விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/சட்டம்

இங்கு சட்டத்துறைசார்ந்த கலைச்சொற்களுக்கான பரிந்துரைகள், ஐயப்பாடுகள், வேண்டுகோள் ஆகியவற்றைத் தொகுக்கலாம். ஆய்ந்து முடிவடைந்த சொற்கள் அகரவரிசைப்படி ஆவணப்படுத்தப்படும்; இது இலகுவில் சொற்களைத் தேடுவதற்கு உதவியாக அமைகின்றது. உதவிப்பக்கத்தில் சொல்லாக்கத்திற்குத் தேவைப்படக்கூடிய சில வழிமுறைகள் அறியலாம் அல்லது பரிந்துரைகளைப் பதிவு செய்யலாம் . விக்கிபீடியாக் கட்டுரையில் புதிய சட்டத்துறை சொற்களைச் சேர்ப்போர் இங்கே அவற்றிற்கான விளக்கம், சொற்பிறப்பு போன்றவற்றைப் பதியலாம்.


கலைச்சொல் ஒத்தாசை   மருத்துவம்   உயிரியல்   இயற்பியல்   வேதியியல்   கணிதம்   தொழில்நுட்பம்   சமூக அறிவியல்   புவியியல்   சட்டம்    
தொகுப்பு

பழைய கலந்துரையாடல்களின் தொகுப்புகள்

சட்டம் வேறுபாடுகள்

தொகு

கீழ்வரும் ஆங்கிலச் சொற்கள் அனைத்துமே சட்டம் என்று மொழிபெயர்க்கிறோம். இவற்றிற்கான சிறப்புக் கலைச்சொற்கள் தேவை...

  • Law
  • Act
  • Statute
  • legislation
  • code (like Uniform Civil Code)

--மணியன் (பேச்சு) 00:30, 9 மார்ச் 2012 (UTC)

ஆங்கிலத்திலும் இப்பட்டியலில் உள்ள சொற்களை விளக்க இதில் உள்ள மற்ற சொற்களையே பயன்படுத்துகின்றனர்! இவை தவிர legal, regulation, precept, canon, rule, edict போன்ற பிற சொற்களும் உண்டு. தமிழில் சட்டம், விதி, ஒழுங்கு, நெறி, ஓத்து, யாப்பு, கட்டளை, திட்டம் என்பனவே இப்போதைக்குக் கூறமுடியும்

  • Law = சட்டம்
  • Act = சட்டவிதி
  • Statute = நிலைவிதி, யாப்புவிதி,
  • legislation = இயற்றுசட்டம்,
  • code (like Uniform Civil Code) = துறைப் பிரிவுச் சட்டம்; இயல்--செல்வா (பேச்சு) 03:09, 9 மார்ச் 2012 (UTC)
  1. code = சட்டமுறைமை
  2. Act = சட்டப்பிரிவு
  3. rule = சட்டவிதி
  4. illegal = சட்டமீறல்
  5. unlawful = சட்டத்திற்கு புறம்பானது.
  6. order = சட்ட ஆணை
(எ.கா)இந்தியச் (Indian law) சட்டத்தின், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவின்(Cr.p.c.Act) படி, கையூட்டுப்பெறுவது குற்றமாகும். கையூட்டுப் பெறுவது, சட்டமீறல்(illegal) என்று பணியாளர்களின் விதிகளில்(rule) ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. மாநில அரசும்,நடுவண் அரசும் இணைந்து, அனைத்து அரசுப்பணியாளர்களுக்கானச் சட்டமுறைமைகளை(code) சீர்படுத்தவேண்டும். அதனால் தற்பொழுது, பல்துறைகளில் இருக்கும், பணியாளர் சட்ட ஆணைகளின் (standing orders) முரண்பாடுகள் நீங்கும்.விவாகரத்தானவர்கள், மீண்டும் இணைவது சட்டத்திற்குப் புறம்பானது (unlawful) என, எச்சட்டமும் கூறவில்லை. பயனர்:தகவலுழவன்/கையொப்பம்