பேச்சு:மந்தை புத்தி

ஆடு மாடுகளைத்தானே மந்தை என்பார்கள். இங்கு கட்டுரையில் எறும்புகளையும் எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டது ஏன்?. கட்டுரை அவ்வளவாக விளங்கவில்லை. --உமாபதி \பேச்சு 16:34, 27 ஜூலை 2008 (UTC)

Swarm என்பது எறும்பு, தேனி, கறையான், முசுறு முதலான விலங்குகளின் கூட்டத்தைத் தான் குறிக்கும். கட்டுரையும் அது பற்றியதே. மந்தை என்பது ஆடு, மாடுகளின் கூட்டம். இது herd எனப்படுகிறது. கூட்ட மதிநுட்பம் அல்லது அதற்குச் சமனான தலைப்பு பொருத்தமாயிருக்கும். தவிர சரியோ பிழையோ முன்னே செல்வரின் வழியில் செல்வதைத் தான் மந்தைப்புத்தி என்கிறோம். மெல்லக்கற்கும் மாணவர்களை மந்த புத்தி என்கிறோம்.--சஞ்சீவி சிவகுமார் 10:34, 7 சூன் 2011 (UTC)Reply

Swarm Intelligence என்பதற்கு திரள் நுண்ணறிவு என்பது சரியானதாக இருக்கும். இது உளவியல் விளைவுகள் என்ற பகுப்பில் வருவதைவிட செயற்கை நுண்ணறிவு , அமைப்புக் (ஒருங்கியக்) கோட்பாடு மற்றும் தன்னாள்வியல் (cybernetics) சார்ந்த பகுப்புகளில் வருவதே பொருத்தம்?!--Paramatamil (பேச்சு) 13:44, 25 சூலை 2015 (UTC)Reply

இக்கட்டுரையின் தலைப்பு, "மந்தை புத்தி" (Swarm Intelligence) என்றுள்ளது, அவ்வாறான சொல் வழமையில் இல்லை. மந்தப் புத்தி (Intellect of recessionary) என்பதான் சரியென்று நினைக்கிறேன், காண்க! விக்சனரியில் "மந்தம்" (அறிவின் மனச்சோர்வு (dullness of intellect). நன்றிகள்--அன்புமுனுசாமி இந்தியா பேச்சு 08:11, 22 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மந்தை_புத்தி&oldid=2121279" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மந்தை புத்தி" page.