந்தாவது காட்ட வேண்டும். குறிப்பு: டேவிட் சுல்மான் எனும் யூத மொழியாய்வாளர் 700 மேலான சங்கதச் சொற்கள் தமிழின் மூலத்தைக் கொண்டவை என இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். பார்க்க: https://www.amazon.com/Tamil-Biography-David-Shulman/dp/0674059921 --Thennakoan (பேச்சு) 22:37, 25 ஏப்ரல் 2022 (UTC)
Start a discussion about புணர்ச்சி (இலக்கணம்)
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve புணர்ச்சி (இலக்கணம்).