பேச்சு:புனித மரியா பேராலயம்

புனித மரியா பேராலயம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பாராட்டுகள்

தொகு
  • மிக அருமையாக எழுதப்பட்ட கட்டுரை! ஏறத்தாழ ஒரு சிறு பிழையுமின்றி, ஆற்றொழுக்கான நடையில் சுவைபட எழுதியுள்ளீர்கள் பவுல்!! பாராட்டுகள்! இரண்டாவது உரை தி. முடிந்தது.
  • Sixtus என்பது போன்ற தமிழர்களுக்குச் சிக்கலான பெயர்களை நீங்கள் பிறவிடங்களில் தமிழ்ப்படுத்தி வழங்குவது போல சித்தூசர் அல்லது சிக்தூசர் என்பது போல வழங்குவதில்லையா?
  • உங்கள் குவிமாடக் கோவில் முதலிய கலைச்சொல்லாட்சிகள் மிக அருமை ஐயா! இலத்தீனில் விதிகள் பின்பற்றுவதுபோல் இன்னும் சில பெயர்களை தமிழ்வழி எளிமைப்படுத்தினால் நன்றாகவும், இயல்பாகவும், பொதுமையானதாகவும் இருக்கும் என்பது என் கருத்து.

--செல்வா 19:58, 29 சனவரி 2012 (UTC)Reply

  • செல்வா, பாராட்டுக்கு நன்றி! கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசித்து கிரந்தம் மாற்றியுள்ளேன். சிக்ஸ்துஸ் என்பதை சிக்ஸ்துசு என மாற்றுகிறேன். திருத்தந்தையர்களின் பெயர்கள் பலவும் கத்தோலிக்க வழிபாட்டிலும் அதோடு தொடர்புடைய நாள்காட்டியிலும் நேரடி ஒலிபெயர்ப்பாக (கிரந்த எழுத்துகளோடு) உள்ளமையால் அவற்றைத் தன்விருப்பாக மாற்றிடவேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால், காண்ஸ்டண்டைன், எஸ்குயிலின் போன்ற பொதுப்பெயர்களைக் கிரந்தம் தவிர்த்து எழுதமுடியும், அவ்வாறே செய்துமுள்ளேன் (காண்சுடண்டைன், எசுக்குயிலின்). வேறு குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். திருத்திவிடலாம். வாழ்த்து!--பவுல்-Paul 00:19, 30 சனவரி 2012 (UTC)Reply
மிக்க நன்றி பவுல். நான் மேலே கூறிய கருத்து இப்பொழுது மாற்றுவதற்காகச் சொல்லவில்லை ஐயா. மாற்றங்கள் நன்றாக உள்ளன. நீங்கள் நன்கு அறிவீர்கள் என்றாலும், பின்னர் இது பற்றிப் பேசுவோம். படிமத்தின் உரிமத்தைச் சரிபார்த்தவுடன் பதிவெண் இடலாம். நானும் சரிபார்க்கின்றேன். --செல்வா 01:40, 30 சனவரி 2012 (UTC)Reply
    • படிமங்களைச் சரிபார்த்துவிட்டேன். எல்லாம் தக்க உரிமங்கள் கொண்டுள்ளன. பதிவெண் இடலாம். நீங்களே இடலாம். நான் இடவேண்டும் எனில் சொல்லுங்கள் இட்டுவிடுகின்றேன். --செல்வா 02:04, 30 சனவரி 2012 (UTC)Reply
  • திருத்தங்களுக்கு நன்றி, செல்வா. பதிவெண்ணை நீங்களே இடுங்கள். விக்கி வழக்கத்திற்கு ஏற்ப, "ஐயா" விளிப்புரையைத் தவிர்க்கலாமே. :) --பவுல்-Paul 02:37, 30 சனவரி 2012 (UTC)Reply
Return to "புனித மரியா பேராலயம்" page.