பேச்சு:மணி விழா
யார் இந்த முத்துசாமி பிள்ளை -கமலம் தம்பதியினர். மணிவிழா கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படத்தை இணைத்தால் நன்றாக இருக்கும். அதைவிடுத்து யாரென்றே அறியாதவர்களின் புகைப்படம் என்றால் பெயர் எதற்கு.
- பொதுவெளியில் இருக்கும் படங்கள் இருந்தால் இணைக்கலாம். பதிப்புரிமை இருக்கும் படங்களையெல்லாம் இணைக்க முடியாது. படம் என்பது தலைப்பினை விளக்க (இங்கு மணி விழா என்பது தான் கட்டுரை விஷயம். அதனை விளக்க அடையாளாம் தெரியாதவராக இருந்தால் என்ன சினிமா நட்சத்திரமாக இருந்தால் என்ன?. தமிழ்நாட்டுல எதுக்குத் தான் பிரபலத்த கேக்கறதுன்னு இல்லையா?.) இது ஒரு பயனர் அவரது குடும்ப விழா புகைப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.--சோடாபாட்டில்உரையாடுக 16:36, 30 சனவரி 2011 (UTC)
முத்துசாமி பிள்ளை - கமலம் தம்பதியினர் என்ற பெயர் இங்கு தேவையானாதா என்பதே என் வினா. தமிழ் விக்சனரியில் உள்ள கட்டுரை இது. http://ta.wiktionary.org/wiki/தம்பதி. இங்கு குறப்பிட்டுள்ளது போல செய்யலாமே என்றேன். அடுத்து பிரபலங்களின் புகைப்படம் கேட்டதற்கு, அறிந்தவர்களின் முகம் என்பதால் இந்தப் பெயரிடுதல் குறித்தான கேள்விக்கு இடமின்றி போகும் அதற்குதான். இருப்பினும் வெறும் கருத்தினை மட்டும்தான் பதிவு செய்திருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
அடுத்து, தினமலரில் திருக்கடையூர் கோவிலைப் பற்றிய குறிப்புகளில் "ஷஷ்டியப்த பூர்த்தி" க்கும், உக்ர ரத சாந்தி இரண்டுக்கும் இடைப்பட்ட வேறுபாடு சொல்லப்பட்டிருக்கிறது. அருள் கூர்ந்து அதை கவணிக்கவும், நன்றி.