பேச்சு:மாற்றுரு
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை
- allelle - மாற்றுரு எதிருருவல்ல. வரையறையைப் பார்க்கவும்.alternate form, other form என்பதை மாற்றுரு, மாற்று அலகு, மாற்றுத் தனிமம் அல்லது மறுமம் எனவேண்டுமே தவிர எதிருரு(opposite form) எனக் கூடாது.
- மரபணுவில் இரு மரபுத் தனிமங்கள் உள்ளன. இவற்றுக்கு ஒவ்வொன்றுக்கும் மாற்றுவடிவங்கள் உண்டு. இவையே மாற்று மரபணுத் தனிமங்களாகும்.இவை இயல்பு வடிவத்தில் இருந்து சற்றே வேறுபடுபவையே தவிர எந்தவகையிலும் எதிரியல்பு உடையன அல்ல.எனவே வரையறையிலேயே பொருள்முரண் நெருடுவதைக் கட்டுரையைப் படிக்கும்போதே உய்த்துணரலாம்.
- chromosome-நிறத் திரி என நேர்மொழிபெயர்ப்பு செய்தல் பொருள்தெளிவுக்கு உதவாது. மரபுத் திரி என்ற ஒருவழக்கும் இச்சொல்லுக்கு நிலவுகிறது. தமிழில் குறுமம் என்றாலும் வண்னம் ஆதலால் குறுமவகம் எனக் குறிப்பதே சாலச் சிறந்தது.
- chromosome-குறுமவகம் /பண்பகம்; Chromotin-குறுமன், பண்பன்;
- இதோடு தொடர்புடைய chromo எனத் தொடங்கும் பிற சொற்களும் உள்ளன; அவற்றையும் இவ்விரண்டுடன் தொடர்புபடுத்தியே இக்கலைச் சொற்களைத் தரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
- அந்தச் சொற்கள் நினைவில் இல்லை. திரட்டியதும் உரிய வரையறைகளுடன் மேலும் நுட்பமாக விவாதித்து முடிவெடுப்போம்.அதற்கேற்ப இக்கட்டுரை பின்னர்த் திருத்தப்படும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:10, 5 சூன் 2015 (UTC)
- அந்தச் சொற்கள் நினைவில் இல்லை. திரட்டியதும் உரிய வரையறைகளுடன் மேலும் நுட்பமாக விவாதித்து முடிவெடுப்போம்.அதற்கேற்ப இக்கட்டுரை பின்னர்த் திருத்தப்படும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:10, 5 சூன் 2015 (UTC)
வணக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை
- நீங்கள் கூறுவதுபோல allele க்குச் சரியான பதம் 'மாற்றுரு' என்றே தோன்றுகின்றது. எனவே தலைப்பை மாற்றலாம். மாற்றும்போது எதிருரு என்ற சொல்லுக்கு ஒரு வழிகாட்டியை விட்டுச் செல்லுதல் நல்லது. காரணம் 'எதிருரு' கட்டுரை பல்வேறு கட்டுரைகளில் இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. எதிருரு என்ற இந்தத் தலைப்பை தமிழ் விக்சனரியில் இருந்தே நான் எடுத்ததாக நினைவு. தமிழ் விக்சனரிக்கு தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியிலிருந்து இந்தச் சொல் பெறப்பட்டுள்ளதென நினைக்கின்றேன்.
- Chromosome என்பதற்கு 'நிறப்புரி' என்றே உள்ளது. பண்பகம்/பண்பிழை/பண்பன் என்பவை பொருள் தெளிவைக் கொண்டு வருவதாகத் தோன்றவில்லை. ஆனாலும் இது தொடர்பில் விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/உயிரியல் பக்கத்தில் உரையாடலாம் என நினைக்கின்றேன். --கலை (பேச்சு) 09:57, 6 சூன் 2015 (UTC)
- பண்பகங்கள் (chromosomes) எப்போதும் இணைகளாக அமையும். இரண்டிலுமே ஒரேவகை மரபன் (மரபணு) அமைந்தால் அவை ஒத்தபண்பும் மாற்று மரபன்கள் ஓன்றில் அமையும்போது பல மாற்றுபண்புகளும் ஏற்படலாம்.இவற்றின் பணியே உயிரியின் தோற்றவகைப் பண்பை மாற்றுவது தான்.
- என்றாலும் இதோடு தொடர்புடைய chromo எனத் தொடங்கும் பிற சொற்களும் உள்ளன; அவற்றையும் இவ்விரண்டுடன் தொடர்புபடுத்தியே இக்கலைச் சொற்களைத் தரப்படுத்திக் கொள்ளவேண்டும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:17, 9 சூன் 2015 (UTC)