பேச்சு:மத்துகமை பிரதேச செயலாளர் பிரிவு
தமிழ் இலக்கண விதிப்படி பிரதேசச் செயலாளர் என்பதே சரி. பிரதேச என்பதில் கடைசி எழுத்து ச. செயலாளர் என்பதிலுள்ள முதலெழுத்து செ. இரண்டு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆகவே புணர்ச்சி விதியின்படி ச் இடையில் வரவேண்டும். --UKSharma3 உரையாடல் 11:45, 7 சூலை 2019 (UTC)
ஆங்கிலத்தில் Division Secretary என்று சொல்வதில்லை. Divisional Secretary என்று தான் சொல்வார்கள். மத்துகமை பிரதேச செயலர் என்றால் அவர் மத்துகமை என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்று பொருள் படும். மத்துகமைப் பிரதேசச் செயலாளர் என்றால் தான் அவர் மத்துகமைப் பிரதேசத்திற்குரிய செயலாளர் என்று பொருள். --UKSharma3 உரையாடல் 11:55, 7 சூலை 2019 (UTC)
- பிரதேச செயலாளர் என்றுதான் இலங்கையில் பெரும்பாலான இடங்களில் எழுதப்படுகிறது. அதிகாரபூர்வமான சில இணையதளங்களிலும் அவ்வாறே எழுதப்படுகிறது. அது புணர்ச்சி விதிகளுக்கும் அடங்கும் என்றே கருதுகிறேன்.--Kanags \உரையாடுக 13:00, 7 சூலை 2019 (UTC)
- @Kanags:--நீங்கள் சொல்வது சரி Kanags. பெரும்பாலான ஊடங்களிலும் பெயர்ப்பலகைகளிலும் 'பிரதேச செயலாளர்' என்று எழுதப்படுவதைக் காணலாம். அதனால் தான் 'பிரதேசச் செயலாளர்' என்று எழுதுவதை பிழை என்று நினைக்கிறேன். அதனால் நான் தலைப்புகளுக்கு மாற்றங்களைச் செய்கிறேன். நன்றி!--Vp1994 (பேச்சு) 15:19, 7 சூலை 2019 (UTC)
- @Vp1994: இது எந்த புணர்ச்சி விதியின் கீழ் உள்வாங்கப்படுகிறது? @Neechalkaran: --AntanO (பேச்சு) 15:23, 7 சூலை 2019 (UTC)
- @AntanO:--எனக்குத் தெரியாது. ஆனால் எது மிகக் கூடுதலாக நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறதோ அதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். உதாரணமாக, 'சங்க காலம்', 'கால கட்டம்', 'சர்வதேச சமூகம்' என்று ஒற்று மிகாமல் எழுதுவது வழக்கமாகும். அவை போன்று தான் 'பிரதேச சபை', 'பிரதேச செயலாளர்' என்று எழுதுவது வழக்கமாகும் என்று நினைக்கிறேன். அதே வேளையில், இவ்வாறான சொற்களை உச்சரித்துப் பார்த்தால் ஒற்று மிகாமல் அமையும் என்று நான் நினைக்கிறேன். ஒற்று மிகுந்து எழுதப்படுவது மிகக் குறைவாகும்.--Vp1994 (பேச்சு) 16:26, 7 சூலை 2019 (UTC)
- பேச்சுப் பக்கத்தில் கருத்திட்டுள்ளேன். தகுந்த காரணமின்றி மாற்றம் செய்ய வேண்டாம் அல்லது விக்கிச்சமூக ஒப்புதல் பெற்று மாற்றவும். நன்றி. --AntanO (பேச்சு) 17:51, 7 சூலை 2019 (UTC)
- @Vp1994: "உச்சரித்துப் பார்த்தால் ஒற்று மிகாமல் அமையும்" - பேச்சு வழக்கு இடத்துக்கு இடம்மாறும். எழுத்துத் தமிழில் இலக்கண முறைப்படி எழுதவேண்டும் என்பதே என் கருத்து. இங்கே தமிழகத்தில் 'பத்திரிக்கை' என்று சிலர் எழுதுவார்கள். ஆனால் பத்திரிகை என்பதே சரி. பேச்சு வழக்கில் பத்திரிக்கை என்று சொல்வதால் பலர் எழுதும்போதும் பத்திரிக்கை என்றே எழுதிவிடுகின்றனர். (ஆனால் இலங்கையில் பத்திரிகை என்றே சொல்வார்கள்.) மேலும் மத்துகமைப் பிரதேச என்றே எழுத வேண்டும். பேச்சு வழக்கில் ப் அழுத்தம் பெறாது. இப்போது பல ஊடகங்கள் ஆங்கில நடைத் தமிழையே பயன்படுத்துகின்றன. தமிழ் விக்கியிலும் அவ்வாறே எழுதப்படுவதை நான் பார்க்கிறேன்.
- @Kanags: பெரும்பாலான இடங்களில் எழுதப்படுவது போல எல்லா சொற்களும் தமிழ் விக்கியில் எழுதப்படுவதில்லை. இங்கே சில விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. நீங்கள் ஆத்திரேலியா என்று எழுதுகிறீர்கள். ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு எழுதுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டுகிறேன். இலங்கையில் பல இடங்களில் பெயர்ப் பலகைகளில் தவறுகள் இருப்பது நீங்கள் அறியாததல்ல. 29 ஆண்டுகளுக்கு முன் உதயன் நாளிதழில் நான் பணியாற்றிய காலத்தில் பிரதேசச் செயலாளர், பிரதேசச் செயலகம் என்றே எழுதினோம்.
- AntanO சுட்டிக்காட்டிய இணைய பக்கங்களில் பிரதேசச் செயலாளர் என்றே எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அதில் ஒன்று பிரபலமான நாளிதழ், இன்னொன்று அரச தகவல் திணைக்களத்தின் வெளியீடு. --UK
Sharma3 உரையாடல் 01:56, 8 சூலை 2019 (UTC)
- @Uksharma3: நீங்கள் "மத்துகமை பிரதேச செயலர் என்றால் அவர் மத்துகமை என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்று பொருள் படும். மத்துகமைப் பிரதேசச் செயலாளர் என்றால் தான் அவர் மத்துகமைப் பிரதேசத்திற்குரிய செயலாளர் என்று பொருள்" என்று கூறியுள்ளீர்கள். எந்த இலக்கணப்படி இவ்வாறு பொருள் கொள்கிறீர்கள்? ஆதாரம் தேவை.--பாஹிம் (பேச்சு) 02:38, 8 சூலை 2019 (UTC)
- @Vp1994: நீங்கள் செய்துள்ள மாற்றங்களுக்கு புணர்ச்சி விதியைப் பயன்படுத்தினீர்களா? அல்லது இணையத்தில் தேடியதில் கிடைத்ததைக் கொண்டு மாற்றினீர்களா? இவ்வாறான சொற்றொடர்களுக்குப் புணர்ச்சி விதி என்ன சொல்கிறது? பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளைத் தகுந்த உரையாடல் இன்றி மாற்றியிருக்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 02:45, 8 சூலை 2019 (UTC)
- @Vp1994: "உச்சரித்துப் பார்த்தால் ஒற்று மிகாமல் அமையும்" என எழுதினீர்கள். பிரதேச செயலகம் என்று எழுதினால் உச்சரிக்கும் போது பிரதேஸ ஸெயலகம் என்றே ஒலிக்கும். பிரதேசச் செயலகம் என்று எழுதினால் மட்டுமே செயலகம் செ எழுத்து அதன் சொந்த ஒலிப்போடு உச்சரிக்கப்படும். பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ் எழுத்துகள் அதன் சொந்த ஒலிப்போடு வரும் சொற்களே தமிழ்ச் சொற்கள் என்று கூறி, எடுத்துக்காட்டாக காகம் தமிழ்ச் சொல் அல்லவென்றும், காக்கை என்பதே தமிழ்ச் சொல் என்றும் சொல்லியிருக்கிறார். --UK
Sharma3 உரையாடல் 04:40, 11 சூலை 2019 (UTC)
இலக்கணம்
தொகுஇங்கே பிரதேச செயலகம் என்பதே சரி. மேலே ஒரு சிலர் கூறியது போல சகர ஒற்று வராது. பலரும் பொதுவாக எழுத்துக்குரிய இலக்கணத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். தொகைமொழிகளுக்குரிய இலக்கணம் வேறு மாதிரி. அறியாமல் வாதிடுவதை விட்டு விட்டு அவற்றைக் கற்றுக் கொண்டால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 09:11, 8 சூலை 2019 (UTC)
- நன்றி பாகிம்.--Kanags \உரையாடுக 09:53, 8 சூலை 2019 (UTC)
- இது வரைக்கும் இலக்கண விதி அளிக்கப்படவில்லை! :) --AntanO (பேச்சு) 17:30, 8 சூலை 2019 (UTC)
“ | "முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள்
ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை"[1] |
” |
மேற்குறித்தவாறு தொகைமொழிகளுக்கும் தொகா நிலைத் தொடர்களுக்கும் இலக்கணம் பொதுவான எழுத்திலக்கணமல்ல. பெயரெச்சத் தொடருக்கு வலி மிகாது என்பதே இலக்கணம். இங்கே பிரதேசம் என்பதும் செயலகம் என்பதும் பெயர்ச் சொற்களாகும். பிரதேசத்துக்குரிய அல்லது பிரதேசத்தினுடைய செயலகம் என்றே பொருள்.--பாஹிம் (பேச்சு) 02:46, 9 சூலை 2019 (UTC)