வாருங்கள்!

வாருங்கள், தினேஷ்குமார், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--நந்தகுமார் (பேச்சு) 08:02, 29 செப்டம்பர் 2013 (UTC)


தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், தினேஷ்குமார்!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:38, 1 அக்டோபர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)

வருக தினேஷ்தொகு

தினேஷ் வணக்கம். நானும் பொறியியல் கல்லூரி மாணவன்தான். நான், சென்னையில் கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துவருகிறேன் :) உங்கள் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். என் நோக்கம் கொண்டவராக உள்ளீர்கள் நீங்கள். வாழ்த்துகள். நீங்கள் எந்தக் கல்லூரி என்று முடிந்தால் குறிப்பிடலாமே! :) முகநூலில் தொடர்புகொள்ள விருப்பம் என் பக்கம்: SuryaCEG -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 17:26, 5 நவம்பர் 2013 (UTC)

வணக்கம் நண்பரே. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. முகநூலில் தொடர்புகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் நான் முகநூலில் உலவுவது இல்லை. எதிர்காலத்தில் முகநூலில் இணைந்தால் நிச்சயம் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.--தினேஷ்குமார் (பேச்சு) 17:54, 5 நவம்பர் 2013 (UTC)
சரி தினேஷ் :) தங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி :) ஏதேனும் உதவி தேவைப்படின் என்னைத் தொடர்பு கொள்ளலாம் :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 18:02, 5 நவம்பர் 2013 (UTC)
சற்று நேரத்திற்கு முன் நான் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆவணப்படத்தைக் கண்டேன். அதில் தாங்கள் ஐநாடிக்ஸ் நிறுவனத்தில் பணி செய்ய தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தீர்கள், மகிழ்ச்சி. நானும் அதே நிறுவனத்தால் எனது கல்லூரியில் நடைபெற்ற நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.--தினேஷ்குமார் (பேச்சு) 18:35, 5 நவம்பர் 2013 (UTC)
  விருப்பம், (சைடு கேப்பில் சிந்து பாடிக்கிறேன்!) உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துகள்! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:37, 5 நவம்பர் 2013 (UTC)
நன்றி, தம்பி.--தினேஷ்குமார் (பேச்சு) 18:43, 5 நவம்பர் 2013 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வணக்கம், தினேஷ்குமார்! உங்களின் கட்டுரைகள் பயனுள்ளவையாகவும், விக்கிநடையில் சிறப்பாகவும் அமைந்துள்ளன. தொடரட்டும், உங்களின் நற்பணி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:58, 7 மே 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


  நன்றி
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. தினேஷ்குமார் (பேச்சு) 08:05, 14 மே 2014 (UTC)


ஒரு வேண்டுகோள்தொகு

வணக்கம் தினேஷ்குமார்! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:52, 17 மே 2014 (UTC)

உங்களின் கவனத்திற்கு...தொகு

வணக்கம். உங்களால் இயன்றால் en:List of members of the 16th Lok Sabha எனும் கட்டுரைக்கு இணையான தமிழ் கட்டுரையினை எழுதலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:02, 20 மே 2014 (UTC)


உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புதொகு


விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் தினேஷ்குமார்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:49, 30 திசம்பர் 2014 (UTC)