பேச்சு:புதன் (கோள்)
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜூலை 29, 2015 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
மிக அரியதொரு காட்சி! அனைவரும் கண்டுகளிப்பீர்!!
தொகுஅனைவருக்கும்! இந்த வாரமும் அடுத்த வாரமும் ( மார்ச்சு 2011 மூன்றாவது நான்காவது வியாழக்கிழமை உடைய வாரங்கள்) மாலையில் 6 1/2 முதல் 7 1/2 வரை புதனை வெறுங்கண்ணால் காண முடியும் ( புவியின் வட அரைக்கோளத்திலுள்ள பகுதிகளிலிருந்து). மேற்கு தொடுவானத்தில் இரு விண்மீன்கள் (உண்மையில் கோள்கள்) ஒன்றன் பக்கத்தில் ஒன்று மேலும் கீழுமாகத் ( அவற்றைக் கற்பனையில் இணைத்தால் ஒரு சாய்கோடு கிடைக்கும்) தென்படும். கீழுள்ளது வியாழன்; சற்று மேலே வடக்கு நோக்கி இருப்பது புதன். புதனைக் காண்பது என்பது மிகவும் அரிய நிகழ்வு. ஆனானப்பட்ட கெப்ளரே புதனைப் பார்த்ததில்லையாம்! அதனால் தான், நம் பழமொழி கூட பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுகிறது.