பேச்சு:போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்

செறிபொருள் என்பதை விட செறிநிலை, இறுகுநிலை என்னும் சொற்கள் பொருந்தலாம் என நினைக்கிறேன். condensed matter என்பதற்கு செறிபொருள் என்பது பொருந்தும் என நினைக்கிறேன். --செல்வா 20:24, 3 ஜூன் 2009 (UTC)

குவாண்ட்டம் = சத்திச்சொட்டு [1]--கார்த்திக் 20:34, 3 ஜூன் 2009 (UTC)

திண்மம், திரவம், வளிமம் என்பது போல செறிமம் என்று இருக்கலாம். Condensate என்பது பொருளின் ஒரு நிலையைக் குறிப்பது உண்மை. எனினும் Condensed State என்றால்தான் செறி நிலை என்பது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். செறிபொருள் என்ற சொல் விக்சனரியில் பார்த்தது. விக்சனரியிலும் நிறைய சொற்கள் ஐயத்துக்கரியவையாக உள்ளன -- பரிதிமதி

/* Quantum = சத்திச்சொட்டு? */

தொகு
  • தமிழ்நாட்டுப் பாடநூல்களில் குவாண்டம் என்றே எழுதப்படுகிறது. இலங்கையில் சத்திச்சொட்டு என்ற சொல் புழக்கத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.
  • Quantum இன் discrete packet என்ற கருத்துக்காகவே சொட்டு என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது என்று கருதுகிறேன். ஆனால் சத்தி என்ற பதம் சக்தி(energy)யைக் குறிப்பதாயின் அதைவிட சிறந்த பதமான ஆற்றல் உள்ளது. அதாவது ஆற்றல் சொட்டு என்ற சொல் சத்திச்சொட்டை விட உகந்தது.
  • நிற்க! Quantum என்ற சொல் ஆற்றல் packet -களுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை; கோண உந்தம், மின்னூட்டம், அலைநீளம் ... ஆகிய அளவுகளுக்கும் quantum உண்டு.
  • மாறாக, மட்டு என்ற சொல் ஒரு குறிப்பிட்ட அளவு (fixed amount) என்ற பொருளைக் குறிக்கின்ற ஒரு சொல். ஆற்றலோ, கோண உந்தமோ எதுவாகிலும் ஒரு குறிப்பிட்ட அளவின் முழு மடங்காக இருப்பது தான் Quantum இயற்பியலின் தனித்தன்மை. மட்டு என்ற சொல்லை வைத்து மட்டுமம் அல்லது மட்டுவம் என்று எழுதலாமே? மட்டும [அ] மட்டுவ இயற்பியல் = Quantum (fixed amount) Physics. சரிதானே?
  • அல்லது குவாண்டம் என்றே விட்டு விடலாம். மீசான், குவார்க்கு, எக்ஸ்-கதிர் என்றெல்லாம் பயன்படுத்துகிறோம் அல்லவா? -- பரிதிமதி 17:20 4 சூன் 2009

குவாண்டம் என்பதை சத்திசொட்டு என்பது சரியில்லை. குவாண்டம் (kuvaandam என ஒலிக்க வேண்டும்) என்றே எழுதலாம். kuvaantum என்று ஒலிக்க வேண்டின் குவாண்ட்டம் என்று எழுதவேண்டும். நான் சில இடங்களில் குவிண்டம் என்று எழுதியுள்ளேன் (சரியென்று கூறவில்லை. ஆற்றல் குவிந்த துணுக்கு என்னும் முதற்பொருளை ஒருவாறு சுட்டுவதால் குவிண்டம் என்றேன்). தமிழ்ச்சொல் வேண்டும் எனில் எண்நுண்கம் (எண்ணுண்க இயல்பியல்) எனலாம் அல்லது எண்ணிமநுண்கம் (எண்ணிமநுண்க இயல்பியல்) எனலாம். அல்லது எணினிநுண்கம் (எணினிநுண்கவியல்) எனலாம். குவாண்டம் என்றோ குவாண்ட்டம் என்றோ கூறுவதே போதும். பரிதிமதி, "முழு" மடங்காக இருக்கவேண்டும் என்பதில்லை, 1/2, 1/3 ஆகக்கூட சில உண்டு, ஆனாலும் அவற்றின் முழுமடங்குகளாக இருப்பது இயல்பு. பொதுவாக தொடர்ந்து மாறாமால குறிப்பிட்ட படிநிலைகளில் அல்லது விட்டுவிட்டு மாறும் இயல்புடையதாக உள்ளது. எனவே நுண்எணினியம் (very minute digitalism (or discretism) எனலாம். இப்படி ஒரு சொல் ஆங்கிலத்தில் உள்ளதா எனறு அறியேன்)--செல்வா 18:14, 4 ஜூன் 2009 (UTC)

சொட்டாக்கம், சொட்டு என்பது discrete என்பதைக் குறிக்க பரந்த பயன்பாட்டில் இருக்கிறது. --Natkeeran 23:54, 4 ஜூன் 2009 (UTC)
Return to "போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்" page.