பேச்சு:புவியிடங்காட்டி
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
--Natkeeran 14:59, 28 ஜூன் 2006 (UTC)
செயற்கைக்கோள்
தொகுஉமாபதி, நிங்கள் செய்மதி என்னும் சொல்லை செயற்கைக்கோளுக்குப் பயன் படுத்துகிறீர்கள் என்று எண்ணுகிறேன். செய்மதி என்னும் பொழுது செய்கின்ற மதி, செய்த மதி செய்யும் மதி என்று வினைத்தொகையாக நன்றாகவே பொருள் அமைகின்றது. சுருக்கமாகவும் உள்ளது. மேலும் மதி என்பது நிலாவுக்கு உள்ள மற்றுமொறு நல்ல தமிழ்ச்சொல். மதி > மாதம் என்பது நல்ல தமிழ்ச்சொல் என பாவாணர் தேவநேயர் கூறியது நினைவிருக்கிறது. எனினும் இரு காரணங்களுக்காக செயற்கைக்கோள் என்னும் சொல்லைப் பரிந்துரைக்கிறேன். 1) இச்சொல் மிக நெடுங்காலமாக உள்ள சொல் (1968-1970ல் இருந்தே) 2) இலங்கை வழக்காகிய பெருமதி, அனுமதி (மதி=அறிவு), புத்திமதி போன்ற சொற்களோடு சிறிது குழப்பம் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றேன் (ஏற்படாது என்றே எதிர்பார்க்கிறேன்). ஓரளவுக்கு சீராக தரப்படுத்த வேண்டியிருப்பதால், பிறைக்குறிகளுக்குள்ளாவது செயற்கைக்கோள் என்று குறிக்க வேண்டுகிறேன். செயற்கைமதி என்றால் குழப்பம் சற்று தணியும். கோள் எனில் planet என்று பொருள், எனவே செயற்கைக்கோள் எனில் பொருளும் முழுதும் சரியில்லைதான் (இயற்பியல் என்பது போல வழுவாயிருந்தும் வழக்கூன்றிவிட்டது). Planet is also a satelite of the sun. --C.R.Selvakumar 13:30, 28 ஜூன் 2006 (UTC)செல்வா
புவி இடம் காட்டி ??
தொகு--Natkeeran 21:25, 19 ஆகஸ்ட் 2008 (UTC)
புவி இடம் காட்டி (அல்லது புவியிடங்காட்டி) என்பது சுருக்கமாக நன்றாக இருக்கிறது. மலர்களோடு குழப்பிக் கொள்ளாவிட்டால், பூவிடங்காட்டி என்றும் சொல்லலாம். --ரவி 22:29, 19 ஆகஸ்ட் 2008 (UTC)
பூவிடங்காட்டி வேண்டாம்! மற்ற பயனர் கருத்துக்களையும் அறியலாம். --Natkeeran 00:46, 20 ஆகஸ்ட் 2008 (UTC)
"புவியிடங்காட்டி" மிகவும் பொருத்தமாக ஊள்ளது --கார்த்திக் 13:44, 1 ஜனவரி 2009 (UTC)