விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம்

இங்கு மருத்துவக் கலைச்சொற்களுக்கான பரிந்துரைகள், ஐயப்பாடுகள் தொகுக்கலாம். ஆய்ந்து முடிவடைந்த சொற்கள் அகரவரிசைப்படி ஆவணப்படுத்தப்படும்; இது இலகுவில் சொற்களைத் தேடுவதற்கு உதவியாக அமைகின்றது. உதவிப்பக்கத்தில் சொல்லாக்கத்திற்குத் தேவைப்படக்கூடிய சில வழிமுறைகள் அறியலாம் அல்லது பரிந்துரைகளைப் பதிவு செய்யலாம் . விக்கிபீடியாக் கட்டுரையில் புதிய மருத்துவச் சொற்களைச் சேர்ப்போர் இங்கே அவற்றிற்கான விளக்கம், சொற்பிறப்பு போன்றவற்றைப் பதியலாம்.


கலைச்சொல் ஒத்தாசை   மருத்துவம்   உயிரியல்   இயற்பியல்   வேதியியல்   கணிதம்   தொழில்நுட்பம்   சமூக அறிவியல்   புவியியல்   சட்டம்    
மருத்துவத்துறை தொடர்பான கலைச்சொற்களை அகரவரிசையில் தேட கீழுள்ள எழுத்துக்களைச் சொடுக்குக:

தமிழ் எழுத்துகள்:

இலத்தீன் எழுத்துகள்: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

தொகுப்பு

பழைய கலந்துரையாடல்களின் தொகுப்புகள்

1

உதவி தேவைப்படும் புதிய சொற்களை கீழே கொடுக்கவும்

Alloimmune

தொகு

DNA (Nucleic acid)

தொகு
  • DNA = ஆக்சிசனற்ற ரைபோ கருவமிலம் (ஆனால் டி.என்.ஏ என்றே தற்போதைக்குப் பாவிப்பதென முடிவெடுத்ததாய் நினைவு)
  • RNA = ரைபோ கருவமிலம் (ஆர்.என்.ஏ என்றே தற்போதைக்குப் பயன்படுத்தலாம் ?)
  • Nucleic acid = கருவமிலம் (கருக்காடி எனலாம்; நியூக்ளியிக் காடி எனலாம்)
  • Nucleotide = நியூக்கிளியோட்டைடு (தற்போதைக்கு இதனையே பயன்படுத்தலாம்.)
  • Nucleoside = நியூக்கிளியோசைடு (தற்போதைக்கு இதனையே பயன்படுத்தலாம்.)
  • Nucleosome = நியூக்கிளியோசோம் ?
  • nucleobase =
    • (nucleotide bases) =
    • (nitrogenous base) =
  • Base pair =
  • ribose = இரைபோசு (ஐங்கரிம இனியம்^)
  • deoxyribose = ஆக்சிசனகற்றப்பட்ட ரைபோசு ??
  • purine-base =
  • pyrimidine-base =
  • plasmid = கணிமி (பார்க்க: பேச்சு:கணிமி)

^ = பரிந்துரை

  • "ஆக்சிசனற்ற" என்ற சொல்லாட்சி தவறானதாகும். ஆங்கிலத்தில் "deoxy" என்னும் முன்னொட்டு இருந்தபோதிலும். "ஆக்சிசன் குறைந்த" அல்லது "குறை ஆக்கிசிசன்" என்னும் முன்னொட்டுகள் சரியாக இருக்கும். அவற்றில் ஆக்கிசன் உண்டு!! எனவே deoxyribose என்பதைக் குறையாக்சிச ரைபோசு என்று குறிக்கலாம். அல்லது குறைந்த ஆக்சிச ரைபோசு எனலாம். RNA என்பதை ரைபோ நியூக்ளியிக் காடி (ரைநிகா) என்று எழுதலாம். Nucleotide என்பதை நியூக்கிளியோட்டைடு (டைடு என்பது முகனை!! டைட்டு அல்ல. பொருளே மாறிவிடும்). இதேபோல Nucleoside என்பதும் -சைடு என்று முடிய வேண்டும் (சைட்டு அல்ல!!). நியூக்கிளியோசோம் சரியே. base என்பதைக் இங்கு அடிக்கூறு எனலாம். அடிக்கூறு இணை = base pair. pyrimidine, purine ஆகியவற்றைப் பைரிமிடைன், பியூரைன் என்றே அழைக்கலாம். Nucleic acid = கருக்காடி அல்லது நியூக்ளியிக் காடி.

--செல்வா 14:41, 31 மே 2011 (UTC)[பதிலளி]

நானும் இதை எண்ணிப் பார்த்தேன், "deoxy" என்பதை ஒட்சிசன் அகற்றப்பட்ட/நீக்கப்பட்ட எனும் பொருளில் தெளிவாக வருமாறு இன்னமும் கூறமுடியாதா? அடிக்கூறு இணை / இணை அடிக்கூறு இதில் எது சரியாக இருக்கும்?--செந்தி//உரையாடுக// 17:33, 31 மே 2011 (UTC)[பதிலளி]

Chromosome

தொகு
  • Chromatin =
  • chromatid = அரை நிறப்புரி / அரை நிறமூர்த்தம்
  • chromosome = நிறப்புரி
  • centromere= மையமூர்த்தம் ?
  • karyotype =
  • autosome= தன் நிறப்புரி
  • Diploid =இருமடியம்
  • haploid =ஒருமடியம்
  • hexaploid=அறுமடியம்
  • polyploid=பல்மடியம்
  • Ploidy = மடியநிலை
  • Mixoploidy=
  • Tetraploidy= நான்மடியம்
  • Euploidy =
  • Aneuploidy=

Transcrition / Translation

தொகு
  • Transcription = படியெடுப்பு ?
  • Translation = மொழிபெயர்ப்பு ?

innate immunity / adaptive immunity

தொகு

இவற்றிற்கு சரியான சொல்லாக அன்றி பொருளை விளக்கிய சொற்றொடர் கீழே. என்ன சொற்களைப் பயன்படுத்தலாம்?

  • innate immunity - பொதுவாக எல்லா வெளிப்பொருட்களையும் அழிக்கவல்ல நோயெதிர்ப்பு முறை
  • adaptive immunity - குறிப்பிட்ட நோய்க்காரணிக்கு எதிரான நோயெதிர்ப்பு முறை

--கலை 15:06, 11 மே 2011 (UTC)[பதிலளி]

இதற்கும் சரியான சொற்களைத் தந்தால் நல்லது.--கலை 08:39, 21 மே 2011 (UTC)[பதிலளி]

Stroke / Paralysis

தொகு

பேச்சு:பக்கவாதம் பக்கத்தில் Stroke இற்கு பக்கவாதம் பொருத்தமான தலைப்பு அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Paralysis ஐ 'முடக்குவாதம்' எனலாம் என நினைக்கின்றேன். தெளிவு தேவைப்படுகின்றது. உதவுங்கள்.--கலை 11:39, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]

Amyotrophic lateral sclerosis

தொகு

குருதி தொடர்பான கலைச்சொற்கள்

தொகு

Thrombosis

தொகு

ஆங்கிலத்திலுள்ள Thormbosis கட்டுரை இரத்தக்கட்டியடைப்பு என்ற கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் மேலும் இரு கட்டுரைகள் Thrombosis என்ற கட்டுரையை ஒட்டியே உள்ளது. அவையாவன: குருதி உறைதல் திரைப்புவாதை , படிம உறைவு. இவை மூன்றும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும். எந்த தலைப்பை தெரிவு செய்வது என அறிய விரும்புகின்றேன். --கலை 14:30, 2 மே 2011 (UTC)[பதிலளி]

[Greek, from thrombos, clot.] thromb =

  1. thromboembolism
  2. thrombogenic
  3. thrombophilia
  4. thrombophlebitis
  5. thromboprophylaxis
  6. clot : உறைகட்டி ?
  7. blood clot / Thrombus: குருதி உறைகட்டி ?

ஆய்வு

தொகு

thrombosis = குருதியுறைமை ----செந்தி 21:20, 5 மே 2011

இந்தச் சொல் coagulation = குருதி உறைதல் என்ற சொல்லுடன் குழப்பத்தைத் தராதா?

--கலை 10:35, 5 மே 2011 (UTC)[பதிலளி]

coagulation - ஒரு நீர்த்தன்மையான பொருள் கட்டியாக / திரளாக மாறும் செயன்முறை என்பதால் குருதி உறைதல் பொருந்தும், clot - குருதிக்கட்டி
thrombosis = (thromb- + -osis) = குருதிக்குழாய்களுள் குருதி உறைதல் தொடர்பானது, எனவே குழலியக்குருதியுறைமை எனலாம். ஆகவே
thromb = குழலியக்குருதிக்கட்டி--செந்தி//உரையாடுக// 22:24, 5 மே 2011 (UTC)[பதிலளி]

thromboembolism: =

தொகு
emboli / embolus என்பதை (plug) தக்கை[1] என்று சொல்லலாம். பிறிதொரு இடத்தில் இருந்து வந்து "தங்கி" இருந்து அடைபடுவதால் இச்செயன்முறையை (embolism) தக்குமை எனலாம். தக்கு + -மை - தக்குதல் என்றால் தங்குதல்[2] என்றும் பொருள் படும்.
எனவே thromboembolism: உறைகுருதித் தக்குமை (நான் மட்டும் ஆய்வது நன்றன்று..:) மொழிவல்லுனர்களும் இணைதல் சிறப்பன்றோ)
thromb = உறைகுருதி, குழலியக்குருதிக்கட்டி

--செந்தி//உரையாடுக// 22:18, 11 மே 2011 (UTC)[பதிலளி]

இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்கள்

தொகு
  1. thrombosis = (thromb- + -osis) = குழலியக்குருதியுறைமை
  2. coagulation : குருதி உறைதல்


Pneumothorax தமிழில் என்ன பெயர்?

தொகு

w:en:Pneumothorax என்ற இந்த நோய்க்குத் தமிழில் என்ன பெயர் வைக்கலாம்? விக்சனரியில் வளிமார்பகம் என்று இருந்தது. அது அவ்வளவு சரியா என்று தெரியவில்லை. எனவே உங்களிடம் ஆலோசனை கேட்கிறேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 14:28, 18 சூன் 2012 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் உள்ள பெயர் (பொதுவாக) மார்புக்கூடுள் காணப்படும் எனும் கருத்தைத் தந்தாலும், நுரையீரற் சவ்வுகளிடையே (உள்ள வெளியில்) வளி தேங்குவது என்று வருமாற்போல அமைவதே சிறந்தது.

நுரையீரற்சவ்விடை வளிம(த்தேக்க)ம் எனலாம். நுரையீரற்சவ்விடை வளிமம் போன்று நுரையீரற்சவ்விடை நீர்மம், நுரையீரற்சவ்விடைக் குருதி(hemothorax), நுரையீரற்சவ்விடை நிணநீர்(chylothorax), நுரையீரற்சவ்விடைச் சீழ் என்று அழைக்கலாம். "மார்பகம்" என்பது ஒரு உறுப்பு; வளிமார்பகம் என்பதில் வேறு கருத்து தொனிக்கின்றது, எனவே உங்களுடன் நானும் உடன்படுகின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 18:04, 18 சூன் 2012 (UTC)[பதிலளி]

சரியாக உள்ளது. சாதாரணமாக இருப்பதை விடவும் அதிகமாக இடத்தைப் பிடித்துக் கொள்வதால் நீங்கள் அடைப்பில் இட்டுள்ள தேக்கம் என்பதையும் சேர்க்கலாம். :) எனவே, pneumothorax = நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம் / நுரையீரல் சவ்விடை காற்றுத்தேக்கம் என்று மொழிபெயர்க்கலாம். :) நன்றி செந்தி. :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:33, 26 சூன் 2012 (UTC)[பதிலளி]

சொற்கள்

தொகு
  1. pneumothorax = நுரையீரல் சவ்விடை வளிமத் தேக்கம் / காற்றுத் தேக்கம்
  2. pyothorax =
  3. hydrothorax = நுரையீரல் சவ்விடை நீர்மத் தேக்கம் / நீர்த் தேக்கம்
  4. chylothorax =
  5. hemothorax = நுரையீரல் சவ்விடைக் குருதித் தேக்கம் / இரத்தத் தேக்கம்

Clinical Trials

தொகு

மருந்தை ஆராய்ச்சி செய்வதற்காக நடத்தப்படும் மருந்தக சோதனை.

Therapeutic trial

தொகு

உசாத்துணைகள்

தொகு
  1. [தக்கை-Tamil lexicon]
  2. [Tamil Lexicon]