கட்டுரைத் தலைப்பை மாற்ற வேண்டுகோள் தொகு

"Great Purge" என்பதைத் தமிழில் "பெரும் கழிவகற்றல்" என்று சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். கழிவு, கழிவிடம் போன்ற பொருள் உள்ளடங்கும் என்பது ஒரு காரணம். மேலும், சிலர் அதை "Great Terror" என்றும் கூறுகிறார்கள். எனவே, "பெரும் துப்புரவாக்கம்" என்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. தலைப்பை மாற்றியதும் சுருக்கமாகவாவது கட்டுரையை உருவாக்க எண்ணியிருக்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 03:53, 26 மே 2012 (UTC)Reply

பவுல், சில நேரங்களில் வரலாற்றில் நிலவிய உணர்ச்சிகளை சித்தரிக்கும் பெயர்களை இடக்கரடக்கல் காரணமாக மாற்றத் தேவையில்லை. துப்புரவாக்கம் என்பது அக்காலத்தில் கொண்டிருந்த வெறுப்பை முழுமையாக கொணரவில்லை. ஆங்கிலத்திலேயே ஏன் Great Cleansing என்று குறிப்பிடவில்லை. தலைப்பை மாற்ற வேண்டியதில்லை என்பதே எனது கருத்து.--மணியன் (பேச்சு) 15:19, 29 மே 2012 (UTC)Reply

மணியன், இத்தலைப்பை மாற்றவேண்டாம் என்று நீங்கள் கூறுவதில் உண்மை உளது என்பதை நான் ஏற்கிறேன். ஆனால், அரசியல் எதிரிகளை, கருத்து மாறுபாடு தெரிவிப்பவர்களை "கழிவு" (dirt, garbage, excrement) என்று ஸ்டாலின் (அல்லது இட்லர்) கருதியிருந்தாலும் அது தவறுதான். மேலும் purge என்னும் சொல் "தூய்மை ஆக்கல்" என்னும் கருத்துடைய மூலத்திலிருந்து பிறப்பதால் "துப்புரவு" சரியாக இருக்கும் என்று கருதினேன். அவ்வளவுதான்! நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 18:35, 29 மே 2012 (UTC)Reply

பவுல், உங்களது எண்ணத்தை நான் முன்னமே யூகித்திருந்தேன். இருப்பினும் ஸ்டாலின் கருதியது தவறு என்பதை பதிவதும் வரலாற்றில் முக்கியமல்லவா ? உங்களது தலைப்பு முதன்மையாகவும் கழிவகற்றல் என்ற சொல் வழிமாற்றாகவும் இருக்கட்டும். நன்றி!--மணியன் (பேச்சு) 19:08, 29 மே 2012 (UTC)Reply
Return to "பெரும் கழிவகற்றல்" page.