பேச்சு:போபொசு (துணைக்கோள்)

போபொசு (துணைக்கோள்) என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


விக்கிக் குறுங்கட்டுரைகள் என்றால் குறைந்தது மூன்றுவரிகளைத்தான் கொண்டுள்ளது என அர்த்தம், இக் கட்டுரை (4,158 பைட்டுகள்) கொண்டுள்ளது இதற்கு speed delete எனும் வார்ப்புரு இடப்பட்டுள்ளது. இதை வார்ப்புரு இட்டவரே நீக்கானால் நன்று என நினைக்கிறேன். எல்லாவிட்டால் மேலும் இக்கட்டுரையை விரிவாக்கினால் தான் speed delete வார்ப்புரு நீக்கப்படுமா உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். இப்படிப் பல கட்டுரைகள் இவ்வாறே உள்ளன. --[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:44, 3 சனவரி 2014 (UTC)Reply


யாழ்ஸ்ரீ நீங்கள் விரிவாக்கினால் நீங்களே நீக்கலாம். //(4,158 பைட்டுகள்)// வார்ப்புரு இடும்போது அவ்வளவு இருந்ததா? இல்லை, 12## பைட்டுகள் தான் இருந்தது. //இதை வார்ப்புரு இட்டவரே நீக்கானால் நன்று என நினைக்கிறேன்...// தம்பி இவ்வாறு கூறுவது தங்கள் கட்டுரைக்கு அவ்வாறு வார்ப்புரு இட்டவரை குறை கூறுதல் அல்லது பழிவாங்குதல் போன்ற கருத்தைத் தோற்று விக்கிறது. தங்களது கட்டுரை சிறியதாக இருந்ததால் அவர் அவ்வாறு இட்டிருப்பார். அவ்வளவுதான். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:06, 3 சனவரி 2014 (UTC)Reply

ஆதவன் அண்ணா, உங்களுக்கு எப்படி தோன்றினாலும் நான் பழிவாங்கும், அல்லது குறை கூறும் நோக்கில் கூறவில்லை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் நினைத்தது என்னவெனில் அன்ரன் அவர்களே நீக்கினால் நன்றாய் இருக்கும் என அதாவது எந்த பிரச்சனையோ இடையூறோ சிக்கல்களோ இட்டவரே நிக்கினால் இருக்காது என. நான் நீக்கியிருந்தால் எதாவது ஒரு செய்தி என் பேச்சுப்பக்கத்தில் அன்ரன், கனக்ஸ், அஸ்வின், அல்லது நீங்களோ இட்டுவிடுவீர்கள், ஏன் எனக்கு வீண் வம்பு என்றே அவ்வாறு கூறினேன். ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள், நீங்களோ அனுபவசாலி நானோ விக்கிக்கு இளவல் எனவே எனக்கு விக்கியில் பெரிதாக அனுபவமில்லை, அதனால் தான் சற்று இடங்களில் என்க்குத் தெரியாமலே நான் சில தவறுகளை ஏற்படுத்துகிறேன்.--[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:50, 3 சனவரி 2014 (UTC)Reply

தவறாகப்புரிந்து கொண்டேன் தம்பி. பொறுத்தருளவும். //ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்// விக்கியில் மன்னிப்பென்ற வார்த்தையை கையில் எடுக்கக்கூடாது. நீங்கள் ஆண்டனின் பேச்சுப்பக்கத்தில் //மிரட்டல்// என கூறியதாலேயே எனக்குத் தோன்றியது.//இக்கட்டுரையின் உள்ளடக்கம் போதாது. 29-திசம்பர்-2013 இல் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும். உள்ளடக்கத்தை சேர்ப்போர் இவ்வார்ப்புருவை நீக்கிவிடலாம்// இன்னும் சிறு உள்ளடக்கத்தைச் சேர்த்துவிட்டு நீங்களே நீக்கலாம். //ஏதேனும் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள், நீங்களோ அனுபவசாலி நானோ விக்கிக்கு இளவல் எனவே எனக்கு விக்கியில் பெரிதாக அனுபவமில்லை, அதனால் தான் சற்று இடங்களில் என்க்குத் தெரியாமலே நான் சில தவறுகளை ஏற்படுத்துகிறேன்.// ஒரு தவறுகளும் இல்லை. அனைத்தும் திருத்தங்களே!. //நான் நீக்கியிருந்தால் எதாவது ஒரு செய்தி என் பேச்சுப்பக்கத்தில் அன்ரன், கனக்ஸ், அஸ்வின், அல்லது நீங்களோ இட்டுவிடுவீர்கள்// அனைத்தும் தகவல்களே, இவை உங்களை நிச்சயம் மேலே உயர்த்தும். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 03:56, 4 சனவரி 2014 (UTC)Reply

நன்றி அண்ணா --[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:07, 4 சனவரி 2014 (UTC)Reply

Return to "போபொசு (துணைக்கோள்)" page.