பேச்சு:மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்

புடைப்புச் சிற்பங்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும். அது குறித்து சிறு கட்டுரை எழுதினால் இன்னும் விளக்கமாக இருக்கும்.--செல்வம் தமிழ் 12:03, 1 மே 2009 (UTC)

புடைப்புச் சிற்பங்கள் பற்றி ஒரு கட்டுரை தொடங்கியுள்ளேன். மேலும் விரிவாக்கலாம். மயூரநாதன் 15:44, 1 மே 2009 (UTC)Reply

புடைப்பு என்றால் வீக்கமா? வீங்கிய சிற்பம் என்றப் பொருளா? இது ஒரு காரணப் பெயரா? இது சிற்பக் கலையினர் வைத்தப் பெயரா? emboss என்பதற்கு தாங்களே வைத்தப் பெயரா? புடைப்பு என்பதற்கு முதன்மை பொருள் வீங்குதல், வீக்கம்.--செல்வம் தமிழ் 07:00, 2 மே 2009 (UTC)

"புடைப்புச் சிற்பம்" என்னும் சொல் நான் உருவாக்கியது அல்ல. தமிழில் எழுதப்படுகின்ற சிற்ப நூல்கள் இந்தச் சொல்லைத்தான் பயன்படுத்துகின்றன. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் இதற்கு இணையான ஆங்கிலச் சொல் emboss அல்ல. இதனை relief என்பர். இச் சொல் இத்தாலிய மொழி மூலத்தைக் கொண்டது. Online Etymology Dictionary இல் உள்ள இச் சொல் குறித்த பதிவைக் கீழே பார்க்கவும்.
relief (2)
"projection of figure or design from a flat surface," 1606, from It. rilievo, from rilevare "to raise," from L. relevare "to raise, lighten"
"புடைப்பு" என்பது வீக்கம், திரட்சி போன்ற பொருள்களைத் தருவது. இவை அடிப்படையில் பின்னணியில் இருந்து முன் தள்ளிக் கொண்டிருக்கும் பகுதிகளைக் குறிப்பிடுகின்றன. இதனால், புடைப்புச் சிற்பங்கள் என்பது, பின்னணியிலிருந்து முன் தள்ளிக்கொண்டிருக்கும் சிற்பங்கள், அதாவது புடைத்து நிற்கும் சிற்பங்கள் என்ற பொருள் தருகிறது. மயூரநாதன் 07:36, 2 மே 2009 (UTC)Reply

மாமல்லபுர தொல்லியல் துறையில் இருந்து எடுத்தவையல்ல என்று குறிப்பிடுகிறீர்கள அப்படித்தானே? தமிழ் பால் அகராதியில் relief=வடிவமைப்பு என்ற முற்று பெற்ற சொல்லாகவும்,சித்திரம் ஒன்றை மேற்பரப்பு புடைத்து கொண்டிருக்குமாறு செதுக்கும் முறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகையால் தான் தமிழ்நாடு சிற்ப கல்லூரியில் எடுத்த்தா அல்லது தொல்லியல் துறை வைத்த பெயரா? என்று கேட்டேன். மாமல்லபுரத்தில் சென்று வந்தேன் அங்கு எந்த இடத்திலும் இந்தப் பெயர் குறிப்பிடவில்லை. இதற்கு relief sculptured என்று பெயருக்கு புடைப்பு சிற்பங்கள் என்று தமிழ் பெயர் வைத்திருக்கின்றீர்கள். இது முற்றுபெற்ற பெயராக தமிழில் எடுத்துக் கொள்ளமுடியாதே. சிலை தன்னாலேயே வீக்கமடைகிறது அ புடைப்படைகின்றது என்ற பொருளை உணர்த்துகின்றது. நான் எழுப்பியவை ஆரம்பநிலை சந்தேகங்கள் தான். இந்த சந்தேகம் மற்றும் கேள்விகள் அனைவருக்கும் எழும்.

இதைபற்றி உங்களுக்கு மட்டும்தான் தெரியும். இதைப் படிக்கும் மற்றவர் எப்படி அறிந்து கொள்வர். இன்னும் பிற சிற்பங்களை பற்றியும் கேட்பர். புடைப்பு சரியான பொருள் வீக்கம் மட்டும்தான். ஆகையால் விளக்கங்கள் வேண்டும் என்ற நிலை ஏற்படுகின்றது. புடைப்பமைப்பு சிற்பங்கள் அல்லது வடிவமைப்பு சிற்பங்கள் என்று காரணப்பெயராக கொடுக்கவேண்டும். (புடைத்தலை போன்று, உருவங்களை வடிவமைத்தலை போன்று, மேடாக (குடைந்து) வடிவமைத்ததினால்) அதற்கான காரணத்தை சிறு கட்டுரையாக கொடுத்தால் அனைவரும் பயன்பெறுவர். நானும் பயன் பெறுவேன். கட்டுரை நன்று. நன்றி--செல்வம் தமிழ் 08:30, 2 மே 2009 (UTC)


செல்வம், இதிலே பெரிய Issue ஒன்றும் கிடையாது. மிக எளிமையான விடயம்.

  • Relief என்பது உலகளாவிய சிற்பக்கலையில் ஒருவகைச் சிற்பத்தைக் குறிக்கும் சொல்.
  • இதற்கான தமிழ்ப்பெயர் "புடைப்புச் சிற்பம்".
  • இச் சொல் பலகாலமாகப் புழக்கத்தில் உள்ளது. நான் உருவாக்கவில்லை.
  • மாமல்லபுரத் தொல்லியல் துறையோ அல்லது சிற்பக் கல்லூரியோ சிற்பச் சொற்களை உருவாக்குவதற்கான நிறுவனங்கள் அல்ல அவையும் பெரும்பாலும் வேறு மூலங்களில் இருந்து சொற்களை எடுத்துப் பயன்படுத்துகின்றன.
  • தவிர, "புடைப்புச் சிற்பம்" என்னும் சொல் மாமல்லபுரத்துக்கு மட்டும் பொருந்துவது அல்ல. உலகில் இவ்வகைச் சிற்பம் எங்கிருந்தாலும் அது "புடைப்புச் சிற்பம்" என்ற சொல்லால் குறிக்கப்படலாம். அதனால் மாமல்லபுரத்துத் தொல்லியல் துறைக்கோ அல்லது சிற்பக் கல்லூரிக்கோ இச் சொல் குறித்த சிறப்புத் தொடர்பு எதுவும் கிடையாது.
  • "புடைப்புச் சிற்பம்" என்பது மிகப் பரவலாகப் புழக்கத்தில் உள்ள ஒரு சிற்பச் சொல்.
  • இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில நூல்களின் பட்டியலையும் அவற்றிலிருந்து மேற்கோள்களையும் கீழே தருகிறேன் பார்க்கவும்.
    • செ. வைத்திலிங்கன், சிற்பக்கலை, 2003, பக் 37: ".....உருவத்தில் ஒரு பக்கத்தை மட்டும் காட்டும் சிற்பம் புடைப்புச் சிற்பம் எனப்படும்."
    • குடவாயில் பாலசுப்பிரமணியம், கோபுரக்கலை மரபு, 2004, பக். 33: "....புடைப்புச் சிற்பமாகத் திகழும் அத் தொகுதியில்......"
    • மயிலை சீனி. வெங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், 2003, பக். 40: "....... சிற்ப உருவங்களை முழு உருவங்கள் என்றும், புடைப்புச் சிற்பங்கள் என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம்."
    • நடன காசிநாதன், மாமல்லபுரம், 2000, பக்.42: "......கடல்மல்லைப் புடைச் சிற்பங்கள் அருச்சுனன் தவத்தைத்தான் குறிக்கின்றன என்று.........." (இவர் "புடைப்புச் சிற்பம்" என்பதற்குப்பதில் "புடைச் சிற்பம்" என்கிறார். "புடைப்புச் சிற்பம்" என்பதே பெரும்பான்மையாக வழங்கப்படுவதும். கூடிய பொருத்தமானதும் ஆகும்). மயூரநாதன் 10:00, 2 மே 2009 (UTC)Reply
மிக அருமையான சான்றுகோள்கள் மயூரநாதன். இச் சான்றுகோள்கள் இல்லாமலே இது எளிய, பொருத்தமான சொல்தான். புடைத்து இருத்தல் புடைப்பு, புடைப்பாய் நிற்கும் சிற்பம் புடைப்புச் சிற்பம். சான்றுகோள்களுக்கு நன்றி.--செல்வா 13:08, 2 மே 2009 (UTC)Reply


தனிச்சொல்லாக மாற்றலாம் தொகு

புடைச் சிற்பமும் அதே பொருள்தான். மேற்கோள்கள் சரி. நன்று. மேலும் இதை நாம் இன்னும் தனிப்பொருள் கொண்ட பொதுவான சொற்கள் கொண்டவையாக, படித்தவுட்ன தலைப்பை புரிந்து கொள்ளும்படியாக மாற்றலாம் என்பது என் திடமான கருத்து. இந்த மாதிரி கூறப்படுவதை நான் கேள்விப்பட்டதில்லை. வராலாற்றுப் பாடங்களிலும் குறிப்பிட்டதில்லை. ஒரு தமிழ் சொல் பிரித்தால் பொருள் தரவேண்டும். அந்தப் பொருள் அதனோடு பொருந்த வேண்டும். (இதற்கு வேறு பெயர் குறிப்பிடுவார்கள் என் அறிகின்றேன் மேட்டுச் சிற்பம் தகவல் கிடைத்தால் அவற்றை உள்ளீடுகின்றேன்.) மேலும் கேள்வி கேட்பதை issue என்று பொருள் கொள்ளாதீர் கருத்து அ ஐயம் அ தெளிவுபடுத்துதல் என்ற பொருள் கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.(இடையே ஆங்கிலம் வந்ததால் இந்த நிலை). தகவல் தந்ததுக்கு நன்றி--செல்வம் தமிழ் 10:41, 2 மே 2009 (UTC)

  • தமிழ் இணையப் பல்கலைக்கழகம்relief=புடைத்த சித்திரம் - தகவலுக்காக sculpture=சிலையாக்கக் கலை- பிறர் பார்த்து கருத்து தெரிவிப்பதற்காக தவறாக நினைக்கவேண்டாம்.--செல்வம் தமிழ் 13:00, 2 மே 2009 (UTC)
செல்வம் தமிழ், தயங்காமல் கேள்விகள் கேளுங்கள். எதிர்க்கருத்துகள் இருந்தால் எடுத்து வைத்து கருத்தாடுங்கள். இவை நம்மை வளர்க்கும். வளர்முகமாகவும், நன்னோக்குடனும் இருக்க வேண்டும் என்பது விக்கியின் எதிர்பார்ப்புகளில் ஒன்று. உங்களுடைய கேள்விகளையும் பிறருடைய கேள்விகளையும் என்னைப்போல் பிறரும் இங்கு கட்டாயம் வரவேற்பார்கள். கேள்விகள், மாற்றுக் கருத்துகள் எழுதுவது இயற்கை மட்டும அல்ல, புதிய சிந்தனைகளையும் கிளரும். கருத்துகள் கூர்ப்பு எய்தும். Issue என்பது கேள்வி, சிக்கல், இடக்கு, குழப்பம் என்னும் பொருள்களில் ஆளப்படலாம். இன்னும் ஒரு கருத்தையும் வைக்க விழைகிறேன். தமிழில் அகரமுதலிகள் இன்னும் போதிய ஆய்வூடனும், அறிவுடனும் துல்லியமாக பொருள்கள் தருவதில்லை. அவற்றைச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அவையே முடிவான முடிவாகக் கொள்ளுதல் சில இடங்களில் சரியாக அமையாது. அகராதிக் கலை இன்னும் தமிழகத்தில் போதிய வளர்ச்சியும், நேர்மையான ஆய்வு நேர்த்தியும் எய்யாமல் இருக்கின்றது. இவற்றையெல்லாம் நம் தமிழ்நாட்டு, இலங்கைப் பல்கலைகழகங்கள் 4-5 பேர்களை வைத்துக்கொண்டு, சிறிதளவும் பொருளுதவியுடன் செய்ய இயலும். தேவநேயப் பாவாணர் அவர்கள் எவ்வளவோ நேர்மையாக முயன்றும், அவருடைய பேரறிவை (உலக அளவிலே மெய்யான பேரறிவை)ப் பயன்படுத்த தவறிவிட்டது. கடைசி காலத்தில் அரைகுறையாக வாய்ப்பளித்தது. இவற்றை ஏன் கூறுகின்றேன் என்றால், அகராதிக் கலையில், போதிய அளவு புலமை மிக்கவர்கள் சேர்ந்து ஓர் அறிவுத்துறையாக வளரவில்லை என்பது என் கருத்து.--செல்வா 13:30, 2 மே 2009 (UTC)Reply

தமிழர் சிற்பக்கலை பகுப்பு தொகு

தமிழர் சிறபக்கலை என்ற பகுப்பானது இங்கு சரியானதா. மாமல்லபுரத்தில் அதிகமாக பல்லவர்களின் காலத்துச் சிற்பங்கள் இருப்பதை குறிப்பிடும் கட்டுரையானது, பல்லவர் சிற்பக்கலை என்றல்லவா பகுப்பிட வேண்டும்.

பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்ற விக்கியின் பல்லவர்கள் கட்டுரையே எடுத்துரைக்கின்றது, மேலும் பல்லவர்களின் குடிகள் தமிழர்கள் எனும் பட்சத்தில் இப்பகுப்பு இங்கு இடப்பட்டுள்ளதா என்று தெளிவுருத்த வேண்டுகிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:53, 31 ஆகத்து 2013 (UTC)Reply

Talk: Relief sculptures of Mamallapuram தொகு

Latest comment: 10 years ago by Jagadeeswarann99 in topic Tamil sculpture class

It would be better to explain that relief sculptures. If you write a short article about it, it will be more descriptive.--Selvam Tamil 12:03, 1 May 2009 (UTC)

Balasubramaniam in Gudavai, Gopurakalai Gedu, 2004, p. 33: "....in that volume which appears as a relief sculpture..." Peacock sugar. Venkatasamy, Beauty Arts Raised by Tamils, 2003, p. 40: ".......Sculptures can be divided into two types, full figures and reliefs."

Monica Pushparaj (பேச்சு) 05:38, 2 சனவரி 2024 (UTC)Reply

Return to "மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்" page.