புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை

புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை (St. Michael's College National School)[2] மட்டக்களப்பு நகர மத்தியில் 1873 ஆம் ஆண்டில் இயேசு சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட ஆண்கள் பாடசாலையாகும். இதன் நிறுவனர் வண. பிதா. பேர்டினன்ட் பொனெல் ஆவார். இவரைத் தொடர்ந்து பல கத்தோலிக்க கிறித்தவப் பாதிரிமார்களினால் தனியார் பாடசாலையாக நடாத்தப்பட்ட இப்பாடசாலை இலங்கை விடுதலை அடைந்த பின்னர் அரசுடைமையாக்கப்பட்டது. பிறகு அரச பாடசாலையாக, 1AB தர தேசியப் பாடசாலையாக மாற்றமடைந்தது.[3] இப்பாடசாலை மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு (மட்டக்களப்பு நகர்) பகுதியிலுள்ள 41 பாடசாலைகளில் ஒன்றாகும். இது தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பிரிவினையும் தரம் 6 தொடக்கம் 13 வரையான இடைநிலை, மேல் நிலை பிரிவுகளையும் தனித்தனி வளாகங்களில் கொண்ட தேசிய பாடசாலையாகும்.[4]

St. Michael's College National School
புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை
முகவரி
St. Michael's College National School is located in Central Batticaloa
St. Michael's College National School
St. Michael's College National School
மட்டக்களப்பு மத்தியில் அமைவிடம்
அருட்தந்தை வெபர் தெரு
மட்டக்களப்பு, மட்டக்களப்பு மாவட்டம்
கிழக்கு மாகாணம், இலங்கை
அமைவிடம்7°42′43.17″N 81°41′47.43″E / 7.7119917°N 81.6965083°E / 7.7119917; 81.6965083
தகவல்
வகைபொது தேசிய
குறிக்கோள்Quis Ut Deus
(Who is like unto God?)
(கடவுளுக்கு நிகர் யார்?)
சமயச் சார்பு(கள்)கிறித்தவம்
மதப்பிரிவுகத்தோலிக்க திருச்சபை
நிறுவல்1873[1]
நிறுவனர்வண. பிதா பேர்டினன்ட் பொனெல்
நிலை1961 இல் தேசியமாக்கப்பட்டது
பள்ளி மாவட்டம்மட்டக்களப்பு கல்வி வலயம்
ஆணையம்கல்வி அமைச்சு
தரங்கள்1-13
பால்ஆண்கள்
வயது வீச்சு5-19
மொத்த சேர்க்கை3,000+
மொழிஆங்கிலம், தமிழ்
இல்லங்கள்பொனெல், மரியான், மில்லர், கிரவுதர்
சுலோகம்A College second to none
கீதம்Sons of Bless'd St.Michael
புனித மிக்கேலின் புதல்வர் நாம்
விளையாட்டுக்கள்கூடைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், டென்னிசு
Yearbookபாடுமீன்
இணையம்

வரலாறு

தொகு
 
நிறுவனர் வண பிதா பேர்டினன்ட் பொனெல் அடிகளாரை கௌரவித்து வெளியிடப்பட்ட அஞ்சல் முத்திரை[5]

1868 ஆம் ஆண்டு யாழ்ப்பாண ஆயரினால் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் 500.00 ரூபாயுடன் மட்டக்களப்பில் ஆண்கள் பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்க அனுப்பி வைக்கப்பட்டார். புனித மரியாள் ஆங்கிலப் பாடசாலை, புனித மரியாள் வட்டார மொழிப் பாடசாலை, புனித சிசிலியா பெண்கள் ஆங்கிலப் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகள் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் புனித மரியாள் ஆங்கிலப் பாடசாலை புனித மிக்கேல் கல்லூரியாக மாற்றம் பெற்றது. தற்போது உள்ள புளியந்தீவு புனித மரியாள் பேராலய வளவில், பஸ்கால் முதலியாரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிலத்தில் 1873 இல் கட்டட வேலைகள் ஆரம்பமாகியது. ஜோசப் ஆபிரகாம் என்பவரை முதலாவது பாடசாலை அதிபராகக் கொண்டு மூன்று ஆசிரியர்களுடனும் 57 மாணவர்களுடனும் பாடசாலை ஆரம்பமாகியது.

1895 இல் பிரான்சிய இயேசு சபைத் துறவிகளினால் பாடசாலை பொறுப்பேற்கப்பட்டது. வண பிதா பேர்டினன்ட் பொனெல் பாடசாலையின் புதிய கட்டட அமைப்பிலும் உருவாக்கத்திலும் பெரும் பங்காற்றினார். இதற்கான பிரான்சிலிருந்து நிதி உதவியும், மூன்று மரிஸ்ட் சகோதரர்களும் பாடசாலை தேவைக்காக வரவழைக்கப்பட்டனர். அப்போது எஸ். சவேரிராஜா என்பவரின் தலைமையில் சாரணர் அமைப்பு தொடங்கப்பட்டது. வண பிதா பேர்டினண்டினால் மின்பிறப்பாக்கி நிறுவப்பட்டது. இது மட்டக்களப்புக்கு மின்சாரத்தை அறிமுகம் செய்வதில் முன்னோடி முயற்சியாக அமைந்தது.

 
புனித மிக்கேல் கல்லூரி வாளாகத்திலுள்ள நிறுவனரின் சிலை

1909 இல் பழைய மாணவர் சங்கம் அருட்திரு. டி. அராசினால் ஆரம்பிக்கப்பட, முதலாவது தலைவராக அருட்திரு. எஸ். இலாசரஸ் இருந்தார். 1912 இல் இளையோர் கேம்பிரிச் பரீட்சையில் முதலாவது தொகுதி மாணவர்கள் 100% என்ற பெறுபேற்றில் தேரினர். 1915 இல் மக்கலம் மணடபம் திறந்து வைக்கப்பட்டு, இலங்கைத்தீவில் சிறந்த விஞ்ஞான ஆய்வுகூடமாக அங்கிகரிக்கப்பட்டது. இவ் ஆய்வுகூடத்திற்கான பொருட்கள் பல வண பிதா பொனெல் மூலம் கிடைக்கப்பெற்றது.[6]

ஐரோப்பாவிலும், பிரான்சிலும் ஏற்பட்ட போரினைத் தொடர்ந்து பிரான்சிய இயேசு சபையினர் பலர் இறக்கவும், சிறையில் அடைபடவும் நேரிட்டது. இதனால், உரோமில் இருந்த இயேசு சபைத் தலைவர் ஐக்கிய அமெரிக்க நியூ ஒலீன்சிலிருந்த இயேசு சபையினரிடம் உதவி கேட்டு அனுப்பினர். முதலாவது ஐக்கிய அமெரிக்க இயேசு சபை அருட்தந்தை ஜோன் டி. லின்கான் 1933 இல் அனுப்பப்பட்டார். அப்போது அதிபராக இருந்த உள்ளூர் இயேசு சபை அருட்தந்தை எஸ். மரியான் அவரை வரவேற்றார். அடுத்த வருடம் மேலும் இரு அமெரிக்க இயேசு சபையினரான அருட்தந்தையர்கள் ஜே. ஜே. ஓ கொன்னர், ஜே. டபிள்யு. லாங் ஆகியோர் வந்தடைந்தனர். 1935 இல் மேலும் நான்கு இயேசு சபையினர் வந்தனர். அவர்களில் பின்னர் மறைமாவட்டத்தின் ஆயரான அருட்திரு. இக்னேசியஸ் கிளென்னியும் அடங்குவார்.

அருட்திரு. இம்மானுவேல் கிரவுதர் 1937 இல் முதல்வராக நியமிக்கப்பட அருட்திரு. பொனெல் வெறொரு பங்கிற்கு மாற்றலாகினார். அக்காலத்தில் அருட்திரு. பெங்லரும் ஹமில்டனும் கூடைப்பந்தாட்டதை அங்கு பரீட்சித்துப் பார்த்தனர்.

1946 இல் ஆயர் ரொபிசேஸ் மரணமடைய மறைமாவட்டமும் பாடசாலையும் அமெரிக்க இயேசு சபையினரிடம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல இயேசு சபையினர் இலங்கைக்கு வரத்தொடங்கினர். அவர்களில் அருட்தந்தையர்கள் வெபர், மக்நயர், கெனே ஆகியோரும் உள்ளடங்குவர். 1948 இல் அருட்தந்தை சோமர்ஸ் முதல்வராக இருக்க, அருட்தந்தை கிரவுதர் அதிபராக இருந்தார். அடுத்த வருடத்தில் மேலும் நான்கு இயேசு சபையினர் வந்தடைந்தனர். அவர்களில் பின்பு முதல்வர்களான அருட்தந்தை ஜி. எச். ரேவூட், பி. எச். மில்லர் ஆகியோரும் அடங்குவர்.

இக்காலகட்டத்தில் அரசாங்கம் வெளிநாட்டவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்குத் தடை விதித்தது. 1955 இல் அரசாங்கம் புதிய கத்தோலிக்க மறைபரப்புனர்களுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்தது. மிகவும் சொற்பமானோருக்கே நுழைவிசைவு வழங்கப்பட்டது. 17 வருட அதிபர் சேவையில் இருந்து அருட்தந்தை ஓய்வுபெற, கடினத்தின் மத்தியில் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற பின் அருட்தந்தை ரேவூட் அதிபராக்கப்பட்டார்.

அரசாங்கம் தகுதிவாய்ந்த இலங்கை ஆசிரியர்கள் தேசிய மொழிகளைப் கற்பிக்க முடியும் என தீர்மானம் கொண்டு வந்தது. உதவி பெற்ற பாடசாலைகளை பெற்றுக் கொள்ள 1959 இல் அரசாங்கம் முடிவெடுத்தது. இதனால், 1961 இல் பாடசாலை கட்டணம் செலுத்தப்படாத தனியார் பாடசாலையாக செயற்படுத்தப்பட்டது. இதற்கான நிதி உதவியினை பயனாளிகளும், பெற்றோரும், விரும்பிகளும், அதற்கு மேலாக நியூ ஓலீன்சில் இருந்தும் கிடைத்தது. அப்போது அருட்தந்தை மில்லர் முதல்வரானார். 1970 நடுப்பகுதி வரை இது நீடித்தாலும் மூன்றில் ஒரு பகுதி நிதித் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இருந்தது. இதனால் மாற்று வழி இல்லாமல் போகவே அரசாங்கத்திடம் பாடசாலை கையளிக்கப்பட்டது. புனித மிக்கேல் கல்லூரியின் கடைசி முதல்வராக பெப்ருவரி 2, 1970 இல் நியமிக்கப்பட்ட அருட்தந்தை பிரட்ரிக் லியோன் காணப்படுகிறார்.[7]

கூடைப்பந்தாட்டம்

தொகு
 
புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை முன்புறம்

புனித மிக்கேல் கல்லூரி தேசிய அளவில் பல வெற்றிகளைப் பெற்ற பாடசாலையாகும்.[8] இங்கு பணியாற்றிய அமெரிக்க இயேசு சபைத் துறவிகளினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கூடைப்பந்தாட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணி "வெல்லப்பட முடியாத அணி" எனும் அளவிற்கு இத்துறையில் சிறந்து விளங்கியது.[9] பல துறவிகள் கூடைப்பந்தாட்டத்தை வளர்த்தெடுக்க உதவினர். அவர்களில் இயேசு சபைத் துறவிகளான அருட்தந்தை ஹெரல்ட் வெபர், அருட்தந்தை இயூயின் ஜோன் ஹேர்பட் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.[10] அருட்தந்தை ஹெரல்ட் வெபர் மட்டக்களப்பு ஆற்றிய சேவை கெளரவிக்கும் விதத்தில் அரங்கு விளையாட்டு அரங்கு "வெபர் அரங்கு" எனப் பெயரிடப்பட்டுள்ளது.[11]

பாடசாலை கீதம் (ஆங்கிலத்தில்)

தொகு

கூட்டுக் கீதம் Sons of Blessed St. Michael, uplift our flag on high.
Our shouts of joy and praise pour forth and rend the sky,
Let College walls re- echo on this our Patron’s day
Successes attend the Teachers and College dear we pray.

Comrades, brothers in the battle
Of an arduous strife and long,
Join we heart and hand, while here we
Land our College life in song.

Till the day our Alma Mater
Crowns each victor in the fight
Then to wear our laurels proudly
And May God defend the right.

A.R.P.Leetham[12]

புகழ் பெற்ற பழைய மாணவர்கள்

தொகு

இப்பாடசாலையானது மட்டக்களப்பில் பல துறைசார் வல்லுனர்களை உருவாக்கியுள்ளது. அவர்களின் குறிப்பிடத்தக்க சிலர் பின்வருமாறு:

உசாத்துணை

தொகு
  1. [1] பரணிடப்பட்டது 2013-01-05 at Archive.today Profile
  2. "List of national schools" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2022-09-12.
  3. "School Links – Manmunai North". Archived from the original on 2013-12-13. பார்க்கப்பட்ட நாள் 2012-08-31.
  4. "ZONAL PROFILE". Archived from the original on 2013-12-13. பார்க்கப்பட்ட நாள் 2012-08-31.
  5. "Father Ferdinand Bonnel, SJ (1869–1945) Founder of St. Michael's College". Manresa: Spirituality & Retreat Center. பார்க்கப்பட்ட நாள் 6 April 2015.
  6. "History of St.Michael's College, Batticaloa". பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
  7. "History of St.Michael's College, Batticaloa". பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
  8. "Rev Fr. Eugene Herbert's loss should result in breaking down societal imbalances". பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
  9. LTD, Lankacom PVT. "The Island" (PDF). www.island.lk. Archived from the original (PDF) on 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
  10. "Dailymirror.lk ::: Breaking News". sports.dailymirror.lk. Archived from the original on 2012-09-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-30.
  11. LTD, Lankacom PVT. "The Island". www.island.lk. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-30.
  12. "College Anthem – Past Pupils' Association of St.Michael's College, Batticaloa". www.battistmichaels.com.

வெளி இணைப்புக்கள்

தொகு