பேச்சு:மாரிகாலம்

There are no discussions on this page.

மாரிகாலம் என்பது உண்மையில் மழைக்காலத்தைக்[1] குறிப்பதுதானே? அப்படியானால் இங்கே சொல்லப்பட்டிருப்பதன்படி, "இது தென்பகுதியில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களிலும் வட பகுதியில் டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களிலும் வருகிறது". என்பது பொருத்தமில்லாமல் இருப்பதாய் தோன்றுகின்றது. Winter என்பதற்கு குளிர்காலம், அல்லது பனிக்காலம் என்பதே பொருத்தமாய் இருக்கும் என நினைக்கின்றேன். இலங்கையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும் காலத்தையே மாரிகாலம் என அழைப்போம். குளிர்காலம் அல்லது பனிக்காலம் என்ற தலைப்பில் கட்டுரையை தொடங்கி தகவல்களை இடம் மாற்றலாமா?--கலை 14:40, 7 செப்டெம்பர் 2011 (UTC)

ஆம். தென் மேற்கு பருவக்காற்றால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தென் இந்தியா மழை பொழிவை அடையும், ஆனால் தமிழகம் வட கிழக்கு பருவக்காற்றால் அதிக மழை பொழிவை பெறும். தென் மேற்கு பருவக்காற்றால் தான் வட இந்தியாவும் அதிக மழை பொழிவை பெறும், மாதங்கள் வேறுபடும் என்ன மாதங்கள் இப்போ என்று நினைவில்லை:(. கட்டுரை பொதுவாகவும் தகவல் இந்தியாவைப் பற்றியும் உள்ளது. தகவலை மாற்ற வேண்டும். --குறும்பன் 15:18, 7 செப்டெம்பர் 2011 (UTC)


கலை, உங்கள் பரிந்துரை பொருத்தமானதே. --Natkeeran 23:01, 21 செப்டெம்பர் 2011 (UTC)
மாரிகாலமா? மாரிக்காலமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:49, 22 அக்டோபர் 2015 (UTC)[]
இது குறித்து முன்பும் இங்கு உரையாடப்பட்டது. மாரிக்காலம் என வருதல் வேண்டும். கம்பராமாயணத்திலும் மாரிக்காலம் எனக் கையாளப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 15:14, 22 அக்டோபர் 2015 (UTC)[]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாரிகாலம்&oldid=1938238" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மாரிகாலம்" page.