பேச்சு:மாயா நாகரிகம்
இதன் தலைப்பை மாயா நாகரிகம் என் இடுவதே பொருத்தமானது என்று படுகிறது. அஸ்டெக் நாகரிகம் பற்றிய கட்டுரையை ஏற்கனவே உருவாக்கியுள்ளேன். இன்கா நாகரிகம் பற்றியும் உருவாக்க வேன்டும். --கோபி 20:00, 24 செப்டெம்பர் 2006 (UTC) மயூரநாதன், உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனின் இப்பக்கத்தை மாயா நாகரிகம் என்பதாக நகர்த்திவிடுங்கள். நன்றி. --கோபி 20:05, 24 செப்டெம்பர் 2006 (UTC)
எனது வலைப்பதிவில் முன்னர் நான் எழுதிய கட்டுரையின் பல பகுதிகளைக்கொண்டு விரிவு படுத்தியிருக்கிறேன். ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்.--Jaekay 07:51, 24 பெப்ரவரி 2008 (UTC)
- நாகரிகம்-நாகரீகம்? கோபி 06:27, 16 மார்ச் 2008 (UTC)
- நாகரிகம் தான் சரி. தலைப்பை மாற்றிவிடலாம். மயூரநாதன் 17:55, 16 மார்ச் 2008 (UTC)
மாயன் நம்பிக்கைகள் - ஆதாரம்?
தொகுஇக்கட்டுரையில், "இச் சடங்கின் போது அரசன் தன் ஆண்குறியைக் கீறி அதில் வரும் இரத்தத்தை எடுத்து கூடியிருக்கும் மக்களிடம் காண்பித்துப் பின் கடவுளிடம் பேசி அவர் ஆலோசனையை மக்களிடம் கூறுவானாம்." என எழுதப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள்(references) குறிப்பிடப்படவில்லை. எனக்குத் தெரிந்தவரையில், இது ஓல்மெக் மக்களால் மட்டுமே செய்யப்பட்டது. [Kaufman (2000) and Justeson and Kaufman (2001).] தயவிசெய்து இதனை நீக்குக, அல்லது ஆதாரங்கள் குறிப்பிடுக. Mojosaurus 18:03, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
நீக்கப்பட்ட பகுதி
தொகு"இச் சடங்கின் போது அரசன் தன் ஆண்குறியைக் கீறி அதில் வரும் இரத்தத்தை எடுத்து கூடியிருக்கும் மக்களிடம் காண்பித்துப் பின் கடவுளிடம் பேசி அவர் ஆலோசனையை மக்களிடம் கூறுவானாம். அதன் பின் அவனது அடிமைகளில் ஒருவரைப் பலியிடுவார்களாம். அந்த அடிமைகள் பெரும்பாலும் போரில் தோற்ற அண்டை நாட்டு அரசர்களாக இருப்பார்களாம்."
ஆதாரம் தந்து இணைக்கவும். --Natkeeran 18:06, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
"விநோதமான சடங்கு" - விநோதம் எனும் சொல்லை நீக்கியுள்ளேன். இது விக்கிபீடியாவின் நடுநிலை_நோக்கை மீறுகிறது. ஒரு நாகரிகத்திற்கு விநோதமாக தோன்றும் ஒன்று ம்ற்றொரு நாகரிகரிதிற்கு விநோதம் அல்ல.
கட்டுரையின் தரம்
தொகுஇக்கட்டுரையை இன்று விக்கியின் முதறபக்கத்தில் கண்டேன். மேற்கொள்கள் ஒன்று கூட இல்லை. தரம் மேம்படுத்தப்பட வேண்டும். Penawiki 14:57, 2 செப்டெம்பர் 2008 (UTC)
- ஆயிற்று--ஸ்ரீதர் (பேச்சு) 13:43, 21 திசம்பர் 2012 (UTC)