பேச்சு:பேரன்

//தந்தையின் அல்லது தாயின் தந்தையைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகவும் இது பயன்படுவதுண்டு.// - இதை நான் இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். தமிழகத்தில் இப்பழக்கம் இல்லையென்றே நினைக்கிறேன். இலங்கையில் இது பயன்பாட்டில் உள்ளதா?--சிவக்குமார் \பேச்சு 05:29, 7 செப்டெம்பர் 2009 (UTC)Reply

யாழ்ப்பாணத்தில் இந்த வழக்கு உண்டு. இலங்கையின் மற்றப் பகுதிகளில் இவ்வழக்கு உள்ளதா என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டிலும் இவ்வழக்கம் இருக்கிறது என்றுதான் நினைத்தேன். இதுபற்றி அறிந்த பிற பயனர்கள் இதனைத் தெளிவாக்கினால் நல்லது. கட்டுரையிலும் உரிய திருத்தம் செய்யலாம். மயூரநாதன் 18:37, 7 செப்டெம்பர் 2009 (UTC)Reply
மதராசுப் பல்கலைக் கழக அகராதி பின்வருமாறு பொருள் தருகிறது:
பேரன் pēraṉ
, n. < பேர்³. 1. Grandson, as bearing the grandfather's name; மகன் அல்லது மகளின் புத்திரன். 2. Grandfather; பாட்டன். உங்கள் பேரனார்தந் தேசுடை யெழுத்தே யாகில் (பெரியபு. தடுத்தாட். 60).
இங்கே Grandson, Grandfather என்னும் இரு பொருள்களும் இருப்பதையும், பெரிய புராணத்திலேயே இச்சொல் Grandfather என்னும் பொருளில் பயன்பட்டிருப்பதையும் கவனிக்கவும்.
மயூரநாதன் 18:48, 7 செப்டெம்பர் 2009 (UTC)Reply
விரிவான விளக்கத்திற்கு நன்றி மயூரநாதன்.--சிவக்குமார் \பேச்சு 18:58, 7 செப்டெம்பர் 2009 (UTC)Reply

தமிழ்நாட்டிலும் தாத்தா, பாட்டி பெயரை பேரக் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் உண்டு. சில சாதிகளில் இவ்வழக்கம் கூடுதலாக உண்டு. (மூத்தவர்கள் பெயரை வைத்துக் கூப்பிட இயலாததால் கூப்பிடுவதற்கு என்று இன்னொரு வீட்டுப் பெயரும் கூட வைத்துக் கொள்வார்கள்.) கால மாற்றத்தில் இந்த வழக்கம் மிகவும் குறைந்து வருகிறது--ரவி 05:51, 8 செப்டெம்பர் 2009 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேரன்&oldid=425967" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பேரன்" page.