விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/உயிரியல்
இங்கு உயிரியற் கலைச்சொற்களுக்கான பரிந்துரைகள், ஐயப்பாடுகள், வேண்டுகோள் ஆகியவற்றைத் தொகுக்கலாம். ஆய்ந்து முடிவடைந்த சொற்கள் அகரவரிசைப்படி ஆவணப்படுத்தப்படும்; இது இலகுவில் சொற்களைத் தேடுவதற்கு உதவியாக அமைகின்றது. உதவிப்பக்கத்தில் சொல்லாக்கத்திற்குத் தேவைப்படக்கூடிய சில வழிமுறைகள் அறியலாம் அல்லது பரிந்துரைகளைப் பதிவு செய்யலாம் . விக்கிபீடியாக் கட்டுரையில் புதிய உயிரியற் சொற்களைச் சேர்ப்போர் இங்கே அவற்றிற்கான விளக்கம், சொற்பிறப்பு போன்றவற்றைப் பதியலாம்.
கலைச்சொல் ஒத்தாசை | மருத்துவம் | உயிரியல் | இயற்பியல் | வேதியியல் | கணிதம் | தொழில்நுட்பம் | சமூக அறிவியல் | புவியியல் | சட்டம் |
தமிழ் எழுத்துகள்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ச ஞ த ந ப ம ய வ
உதவி தேவைப்படும் புதிய சொற்களைக் கீழே கொடுக்கவும் DNA/RNA/mRNA/tRNA/rRNAதொகுமேற்குறிப்பிட்டுள்ள சொற்களுக்குரிய கலைச்சொல்லாக்கம்பற்றி உரையாடலாமா? பார்க்க பேச்சு:காவாறனை, பேச்சு:தூதாறனை. @செல்வா:, @Info-farmer:, @Rsmn:, @Nan:, @5anan27:, @Drsrisenthil:, @Mayooranathan:, @MakizNan:, @Sundar: --கலை (பேச்சு) 12:54, 12 ஏப்ரல் 2017 (UTC)
Citrus, Orange. Lime Lemonதொகுஇவற்றிற்கான தமிழ்ச் சொற்களில் குழப்பம் இருக்கின்றது. பேச்சு:ஆரஞ்சுப்பழம் பக்கத்தில் Citrus, Orange, Bitter Orange ஆகியவற்றிற்கான பெயர்க் குழப்பம் தொடர்பான உரையாடல் உள்ளது. அத்துடன் Lime and Lemon க்கும் தமிழில் எனக்கு பெயர்க் குழப்பம் உண்டு. பார்த்து கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:09, 12 மே 2013 (UTC) pancake batfishதொகுen:pancake batfish எனும் உயிரினத்துக்குப் பெயரிடவேண்டும், முதலில் pancake என்பதை எவ்வாறு தமிழில் பொருத்தமாக அழைக்கலாம்.? batfish என்பது வௌவால்மீன் என்பது பொருந்துமா?--செந்தி//உரையாடுக// 16:27, 22 சூன் 2011 (UTC) புலிதொகுபேய்வாய்ப்புலி, வேங்கைப்புலி போன்ற விலங்குகளுக்கு உரிய ஆங்கில உயிரியல் பெயர்கள் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் 07:52, 5 செப்டெம்பர் 2011 (UTC)
2012க்கான சிறப்பு உயிரினங்கள் (Top 10 New Species - 2012)தொகுசென்ற முறை பகுப்பு:2011க்கான சிறப்பு உயிரினங்கள் உருவாக்கி இருந்தேன், இம்முறையும் அதுபோல (பகுப்பு:2012க்கான சிறப்பு உயிரினங்கள் ) உருவாக்க உள்ளேன், இவற்றைத் தமிழாக்கம் செய்ய உதவுங்களேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 17:08, 13 ஆகத்து 2012 (UTC)
en:International Institute for Species Exploration : தமிழ்ப் பெயர் பேச்சு:இரட்டைப்படைக்_குளம்பி என்பதில், பிற உயிரியல் திட்டப் பங்களிப்பாளர்களின் கருத்தறிய விரும்புகிறேன்.--த♥ உழவன் +உரை.. 07:03, 29 ஆகத்து 2012 (UTC) Chimeraதொகுchimera என்பது chimaera என்ற சொல்லின் மற்றொரு வடிவம். இச்சொல்லுக்கு, மரபியில் அடிப்படையில், 'வேறுபட்ட மரபுஅணுக்கள் உடையவை' என்பது பொருளாகும். கிரேக்க புராணங்களின் படி, வேறுபட்ட விலங்கினங்களின் புறஉறுப்புகளை உடைய விலங்கினைக் குறிக்கும். இவற்றைக் கொண்டு, இம்மீனுக்கு ஒரு பெயரிடுக. HerbariumதொகுHerbarium என்ற சொல்லுக்கான தமிழ் சொல் என்ன?ஆய்வுக்காக பாதுகாக்கப்பட்ட, உலர் தாவர ஆவணம்/ஆவணகாப்பகம் என்ற பொருளில் சொல் அமைந்தால் மிக நன்றாக இருக்கும். ஒரு முழுமையான இணைய ஆவண ஏடுள்ள பக்கம்--த♥ உழவன் +உரை.. 01:42, 21 மார்ச் 2013 (UTC)
Larva/Larvaeதொகுஆங்கிலத்தில் Larva/Larvae எனப்படுவது, பூச்சியின் வாழ்க்கை சுழற்சி பருவங்களின் ஓன்றாகும். இதற்கு இணையான தமிழ் பக்கம் நமது விக்கியில் இல்லை. நான் இதனை தொடங்க விரும்புகிறேன். இதனை 'முட்டை புழு' என்று அழைக்கலாமா? இயற்பியல் அறிந்த தமிழ் அறிஞர்கள் யாரேனும் தெளிவுப்படுத்தினால் நன்றாகயிருக்கும். --}- Cyarenkatnikh (பேச்சு) 01:25, 15 அக்டோபர் 2017 (UTC)
|