விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/தொழில்நுட்பம்

கலைச்சொல் ஒத்தாசை   மருத்துவம்   உயிரியல்   இயற்பியல்   வேதியியல்   கணிதம்   தொழில்நுட்பம்   சமூக அறிவியல்   புவியியல்   சட்டம்    

Application Software

தொகு

Application Program. Application Software. Application Programmers. Application Programming Interface. ஆகிய சொற்றொடருக்கு தமிழாக்கம் தேவை. அப்பிலிக்கேசன் சாப்ட்வேர் என்றால் ஒரு குறிப்பிட்ட தேவைக்காக உருவாக்கப்படும் மென்பொருளாகும். அதனால் இதை நாம் 'சேவைமென்பொருள்' அல்லது 'செயல் மென்பொருள்' என்று கூறலாமா? அல்லது இதைவிட சிறப்பாக ஏதாவது உள்ளதா?

பயன்பாட்டுச்செயலி என சுருங்கக் கூறலாம்

JDBC என்பதை தமிழில் கிராந்தயெழுத்து பயன்படுத்தாமல் எப்படி எழுதுவது?

செடிபிசி (JDBC) எனலாம்

Graphical User Interface

தொகு

Graphical User Interface - இதை தமிழில் மொழிபெயர்த்து உதவவும்.

Graphical User Interface என்பதை வரைகலை பயனாளரின் இடைமுகம் எனலாம்.

Ballistic Missile என்பதற்கு ஏற்ற தமிழ் சொல் தேவை

தொகு

ஒரு மாதத்திற்கு முன் சவுரியா ஏவுகணை என்ற கட்டுரையைத் துவக்கினேன். அதற்கு தேவையான Ballistic Missile என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் சொல் தெரியவில்லை. விக்சனரியில் தேடினேன்; அதில் Ballistic என்ற வார்த்தைக்கு எறியியலுக்குரிய எனும் தமிழ்ப்பதம் வந்தது. அப்படியானால் Ballistic Missile என்பதற்கு எறிகணை என்பது பொருந்துமா? (தமிழ் விக்கிப்பீடியாவில் சில இடங்களில் எறிகணை எனும் சொல்லை கண்டிருக்கிறேன்).--தினேஷ்குமார் (பேச்சு) 19:09, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சரியான தமிழ் சொல் தேவை

தொகு

Resource person ஒத்திகை தணிக்கை - நிறுவப்பட்ட கட்டுப்பாடுகள் எதிர்பார்த்த பயனைத் தருகின்றவா/தரக்கூடுமா என ஆய்தல்.--மணியன் (பேச்சு) 15:29, 6 மே 2012 (UTC)[பதிலளி]

Resource person என்பதை கருத்துகள் கூறும் வள நபர் எனலாம்.

கணினிச் சொற்கள்

தொகு
 • port - துறை ? படலை ? துறைமுனை (கணினியியல்).
port என்பது கணினியில் ஏதேனும் ஒரு கருவியை இணைக்கும் இடத்தைக் குறிப்பிடுவதுதானே? அதற்கு இணைவுமுனை என்ற சொல் பொருந்துமா?--தினேஷ்குமார் (பேச்சு) 19:02, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
port = துறை என்ற சொல் கணினியியல் அகராதி ஒன்றில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. port மென்பொருள் ports ஐயும் உள்ளடக்கும். --Natkeeran (பேச்சு) 19:18, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

Motion capture

தொகு
 • Motion capture = நகர்வுப் பிடிப்பு, இயக்கம் பிடிப்பு
 • Gesture recognition - சைகை விழித்துணர்தல்
 • dyneme - டைனிமி ( பாலிஎதிலின் )
 • Feature extraction - பண்புக்கூறு பிரித்தெடுத்தல்
 • image processing - படிமச் செயலி.
 • kinematics - இயக்கவியல்.

பரிந்துரை தேவை:

தொகு
 • Artificial Intelligence
 • செயற்கை அறிவாண்மை
 • செயற்கை அறிவாற்றல்
 • செயற்கை நுண்ணறிவு
 • செயற்கை அறிமை

செயற்திட்ட மேலாண்மை தொடர்பான சொற்கள்

தொகு
 • deliverable - விநியோகமுள்ள
 • program as in program managmenet: "A group of related projects managed in a coordinated way..." - நிரல்வு மேலாண்மையில் உள்ளபடியான நிரல்கள்:" ஆயத்தமான வழியில் நிருவகித்த தொடர்புடைய திட்டப்பணிகளின் குழு..."

Distributed computing என்பதை "விரவல் கணிப்பு" என்று குறிப்பிடுவதை விட "பங்கீட்டுக் கணிப்பு" எனச்சொல்லலாமா? ஏனெனில் விரவல் கணிப்பு எனும் சொல் pervasive computing என்பதற்குத்தான் சரியான மொழிபெயர்ப்பாக அமையும் அல்லவா?

யாராவது உதவுஙகளேன். deliverable என்ற செயலாக்கத்தக்க என பெயர்க்கலாம்

விநியோக்கணிப்பு என்ற சொல் பங்கீட்டுக் கணிப்பு என்பதைவிட பொருத்தமென்று தோன்றுகிறது.

மேலும் பங்கீட்டு என்பது sharing shared என்ற சொற்களுக்கு பயன்பட்டு வருகிறது.--செல்லப்பன் 15:02, 13 அக்டோபர் 2011 (UTC)

Cave automatic virtual environment

தொகு

காற்றாடி, காற்றாலை, காற்றுச் சுழலி

தொகு

--Natkeeran (பேச்சு) 02:48, 10 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

காண்க
 1. en:Propeller (marine),
 2. en:Propeller (aircraft),
 3. en:Impeller,
 4. en:Turbine இவை தமிழாக்கம் செய்யப்படவில்லை (புதிய சொல் தேவைப்படும்)- (எ-கா) en:Mechanical fan -மின் விசிறி --ஸ்ரீதர் (பேச்சு) 03:32, 10 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


சரியான தமிழ் சொல் தேவை

தொகு

pump என்பதற்கு தமிழாக்கம் தேவை. எனது எண்ணம் ஏற்றி என்பது சரியான சொல்

வணக்கம் சதீஷ். pump என்பதற்கு ஏற்றியை விட எக்கி (பெயர்ச்சொல்), எக்கு (வினைச்சொல்) என்பது பொருந்தும். இது எனது பரிந்துரை.--இராஜ்குமார் (பேச்சு) 20:21, 18 ஏப்ரல் 2013 (UTC)
எற்றி என்பது கூடுதல் பொருத்தமாக இருக்கலாம். --இராஜ்குமார் (பேச்சு) 20:23, 18 ஏப்ரல் 2013 (UTC)


இறைத்தல் என்ற தொழிலிலிருந்து ஆக்கப்பட்ட இறைபொறி என்பது பொருந்தலாம்.

--Kalaivanan S (பேச்சு) 05:53, 15 மே 2015 (UTC)[பதிலளி]

கணினிசார் சொற்பதங்கள் தமிழாக்கம்

தொகு

இப்பகுதியில் காணலாகும் தமிழாக்கங்களின் பொருத்தம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து உதவுமாறு வேண்டுகிறேன்.

 • End to End - 'முடிவுடன் முடிவையிணை' - இது குறித்த கருத்து பரிமாற்றங்களை இங்கு பார்க்கவும்.
 • Multi-paradigm programming language - 'பன்முக-கருத்தோட்ட நிரலாக்க மொழி'
 • Open source என்பதற்கு ஏற்கனவே 'திறந்த மூலம்' என்பது வழக்கில் உள்ள போதும், 'திறந்தவெளி' என்பது இன்னும் பொருந்துமா என்றறிய விழைகிறேன்.

--கலைவாணன் (பேச்சு) 13:40, 8 மே 2015 (UTC)[பதிலளி]

மேலும் சில: Network socket - பிணையகுழிவு? WebSocket - வலைகுழிவு?