பேச்சு:புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை
ம் ஆண்டு 1ல் இருந்து கடைசி வரையும் நான் படிச்சபள்ளி என்ன சோகம் எண்டா இப்பாடசாலையைப்பத்தின தகவல் ஒண்டும் கைவசம் இல்லை எதற்கும் பழைய புத்தக மூட்டைய தோண்டின எதாவது தகவல் கிடக்கலாம் இல்லாட்டி என்ன தகவல் தேவை என பட்டியலிட்டால் எதாவது நியாபகத்தில் கூறுகின்றேன்.--கலாநிதி 17:26, 26 நவம்பர் 2006 (UTC)
நன்றி, நேரம் கிடைக்கும் போது ஆண்டுடன் சுமார் எவ்வளவு மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள், ஆசிரியர் எண்ணிக்கை போன்றவிடயங்களைச் சேர்ப்பது நல்லதென்றே நினைக்கின்றேன். பாடசலை வசதிகளும் உங்களுத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். இதைவிடச் சுலபமான வழி இப்பாடசாலையிலே படிப்பவர்கள் ஆர்வமுடையவர்கள் இக்கட்டுரையை மேமபடுத்தினால் நன்றாக இருக்கும் --Umapathy 17:53, 26 நவம்பர் 2006 (UTC)
[புனித மைக்கேல் பாடசாலை, மட்டக்களப்பு] என்று பெயர் மாற்றலாம். தமிழநாட்டில் ஊருக்கு ஒரு மைக்கேல், ஜேம்ஸ்..பள்ளிகள் இருக்கும்.--Ravidreams 22:21, 26 நவம்பர் 2006 (UTC)
ரவி மாற்றுவதாயின் புனித மிக்கேல் கல்லூரி,மட்டக்களப்பு என்றோ புனித மிக்கேல் தேசியப் பாடசாலை மட்டக்களப்பு என்றோ மாற்றும்படி பரிந்துரைக்கின்றேன்.st.michael's college national school Batticaloa எனும் முழுப்பெயரினாலே இப்பாடசாலை அடையாளப்படுத்தப்படுகின்றது தேசிய பாடசாலை எனும் பதம் ஒர் அந்தஸ்தை பிரதிபலிக்கின்றது,மேலும் தமிழில் மிக்கேல் எனும் சொல்லே பாவனையில் உள்ளது கட்டுரை வளர்தெடுத்தபின் சரியான வழிமாற்றம் செய்யலாம் என எணியுள்ளேன்.--கலாநிதி 16:56, 27 நவம்பர் 2006 (UTC)
நன்றி, கலாநிதி Michael ஐ பிரித்தானியர்கள் பெரும்பாலும் மைக்கேல் என்றவாறே உச்சரிப்பர். நான் இப்படிப் பெயரை உடைய ஓர் பிரித்தானியருடன் வேலைசெய்த அனுபவத்தில் கூறுகின்றேன். மிக்கேல் என்றாலும் சரியே. உங்களின் பழைய பாடாசலையை மிக்கேல் என்றே அறியப்பட்டால் நாமும் அவ்வாறே அழைக்கலாம். தேசியப்பாடசாலை எனபது இலங்கையிலேயே பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றதால் தமிழ்நாட்டுப்பாடசாலைகளுடன் குழப்பத்தை உண்டுபண்ணாது. இது இலங்கையின் பிரபலான பாடசலைகளுள் ஒன்று என்பதால் மட்டக்களப்பைச் சேர்க்கவில்லை. இது எப்போது தேசியப்பாடசாலை ஆனது என்ற விபரத்தைத் தெரிவித்தால் நன்றாக இருக்கும். --Umapathy 17:19, 27 நவம்பர் 2006 (UTC)
தாபகர்
தொகுதாபகர் என்பது ஸ்தாபகர் என்பதன் திரிபு. இணையான தமிழ்ச்சொற்களை ஆளலாம். நிறுவனர் என்பதை ஆளப் பரிந்துரைக்கிறேன். --Sivakumar \பேச்சு 14:17, 3 பெப்ரவரி 2007 (UTC)