எனினும் இப் பகுதியில் 555,572 797 ,, 168, 425,457 ,, 39, 80, 89 ஆகிய எண்கள் விதி விலக்கு உள்ளவை......--175.157.82.56 06:40, 23 நவம்பர் 2011 (UTC)--175.157.82.56 06:40, 23 நவம்பர் 2011 (UTC)Reply
நீங்கள் எதைக்கூறுகிறீர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 07:19, 23 நவம்பர் 2011 (UTC)Reply

சில கருத்துகள்

தொகு

தென்காசி சுப்பிரமணியன், இக்கட்டுரை ஒரு நூலில் உள்ளதைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்பது புரிந்தாலும், இதில் உள்ள கருத்துகளுக்குத் தக்க சான்றுகள் தருவது நல்லது என்று நினைக்கின்றேன் (இவற்றை அந்த நூல் தந்திருந்தால் அவற்றைச் சுட்டியும் எடுத்துகூறியும் விளக்குவது நல்லது). ஆனால் மயனின் முக்கோண விதி சரியானதல்ல. சில எண்களுக்குச் சரியாக வரும், உண்மை, ஆனால் மற்றவற்றுக்குத் தோராயமாகவும் (வெவ்வேறு துல்லியத்துடன்) வரும். எனவே இதனைச் சரிவர வரைவு செய்தல் வேண்டும். கீழே மைக்குரோசாட்டின் எக்ஃசல் (MS Excel) விரிதாளில் சில எண்கள் தந்து பித்தேகோரசு தேற்றம் தருவதையும் "மயன் விதி" தருவதையும் காட்டியிருக்கின்றேன், பார்க்கலாம். (3,4,5), (5,12,13) ஆகியவற்றுக்குச் சரியாக வருகின்றன. ஆனால் மற்றவற்றுக்கு நெருக்கமான எண்ணைத் தருகின்றது, ஆனால் சரியான எண் அல்ல. எனவே தோராயமான விதி எனலாம்.

A	B	C	Mayan C
3	4	5	5
5	12	13	13
20	21	29	28.375
7	24	25	24.5
48	55	73	72.125
39	80	89	89.5
8	15	17	17.125
33	56	65	65.5
12	35	37	36.625
65	72	97	95.5
119	120	169	164.5

எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 22:38, 26 சனவரி 2012 (UTC)Reply

மூல நூல்கள்

தொகு
  • முதலிரண்டு ஆதாரம் தேவைகளுக்கான நூல் - பண்டைத்தடயம், சிற்பச்சித்தன் மயன் வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.
  • முக்கோன விதி பற்றிய நூல் - வானியல் மூலம் வரலாறு கான்போம், ISIAC (INTERNATIONAL SOCIETY FOR THE INVESTIGATION OF ANCIENT CIVILIZATIONS)
  1. ஒரே புத்தகத்தை மீண்டும் கொடுக்க வேண்டாம் என்பதால் அவ்வாறு கொடுத்தேன்.
  2. அனனியாக கேட்டவர் கையொப்பத்தோடு கட்டுரையில் இருந்ததால் அதை பேச்சுப்பக்கத்துக்கு நகற்றினேன். மற்றபடி அவர் கூற வந்தது தற்போது நீங்கள் கூறியதை பார்த்த பின்பே புரிந்தது. எளிய விதி என்று கூறியது square square roots உதவி இல்லாமலே வருவதால். பழைய விதி என்றதற்கு நீங்களிட்ட வார்ப்புரு சரியாகவே உள்ளது. புத்தகத்தை பார்க்கும் போது 2 பித்தோகரசு மூவெண்களுக்கு மற்றும் சோதித்து விட்டு எழுதிவிட்டேன். தவறை சுட்டியதற்கு நன்றி.

இக்கட்டுரை நான் விக்கியில் சேர்ந்த புதிதில் எழுதியதால் தவறுகள் பல இருக்கலாம். மேலதிக மேற்கோள் தேவையெனில் கேட்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் 04:30, 27 சனவரி 2012 (UTC)Reply

நன்றி தென்காசி சுப்பிரமணியன். கேள்விகள் இருந்தால் கேட்கின்றேன். நன்றி.--செல்வா 04:50, 27 சனவரி 2012 (UTC)Reply

மிக்க நன்றி. நல்ல பொருத்தமான திருத்தங்கள் செய்துள்ளீர்கள்! --செல்வா 04:54, 27 சனவரி 2012 (UTC)Reply

வரலாறும், . தொன்மங்களும்

தொகு

இந்தக் கட்டுரையில் வரலாறும் தொன்மமும் இரண்டறக் கலந்து உள்ளது போல் தெரிகிறது. மயன் எழுதியதாகக் கூறப்படும் ஐந்திறத்தின் ஒரு பகுதி 1986 இல் தமிழ்நாடு அரசால் பதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது எதாவது பண்டைய மூலங்களை அடிப்படையாகக் கொண்டதா என்பதில் தெளிவு இல்லை. பண்டைய மூலங்களுக்கு மேற்கோள் தந்தால் உதவும். மேலும் மயன் என்பவர் சிற்பியர். அவர் ந்தை பெயர் தாமரை. தாயின் பெயர் கருங்குழலி. இவரி தலைச்சங்கல் காலத்தவர் என்று வாழ்வியற் களஞ்சியம் கூறுகிறது. ஆனால் அதற்கு என்ன சான்றுகள் என்று தெரியவில்லை. மிக சுவையான கட்டுரை, ஆனால் சற்று கூடிய கவனத்துடன் எழுதப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 03:00, 14 ஏப்ரல் 2012 (UTC)

ஐந்திறம் என்ற இலக்கிய (இலக்கண) மோசடி

தொகு

பேச்சு:ஐந்திறம் பக்கத்தில் ஐந்திறம் என்ற இலக்கிய (இலக்கண) மோசடி என்ற விமர்சனத்தைப் பார்க்க. இவர் எழுதியதாகக் கூறப்படும் ஐந்திறம் நூல் 20 ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்திகளையும் கட்டுரையில் சேர்க்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 03:10, 14 ஏப்ரல் 2012 (UTC)

நான் இதை தற்போதே அறிந்தேன். நான் இங்கு எழுதியவையில் பெருமளவு பண்டைத்தடயம் புத்தகத்திலிருந்து எடுத்தது. அதை எழுதியவர் தான் கண்பதிச்சிற்பியின் வழிபற்றுபவர் என்று கூறியுள்ளதைக் கொண்டு நீங்கள் கூறிய எதிப்பு வாதங்களை அங்கு கூறாமல் இருந்திருக்கலாம். அல்லது இப்புத்தகம் எழுதப்பட்டு பல காலம் கழித்து நீங்கள் கூறிய எ.வாக்கள் கூறப்பட்டிருக்கலாம். நீங்கள் கூறியவற்றை நீங்களே கட்டுரையில் இணைத்து விடலாமே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:39, 14 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மயன்&oldid=1318478" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மயன்" page.