பேச்சு:மனித உடல்
சமயக் கருத்துகள், சித்தர் கருத்துகள், மெய்யியல் கருத்துகள் ஆகியவை வேறு இடங்களில் தரவேண்டும். உடல் என்னும் இத் தலைப்பு உடல் பற்றிய பொது அறிவு (உடற்கூறு முதலியன). எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மைகள் இருக்க வேண்டும். தேவைப்படும் பொழுது இத் தலைப்பில் ஆங்கில விக்கியிலோ, ஜெர்மன் விக்கியிலோ பிற விக்கிகளிலோ சென்று பார்க்கலாம். அச்சடித்தாற்போல பின்பறுவதற்காக அல்ல, பொதுவாக எப்படி ஒரு கருத்தை தொடங்கி எழுதுகிறார்கள். இவ்வகையான தரவுகளைக் கொண்டு எழுதுகிறார்கள் என்று ஒருவாறு அறிய. இக்கட்டுரை மாற்றி அமைக்க வேண்டும்.--செல்வா 13:10, 14 மார்ச் 2007 (UTC)
"உடல்" தொகுப்பு விக்கிக்கு ஏற்றவாறு உள்ளது எனக்கொள்ளலாமா?--ஞானவெட்டியான் 14:17, 14 மார்ச் 2007 (UTC)
- இல்லை. ஆங்கில விக்கியில் உள்ளது கூடச் சரியாக இல்லை. அச்சில் உள்ள பல கலைக்கஞ்சியங்கள் நன்றாக அமைந்துள்ளன (பிரிட்டானிக்கா, வோர்ல்ட் புக் முதலானவை). எனினும் ஆங்கில விக்கியில் உள்ள சுருக்க விளக்கத்தைப் பாருங்கள்: en:Human_body, ஸ்பானிய மொழிக் கட்டுரையைப் பாருங்கள் (முழுதும் புரியத் தேவை இல்லை, ரோமானிய எழுத்துக்களில் உள்ளதால் ஒரு வாறு படித்துப் பொருள் கொள்ளலாம்): es:Cuerpo_humano. ஆங்கில விக்கியில் subtle body, astral body போன்ற தனிக்கட்டுரைகளுக்குத் தொடர்பு கொடுத்திருப்பதையும் பாருங்கள். இங்கே இணைத்துள்ள படத்தையும் பாருங்கள். அறிவியல் கண்ணோட்டத்தில் கருத்தை நடுநிலை நின்று கருத்துக்களை எளிதாக விளக்குமுகமாகத் தருதல் வேண்டும்.
--செல்வா 14:47, 14 மார்ச் 2007 (UTC)
இம்மாதிரிக் கட்டுரைகள் எழுதி எனக்குப் பழக்கமின்மையின் காரணமாக, காலத்தை வீணடிக்கது எனக்குத் தெரிந்த மெய்யியலில் காலம் கழிக்கலாமென எண்ணுகிறேன்.நண்பர்களின் கருத்து என்னவோ?--ஞானவெட்டியான் 16:02, 14 மார்ச் 2007 (UTC)
ஞானவெட்டியான், அறிவியல் ரீதியாகவும் எழுதப்பட வேண்டிய கட்டுரைகள் உங்களுக்கு ஆர்வமூட்டுவதாகத் தோன்றாவிட்டால், உங்களுக்கு ஆர்வமும் புலமையும் உள்ள மெய்யியல் கட்டுரைகளைத் தரலாம். தமிழ்ச் சிந்தனைக்கு ஏற்ப கட்டுரைகளைத் தருவது நன்று. ஆங்கில விக்கிக் கட்டுரைகளை அப்படியே மொழிபெயர்க்கவோ பின்பற்றவோ தேவை இல்லை. ஆனால், தமிழ்ச் சிந்தனையைக் குறிப்பிடுவதுடன் உலகளாவிய பார்வையுடன் கலைக்களஞ்சிய கட்டமைப்பில் கட்டுரைகள் அமைவது அவசியம். எந்த ஒரு தத்துவம் குறித்தும் உலகளாவிய பார்வை என்ன என்று தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும். --Ravidreams 19:12, 14 மார்ச் 2007 (UTC)
"சமயம், வழிபாடு, யோகம், ஞானம், சோதிடம் மற்றும் இதரகலைகள், தமிழ், தமிழ் இலக்கிய இலக்கணப் படைபுக்கள் கையாளலாம். பிழை திருத்தலாம். ஆங்காங்கே சிதறி வரும் சிந்தனைகளை இறக்கி வைக்கலாம். குறையிருப்பின் நண்பர்கள் தங்கள் பாணியில் திருத்திக் கொள்ளலாம். நான் திட்டமிட்டுக் காலம் வீணாக்காது எல்லாவற்றையும் செய்வதால் செய்தபணி பலனற்றுப் போனால் கால விரயம் கண்ணை உறுத்துகிறது. இந்து சமயத்தின்கீழ் உள்ள பகுப்புகள் (வண்ணப் பட்டைகள் தீட்டியவை) தில மற்றப்படவேண்டும். அதற்கு வழி என்ன? வழிகாட்டுங்கள். --ஞானவெட்டியான் 02:18, 15 மார்ச் 2007 (UTC)
- இக்கட்டுரையின் உள்ளடக்கங்களை, நீக்கக் கோருகிறேன். உடல் என்பது கட்புலனாவது. அது பற்றிய விவரம் நாடி வந்தேன். இங்கு கட்புலனாகத் தகவல்கள் விவரிக்கப்படுகின்றன. இதன் தற்போதைய உள்ளீடுகள் த த்துவம் சார்ந்தவையாக உள்ளன. ஒரு சாதரணப் பயனாளருக்கு இது உதவாது. நமது த.வி. கட்டுரைகளைப் பற்றி நகையாடக் கூடும். விரைந்து செயல்படுவீர்.வணக்கம். --த* உழவன் 06:46, 12 பெப்ரவரி 2011 (UTC)
- த. உழவன், நீங்கள் உடற்கூற்றியல் சார்ந்த விஷயங்களை இதில் இணைத்து விட்டு. தற்போதைய உள்ளடக்கத்தை “மெய்யியலில் உடல்” என்று தலைப்பிட்டு ஒரு சிறு பகுதியாக்கி விடுங்கள். ஒரு தலைப்பு ஒரு துறை சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும் எனத் தேவையில்லை. உடல் என்பது உடற்கூற்றியலிலும் மெய்யியலிலும் விளக்கப்பட்டிருப்பின் இரண்டும் இருப்பதே நன்று. “சாதாரண பயனருக்கு உதவாது” என்பதெல்லாம் தவறான அணுகுமுறை. அதன்படி பார்த்தால் எத்தனை கட்டுரைகளை நீக்குவது? அல்லது எது சாதாரண பயனருக்கு உதவும் என்று யார் தீர்மானிப்பது. இப்போதிருக்கும் உள்ளடக்கங்கள் தெளிவற்று குழப்பமான முறையில் இருக்கின்றன என்றாலும் கலைக்களஞ்சியத்தில் இருக்க கூடியவையே.
- நீங்கள் உடல்கூற்றியல் பற்றிய தகவல்களை இணையுங்கள், இப்போதிருப்பதை ஒரிரண்டு வரிகளாகக் குறைத்து விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 12:15, 12 பெப்ரவரி 2011 (UTC)
- இருவரிக் குறுங்கட்டுரையாக்கி உள்ளேன். இனி தங்கள் விருப்பபடி வளர்த்தெடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 12:26, 12 பெப்ரவரி 2011 (UTC)
Start a discussion about மனித உடல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மனித உடல்.