விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம்/தொகுப்பு 01

சொற்களைத் தேடிப் பார்ப்பதற்கு இலகுவாக ஆங்கில அகரவரிசையில் சொற்களின் தலைப்புக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

Appendix = Vermiform appendix தொகு

விக்சனரியில் குடல்வால் என்று தரப்பட்டுள்ளது. அதனையே பயன்படுத்தலாமா?--கலை 23:17, 21 மே 2011 (UTC)[பதிலளி]

குடல்வால் என்றே முன்பு பயன்படுத்தியதாக ஞாபகம்.--செந்தி//உரையாடுக// 18:33, 25 மே 2011 (UTC)[பதிலளி]

இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் சொல்

Base / Base pairs in DNA தொகு

டி.என்.ஏ யிலுள்ள base pairs க்கு விக்சனரியில் உள்ள சொல், இணைப்படி. இது பொருத்தமான சொல்லா? Base என்பதையும் எவ்வாறு குறிக்கலாம் என்பதை அறிய விரும்புகின்றேன்.--கலை 11:12, 29 மே 2011 (UTC)[பதிலளி]

இங்கு base எனும் சொல் தளம், அடிப்படை, ஆதாரம், தாங்குதல் என்னும் கருத்தில் வருகின்றது, காரம் என்று பொருள் கொள்ளல் கூடாது (தமிழ் நாடு பாடப்புத்தகத்தில் இவ்வகையான பிழை காணப்படுகின்றது), மூலம் (இணைமூலம்) என்ற பொருளும் சரியா என்பது சந்தேகத்துக்குரியது, தெரிந்தவர்களின் விளக்கம் தேவை. இணைப்படியில் உள்ள "படி" உகந்த கருத்தைத் தரவில்லை என்று கருதுகிறேன். இணை + அடி = இணையடி என்று வரலாம், ஆனால் இணையடி = வணங்குதல்; அல்லது இணைத்தளம் (இணையத்தளத்துடன் குழம்பலாம்) என்று அழைக்கலாம். இங்கு base என்பதைத் தூண் என்று கையாண்டால் இணைத்தூண் என்று அழைக்கலாம், ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் base என்பது வருகின்றபடியால் பொருத்தமான சொல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
pair என்பதை இரட்டை என்றும் கையாளலாம் என்பதால், இரட்டையடி என்று அழைக்கலாம் என்பது எனது இறுதிப்பரிந்துரை.
Nucleoside போன்றவற்றை தற்போதைக்கு அப்படியே உபயோகிக்கலாம், தேவையெனின் அவற்றின் கட்டமைப்பை வைத்துப் பெயரிடலாம் (இதற்கு முழுமையான ஆய்வு தேவை, நாள் அவகாசம் தேவை...).

முன்னர் படித்த தமிழ்ப் பெயர்களை மறந்துவிட்டேன் :(--கலை 12:46, 29 மே 2011 (UTC)[பதிலளி]

இங்கு base என்பது தாங்கும் கட்டமைப்பை சுட்டிக் காட்டுகிறது. தாங்கி, தாங்குகால்,

ஏந்தியிருப்பதால் "ஏந்தி" என்றும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

base pair = இணைதாங்கி / இணையேந்தி / இணைமூலம்

அடினைன் / அடினின் ஒரு கருவமிலத் தாங்கி / கருவமில ஏந்தி--செந்தி//உரையாடுக// 09:05, 30 மே 2011 (UTC)[பதிலளி]
நன்றி செந்தி. இணைதாங்கி, கருவமிலத் தாங்கி என்பவற்றைப் பயன்படுத்தலாம் என நினைக்கின்றேன்.--கலை 09:59, 30 மே 2011 (UTC)[பதிலளி]

Blood தொடர்பான சொற்கள் தொகு

Plasma / Serum= நீர்மம் / பாயம் ?? தொகு

’’’Blood plasma’’’ = ?? ’’’Blood serum’’’ = ?? தமிழ்ச் சொற்கள் தேவை. நீர்மம், பாயம் என்ற சொற்கள் பல இடங்களில் இரண்டிலும் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர்த்தல் நல்லது. --கலை 11:30, 5 மே 2011 (UTC)[பதிலளி]

செந்தியின் பரிந்துரை தொகு

Blood plasma = fibrinogen (நாரீனி) + Blood serum ;

Blood serum = (நாரீனி) இல்லாத plasma (நீர்மம் / பாயம்) உடலில் இயல்பாக இருப்பதில்லை, உடலுக்கு வெளியிலே குருதி உறைதலின் பின்னர் உருவாகின்றது.

serum (Latin) = wikt:whey சொல்லாக்கத்தில் கருதவேண்டியவை:

  • நாரீனி இல்லாதது;
  • உடலுக்கு வெளியிலே குருதி உறைதலின் பின்னர் (பெரும்பாலும் ஆய்வுக்கூடங்களில்)
fibrin = நார் / நாரி
Blood plasma = குருதி நீர்மம்
Blood serum = குருதியுறை நீர்மம் / குருதி உறைநீர்மம்
.--செந்தி//உரையாடுக// 20:10, 11 மே 2011 (UTC)[பதிலளி]

செல்வாவின் கருத்து தொகு

அ.கி மூர்த்தி அவர்களின் அறிவியல் அகராதி plasma என்பதற்கு "கணிமம்:அணுக்கள் இல்லாத குருதியின் பாய்மப் பகுதி" என்று கூறுகின்றது. கணிமம் என்பது இவ் அகராதி கூறும் முன்பே நெடுங்காலமாக உள்ள சொல். அதே அகராதி serum என்பதற்குத் தெளியம் என்கிறது. இதன் விளக்கமாக "தெளிவான நீர்மப் பாய்மம் அல்லது உறைந்த குருதியிலிருந்து பிரிந்த கணிமம் (ப்ளாஸ்மா). இது வெளிறிய மஞ்சள் நிற நீர்மம்" என்கிறது. எனவே கணிமம், தெளியம் என்பனவனவற்றையும் கருதலாம். --செல்வா 22:55, 18 மே 2011 (UTC)[பதிலளி]

கலையின் கருத்து தொகு

Blood Plasma என்பதற்கு கணிமம் என்பது பயன்படுத்தப்பட்ட சொல்லாக இருக்கலாம். ஆனால் எனக்கு குருதி நீர்மம் என்பது இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய சொல்லாகத் தெரிகின்றது. Blood serum என்பதற்கு குருதி உறைநீர்மம், குருதி தெளியம் இரண்டும் பொருத்தமாக, இருந்தாலும், குருதி தெளியம் எளிமையானதாகத் தோன்றுகின்றது. எனவே குருதி நீர்மம், குருதி தெளியம் ஆகிய இரு சொற்களையும் ஏற்றுக் கொள்ளலாமா?--கலை 08:08, 21 மே 2011 (UTC)[பதிலளி]

செந்தியின் கருத்து தொகு

குருதி நீர்மம், குருதித் தெளியம் போன்றவை பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு பலசொல் அமைவது போல, சில சந்தர்ப்பங்களில் கணிமம் பயன்படுத்தலாம். --செந்தி//உரையாடுக// 09:30, 21 மே 2011 (UTC)[பதிலளி]

இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் சொல் தொகு

  • Blood Plasma = குருதி நீர்மம் / குருதி கணிமம்
  • Blood serum = குருதி தெளியம்

Blood coagulation தொகு

இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல்

Cancer தொடர்பான சொற்கள் தொகு

புற்றுநோய், வீக்கங்கள், கட்டிகள்

பேச்சு:புற்றுநோய் தொகு

  1. Tumour - கட்டி, கழலை
  2. Cancer - புற்றுநோய்
  3. Malignant - கேடுதரு, Malignant tumour -கேடுதரு கட்டி (கேடுதரு கழலை) = புற்றுநோய்
  4. Benign - நோயி(ல்)லா, Benign tumour - நோயி(ல்)லாக் கட்டி (நோயிலாக் கழலை) , கேடில்லாக் கட்டி
  5. Blood cancer = Leukemia - குருதிப் புற்றுநோய்
  6. Neoplasm - புத்திழையம்
  7. Hematological Neoplasm - குருதியியல் புத்திழையம்
  8. Hematological malignancy - குருதியியல் புற்றுநோய்கள்
  9. Cell differentiation - உயிரணுத் திரிபு / சிறப்பணுத் திரிபு

-plasia தொகு

  1. Neoplasia - புத்திழையப் பெருக்கம்
  2. Hyperplasia - இழைய மிகைப்பெருக்கம்
  3. Metaplasia - உயிரணுத் திரிபு
  4. Anaplasia - உயிரணுத் திரிபு மீள்வு / உயிரணு முன்னிலை மீள்வு (திரிபடைந்த சாதரண உயிரணுக்கள் மீண்டும் பின்னோக்கிப் பழைய நிலை அடைதல், புத்திழையப் பெருக்கத்தில் அவதானிக்கலாம்.)
  5. Dysplasia - இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி
  6. desmoplasia - தொடுப்பிழையப் பெருக்கம்

கண்டு, கட்டி, கழலை தொகு

கட்டி போன்று வீங்கி இருப்பவைக்குரிய தமிழ்ச் சொற்கள் = கண்டு, கட்டி, கழலை; Tumour = கண்டு, கட்டி, கழலை; Neoplasm=புத்திழையம்; lump = கட்டி;

குறிப்புகள்:
  • tumour என்பது Neoplasm, ஆனால் வீக்கம் காணப்படும். tumour கேடுதருவதாக (Malignant ) அல்லது கேடில்லாததாக (Benign ) அல்லது premalignant (கேடுதருவதற்கு முதல் நிலை) இருக்கலாம்.
  • கேடுதரு கழலைகள் (Malignant tumour) யாவும் புற்றுநோய் (cancer) எனப்படும்.
  • tumour = cancer ; Malignant tumour = cancer

-oma விகுதி = (sarcoma, Angioma...) = கழலை என்று பயன்படுத்தலாம்

  • hematoma = குருதிக்கட்டி (குருதிக் கசிவு?)
  • hemangioma = குருதிக்குழலியக்கழலை

Denritic cells தொகு

இந்த சொல்லுக்கும் தமிழ் தேவை--கலை 12:10, 6 மே 2011 (UTC)[பதிலளி]

Dendritic cell என்பதையா கருதினீர்கள்?

dendrite என்றால் மரம்/ கிளை விட்ட அமைப்பு என்று பொருள் கொள்ளாலாம் எனும்போது "கிளையுரு உயிரணுக்கள்" எனலாம். --செந்தி//உரையாடுக// 20:50, 11 மே 2011 (UTC)[பதிலளி]

இவற்றைக் கிளையி உயிரணுக்கள் அல்லது கிளையிகள் எனலாம். கிளைசிகள் என்றும் கூறலாம். சுருக்கம் பேணவேண்டும். கிளையி உயிரணுக்கள் கிளைசிகள் எனப்படும் என்று வரையறை செய்தால் போதும். கவையி என்றும் சொல்லாம். கவை என்றால் பிரிந்தி கிளைப்பது. கவை = மரக்கிளை (கழக அகராதி). கவை என்பது பிரிவது, கிளைப்பது, பிளப்பு போன்ற பல சொற்களைச் சுட்டும். கவைத்தாள் என்பது நண்டு, பிளவுபட்ட கால் என்று பொருள்படும். இப்படிப் பல சொற்கள் உள்ளன. கவர் என்றாலும் பிரிவு. கவர்ப்பு என்றால் பலவாகப் பிரிதல். எனவே கிளை, கவை, கவர் போன்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டு சொல்லலாம். --செல்வா 23:13, 18 மே 2011 (UTC)[பதிலளி]

கிளையி உயிரணுக்கள் என்பதை ஏற்றுக் கொள்வோமா?--கலை 08:07, 21 மே 2011 (UTC)[பதிலளி]

கிளையி உயிரணுக்கள் நன்று, அதுவே பயன்படுத்தலாம். கவையி எனும் சொல் செல்வாவின் பரிந்துரைப்படி "Y" உருவத்தைச் சுட்டுவதற்குப் (மண்டையோட்டில் உள்ள பொருத்து) பயன்படுத்தியதாக ஞாபகம், எனவே கிளையி என்பதை இங்கு பயன்படுத்தலாம்.--செந்தி//உரையாடுக// 09:36, 21 மே 2011 (UTC)[பதிலளி]

இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் சொல் தொகு

Flow cytometry தொகு

நான் பயன்படுத்தியுள்ள சொல். ஆனால் சரியா எனத் தெரியாது. யாராவது தமிழ் கூறினால் உதவியாக இருக்கும்.

  • Flow cytometry - ஓட்ட குழியநுண் அளவியல்?

--கலை 15:02, 11 மே 2011 (UTC)[பதிலளி]

Flow cytometry என்பதில் உள்ள Flow என்பதைப் பாய்ம அல்லது பாய்மவழி எனலாம் ஆகவே பாய்ம உயிரணுவிய அளவியம் எனலாம்.--செல்வா 23:42, 18 மே 2011 (UTC)[பதிலளி]
, Flow cytometry = பாய்ம உயிரணுவிய அளவியம் என்பதை ஏற்றுக் கொள்வோமா?--கலை 08:37, 21 மே 2011 (UTC)[பதிலளி]

இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் சொல்

  • Flow cytometry = பாய்ம உயிரணுவிய அளவியம்

Immunity தொடர்பான சொற்கள் தொகு

கீழ் காணும் சொற்கள் - சரியா எனக்கூறவும் - நந்தகுமார் Immunology - எதிர்ப்பியல் Immune system - எதிர்ப்பு அமைப்பு Antigen - எதிர்ப்பி Antibody - எதிர்ப்பான் Immunity - நோயெதிர்ப்பு Vaccinology - தடுப்பாற்றலியல் Autoimmune diseases - தன்னெதிர்ப்பு நோய்கள் Immune complex - எதிர்ப்பு இணைவு

  • எனது உயிரியல் அறிவுக்கு எட்டியபடி அனைத்துச் சொற்களும் சரியானவையே நந்தகுமார். நீங்கள் விக்சனரியில் இவற்றைத் தேடிப் பார்க்கலாமே! விக்சனரி --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 10:36, 17 ஏப்ரல் 2011 (UTC)
சூர்யா, நந்தகுமார் இதனை விக்சனரி கோரப்பட்ட சொற்கள் பக்கத்தில் தான் இட்டிருந்தார். நான் தான், நமது உயிரியல் திட்டப்பயனர்களின் கருத்தைத் தெரிந்து கொள்ள இங்கு இடும்படி வேண்டுகோள் விடுத்திருந்தேன் (இங்கு ஆலமரத்தடியில் தற்போது உயிரியல் உரையாடல்கள் நடந்து கொண்டிருப்பதால், இதுவும் பல பேர் கண்ணில் படும் என்று நினைத்து)--சோடாபாட்டில்உரையாடுக 13:27, 17 ஏப்ரல் 2011 (UTC)

இலங்கையில் Immunology - நிர்ப்பீடனவியல், Immune system - நிர்ப்பீடனத்தொகுதி முதலான சொற்களைப் பயன்படுத்துகிறோம். இவை தூய தமிழ்ச் சொற்களா என்பது தெரியவில்லை.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 10:56, 17 ஏப்ரல் 2011 (UTC)

  • இலங்கை வழக்கில் உள்ள நிர் என்பது நிர்மூலம், நிர்தாட்சண்யம் போன்ற ஏராளமான சொற்களில் வரும் "இல்லை" என்னும் பொருள் தரும் சமசுக்கிருத முன்னொட்டு (இதனாலேயே நான் நிர்வாகம் என்பதை, நிருவாகம் என்று எழுதப் பரிந்துரைப்பது.. நில், நிற்பது என்பதால் நிறுவாகம் என்றும் சொல்லலாம்..). "-பீடனவியல்" என்பதும் பொருள் விளங்கவில்லை. எனவே இலங்கையில் வழங்கும் இச்சொற்களுக்கு மாறாக பிற நல்ல தமிழ்ச்சொற்கள் தேர்ந்தெடுப்பது நல்லது. கீழ்க்காணும் பரிந்துரைகளை எண்ணிப்பாருங்கள் (பலவும் நந்தகுமார் கூறியதே):
  • Immunology - நோயெதிர்ப்பியல்
  • Immune system - நோயெதிர்ப்பியம்
  • Antigen - எதிர்ப்பி, எதிர்க்கூறு
  • Antibody - எதிர்ப்பான்
  • Immunity - நோயெதிர்ப்பு, நோயெதிர்ப்பாற்றல்
  • Vaccinology - தடுப்பாற்றலியல், நோய்த்தடுப்பூட்டியல் (தடுப்பு ஊட்டு இயல்)
  • Autoimmune diseases - தன்னெதிர்ப்பு நோய்கள்
  • Immune complex - எதிர்ப்பு இணைவு, எதிர்ப்பிய அணைவம், எதிர்ப்பிய இணைமம்

--செல்வா 13:03, 17 ஏப்ரல் 2011 (UTC)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!!! நோயெதிர்ப்பியல் (infection and immunity) மற்றும் தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) ஆகியவற்றை உள்ளடக்கியிருப்பதால், எதிர்ப்பியல் (Immunology) என்பது சரி என்பது என் எண்ணம். மேலும் உரையாடுக. இச்சொற்கள் சரியாயின் இவை குறித்து எழுத விழைகிறேன் - நந்தகுமார்.

சூரிய பிரகாசுக்கு, தமிழ் விக்சனரியில் கீழ் கண்டவாறு பொருள் உள்ளது. சில சொற்கள் கடினமாக (அல்லது) பொருள் மயக்கமாக உள்ளதால் மேற்கூறிய சொற்களை எழுதியிருந்தேன்.

  • Immunology - தடுப்பாற்றலியல்; தடுப்பாற்றியல்; தடுப்புத்திறனியல்
  • Immune system - நோய் எதிர்ப்பு மண்டலம்;நோய் எதிர்புத் தொகுதி
  • Antigen - உடற் காப்பு ஊக்கி; எதிர்ச்செனி; பிறபொருளெதிரியாக்கி; எதிரியாக்கி
  • Antibody - உடற்காப்பு மூலம்; எதிர்ப்பொருள்; பிறபொருளெதிரி
  • Immunity - நோய் எதிர்ப்புத் திறன்; நோய்த் தடுதிறன்; நோய்த் தடைக் காப்பு
  • vaccinology -
  • Autoimmune diseases -
  • Immune complex - நோய்எதிர்ப்பிகளின் கூட்டு

- நந்தகுமார்

செல்வா கூறியதன்படி நிர்பீடனம் உகந்த சொல் அல்ல என்பது புரிகின்றது. நோயில் இருந்து காத்தல் ("protection from disease") என்பது ஆங்கிலத்தில் உள்ள கருத்து, எனினும் நோயை எதிர்த்தல் என்பதும் ஒன்று, செல்வாவின் பரிந்துரைகள் நன்று,
  • Immune system - நோயெதிர்ப்பியம்  , நோய் எதிர்ப்புத்தொகுதி என்றும் அழைக்கலாம் அல்லவா?
எனது பரிந்துரை:
  • Antigen - காவுடலாக்கி,
  • Antibody - காவுடல்
விளக்கம்:

Antigen என்பது antibody generator [Anti(body) + Gen] ; Antigen ஒன்று உடலில் புகுவதால் antibody உருவாக்கப்படுகின்றது. எதிர்ப்பி, எதிர்ப்பான் என்பது சரியே எனது பரிந்துரையின்படி சற்று இவற்றின் தொழிலை எண்ணிப்பார்த்தால்,

antibody என்பது உடலில் காக்கும் தொழில் புரிகிறது, மேலும் அவை சிறுதுணிக்கைகள் போன்றவை. எனவே எனது பரிந்துரை காக்கும் + உடல் = காவுடல் (இங்கு உடலைக் காக்கும் என்றும் எடுக்கலாம் அல்லது காக்கும் உடல் (protecting particle) என்றும் கருதலாம்).
antigen என்பது ஏற்கனவே கூறியது போல ( antibody generator [Anti(body) + Gen]) என்பதால் காவுடலாக்கி எனலாம்.--சி. செந்தி 20:31, 17 ஏப்ரல் 2011 (UTC)

செல்வாவின் விளக்கத்துக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 22:44, 17 ஏப்ரல் 2011 (UTC) ஆனால், செந்தி அவர்களே, antibody can be protective as well as pathogenic. எனவே, பொதுபெயரான "எதிர்ப்பான்" "எதிர்ப்பி" சரியாக இருக்கும் என எண்ணினேன் - நந்தகுமார்.

நீங்கள் antibody - autoimmune பற்றிக் கருதுகின்றீர்கள் என நினைக்கிறேன், அப்படி ஒரு கருத்து எழுமெனில் "எதிர்ப்பான்" "எதிர்ப்பி" என்பதற்கு எனக்கு மறுப்பேதும் கிடையாது.--சி. செந்தி 18:40, 19 ஏப்ரல் 2011 (UTC)


ஏற்கனவே இந்த சொற்களில் சிலவற்றைப்பற்றி வெவ்வேறு இடங்களில் கலந்துரையாடியுள்ளோம். அத்துடன் சில கட்டுரைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள கட்டுரைகளையும் பாருங்கள்.


--கலை 21:09, 19 ஏப்ரல் 2011 (UTC)

ஏற்கனவே இங்கு உள்ளது, மேலும் அவை பொருத்தமானவைகளாகத் தோன்றுகின்றது (பிறபொருளெதிரி என்று தமிழில் இலங்கையில் படித்ததாக ஞாபகம்!); குழப்பம் இல்லாமல் இவையே எல்லாக் கட்டுரைகளிலும் பயன்படுத்தல் நன்று எனக்கருதுகின்றேன்.--சி. செந்தி 21:23, 19 ஏப்ரல் 2011 (UTC)

இந்தக் கலந்துரையாடலை விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். --கலை 22:54, 19 ஏப்ரல் 2011 (UTC)

Immunohistochemical staining தொகு

நான் பயன்படுத்தியுள்ள சொல். ஆனால் சரியா எனத் தெரியாது. யாராவது தமிழ் கூறினால் உதவியாக இருக்கும்.

  • Immunohistochemical staining - நோயெதிர்ப்பு இழைய வேதி சாயமூட்டல்?

--கலை 15:02, 11 மே 2011 (UTC)[பதிலளி]

இந்த Immunohistochemical என்னும் சொல் 1953 இல் ஆங்கிலத்தில் பதிவாகியதாம் (நன்றி: ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி). இதனை நோயெதிர்பிழைய வேதி- எனக் கூறுவது பொருந்தும். எனவே கலை சொன்ன சொல் சரியே. -- செல்வா 23:42, 18 மே 2011 (UTC)[பதிலளி]
Immunohistochemical staining = நோயெதிர்ப்பிழையவேதி சாயமூட்டல் என்பதை ஏற்றுக் கொள்வோமா?--கலை 08:37, 21 மே 2011 (UTC)[பதிலளி]

’’’இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் சொல்’’’

  • Immunohistochemical staining = நோயெதிர்ப்பிழையவேதி சாயமூட்டல்

மெலனின் கரிய நிறத்தை வழங்கும் ஒரு நிறமி. இதற்கு தமிழ்ச் சொல்லாக்கம் தேவைப்படுகின்றது, விக்சனரியில்..:கரியம்; கருநிறம்வழங்கி;

எனது பரிந்துரைகள் பின்வருமாறு,
கரிமி
கருநிறமி
கரியமி
உங்கள் பரிந்துரைகள் அல்லது மேற்கூறிய எனது பரிந்துரைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க உதவுங்கள்.--செந்தி//உரையாடுக// 09:26, 29 மே 2011 (UTC)[பதிலளி]
கருநிறமி பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன்.--கலை 11:09, 29 மே 2011 (UTC)[பதிலளி]

Natriuresis & Natriuretic peptide தொகு

உப்புச்சிறுநீராக்கப் புரதக்கூறு அல்லது உப்புச்சிறுநீராக்கும் புரதக்கூறு (natriuretic peptide) இதில் எது மிகப் பொருத்தமாக இருக்கும்? உதவிக்கு நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 09:34, 8 பெப்ரவரி 2014 (UTC)

உப்புச்சிறுநீராக்கப் புரதக்கூறு அல்லது உப்புச்சிறுநீராக்கும் புரதக்கூறு எனும்போது இவைதான் சிறுநீரின் உப்புகளை உருவாக்குகின்றன என்று கருதவேண்டி இருக்க வாய்ப்புள்ளது. மேலும், natriuresisக்கு உப்புச் சிறுநீர் எனும் மொழிபெயர்ப்புப் பொருந்தவில்லை எனக் கருதுகிறேன். உப்பு எனும்போது சோடியம் மற்றும் ஏனைய உப்புவகைகளும் கருதப்படலாம். அறிவியல் சார்ந்த கட்டுரைகளில் natriuresis //natri(um) + (o)uresis // (சிறுநீரில் சோடிய அயன்கள் Na+ வெளியேற்றம்) எனும் கருத்தைத் தருமாறு இருத்தல் நன்று. "சோடியச்சிறுநீர்மை" என்று natriuresisஐக் குறிக்கலாம். சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு என்று natriuretic peptideஐ அழைக்கலாம். இவை எனது பரிந்துரைகள்.--சி.செந்தி (உரையாடுக) 20:42, 8 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி செந்தி!--நந்தகுமார் (பேச்சு) 05:38, 9 பெப்ரவரி 2014 (UTC)

Necrosis / Apoptosis தொகு

இந்தச் சொற்களுக்கும் தமிழ் தேவை. இரண்டும் 'கல இறப்பு' என்றாலும், அவற்றை எப்படி வேறுபடுத்தி எப்படி சொல்லை அமைப்பது?--கலை 14:31, 11 மே 2011 (UTC)[பதிலளி]

விளக்கங்கள்:
  • Apoptosis = அப்போப்டொசிஸ் திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பு; இயற்கையானது
  • Necrosis = புறக்காரணிகளால் ஏற்படும் இறப்பு. = விளைவு தீங்கானது

necrobiosis என்றும் சொல் உண்டு.--செந்தி//உரையாடுக// 22:58, 11 மே 2011 (UTC)[பதிலளி]

நீங்க கொடுத்திருக்கிறது பெரிய சொற்றொடராக இருக்கிறதே. சுருக்கமாக எப்படி இவற்றை அழைக்கலாம் என்றுதான் கேட்டேன். --கலை 14:07, 12 மே 2011 (UTC)[பதிலளி]
  • necrosis என்னும் சொல் முதலில் எலும்பு இழையம் அழிவுறுவதைக் குறிக்கவே 18, 19 ஆவது நூற்றாண்டில் குறித்தனராம் (ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி). இதன் பொருள் இழையம் அல்லது திசு அழிவு அல்லது நசிவு ஆகும். அ.கி மூர்த்தியின் அகராதியில் திசுநசிவு, திசுமடிவு என்று தந்திருக்கின்றார்கள். இழைமநசிவு அல்லது இழைமமடிவு என்றும் சொல்லலாம். ஆனால் Apoptosis என்பது தனி உயிரணுக்களின் இறப்பு (அது தன்னைத் தானே அதன் காலம் அல்லது பணி முடிந்ததாக "உணர்ந்து" அல்லது "அறிந்து" அழிப்பது.). இது ஏதோ ஒரு வகையில் உயிரணுவும் உட்கருவும் சூழ்ந்திருக்கும் கண்ணறை/உயிரணுக் கணிமமும் (cytoplasm) சிதைந்து நிகழ்வது. பின்னர் மற்ற உயிரணுக்களின் விழுங்கணு வளைப்பால் அகற்றப்படும். எனவே எனவே உயிரணு இறப்பு என்றே சொல்லலாம். உயிரணு தன்மடிவு என்றும் சொல்லலாம். --செல்வா 23:29, 18 மே 2011 (UTC)[பதிலளி]
Necrosis = இழையநசிவு, Apoptosis = உயிரணு இறப்பு என்பவற்றை ஏற்றுக் கொள்வோமா?--கலை 08:33, 21 மே 2011 (UTC)[பதிலளி]
இங்கு en:wikt:necrobiosis எனும் சொல்லும் கருத்தில் எடுக்கவேண்டியுள்ளது. necrobiosis மற்றும் apoptosis இரண்டும் ஏறத்தாழ ஒன்று மாதிரித் தோன்றினாலும் அவற்றுள் வேறுபாடுகள் உள, எனவே இறுதியாக ஏற்றுக்கொள்ள முன் இதனையும் கருத்தில் எடுத்தல் நன்று. (உசாத்துணைக்கு: http://www2.mozcom.com/~emcdvm/path02.html)--செந்தி//உரையாடுக// 09:50, 21 மே 2011 (UTC)[பதிலளி]

Necrobiosis க்கும், Apoptosis க்கும் இடையில் உள்ள வேறுபாட்டை என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் கொடுத்திருக்கும் உசாத்துணை இணைப்புக்கும் செல்ல முடியவில்லை. நீங்களே இவற்றுக்கான சரியான சொற்களைக் கூறி விடுங்களேன். --கலை 14:27, 22 மே 2011 (UTC)[பதிலளி]

இங்கே இன்னுமொரு சந்தேகம்... Cell death என்பதை இங்கே மூன்று வகையாகப் பிரிக்கின்றோம். இதில் Apoptosis ஐத்தானே 'உயிரணு இறப்பு' என்று சொல்கின்றோம். அப்படியானால், மூன்றையும் உள்ளடக்கிய cell death என்பதை எவ்வாறு அழைப்பது?
நல்ல சிக்கல் ஒன்றை ஆய்ந்துள்ளீர்கள்..cell death உயிரணு இறப்பு என்று கூறி அவற்றைப் பிரிக்கவேண்டும். விரைவில் இவற்ற்றுக்கான தீர்வுடன் வருகிறேன்.--செந்தி//உரையாடுக// 18:30, 25 மே 2011 (UTC)[பதிலளி]
  • Apoptosis, *Necrobiosis = இவைகளுக்கிடையேயான வேறுபாடு ஒவ்வொரு நூல்களுக்கிடையே வேறுபட்டு இருக்கின்றது, உருசிய நூலில் Necrosis இன் முதற்பகுதியே Necrobiosis எனக்குறிப்பிடப்பட்டுள்ளது, எனினும் Necrobiosis தனியாகவும் நிகழலாம் எனவும் வேறொரு நூலில் உள்ளது. இதை விடப் பற்பல அகரமுதலி, ஆங்கில, உருசிய நூல்கள் இடையே தெளிவாக விவரிக்கப்படவில்லை. எனவே இக்குழப்பம் தெளிவாகும் வரை இதனை (Necrobiosis) தவிர்த்து விடுதல் நன்று. உயிரணு தன்மடிவு என்று Apoptosis ஐ பயன்படுத்தலாம்.--செந்தி//உரையாடுக// 18:28, 31 மே 2011 (UTC)[பதிலளி]

இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் சொல் தொகு

  • Cell death = உயிரணு இறப்பு
  • Necrosis = இழையநசிவு
  • Apoptosis = உயிரணு தன்மடிவு


Phagocytosis / Phagosome தொகு

பரிந்துரைகள்: Phagocyte = தின்குழியம் ;

  • Phagocytosis --> Phagocyte + -osis = தின்குழியமை
  • Phagosome --> தின்குழியவுடல் அல்லது (இது ஒரு vacuole என்றபடியால்) தின்குழியவெற்றிடம் / தின்குழியப் புன்வெற்றிடம்
  • lysosome : lysis + -some = பிரிக்கும் + உடல் = பிரியுடல்
  • phagolysosome : தின்குழியப்பிரியுடல்

:---செந்தி//உரையாடுக// 22:31, 11 மே 2011 (UTC)[பதிலளி]

Phagosome உருவாகும்போது அதற்குள் விழுங்கப்பட்ட பொருட்களும் இருப்பதனால் வெற்றிடம் என்ற சொல்லைத் தவிர்க்கலாம் என்று நினைக்கின்றேன். தின்குழியவுடல் என்றே அழைக்கலாமே?--கலை 14:31, 12 மே 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறிய காரணத்தாலும் -some என்று முடிவதனாலும் அவ்வாறே (தின்குழியவுடல்) அழைத்தல் நல்லதுதான்.--செந்தி//உரையாடுக// 16:47, 12 மே 2011 (UTC)[பதிலளி]

இதற்கு (Phagocytosis) என்பதற்கு, அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி, விழுங்கணு வளைப்பு என்கிறது. பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன்.--செல்வா 23:33, 18 மே 2011 (UTC)[பதிலளி]
Phagocytosis என்பதற்கு விழுங்கணு வளைப்பும் பொருத்தமான, விளக்கம் தரும் சொல்லாகவே தெரிகின்றது.--கலை 08:35, 21 மே 2011 (UTC)[பதிலளி]

இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் சொல் தொகு

Signs and Symptoms தொகு

பொதுவாக நோய் அறிகுறிகள் என்று தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. காய்ச்சல், தலைவலி, இதயமுணுமுணுப்பு, போன்றவை இவற்றுள் அடங்கினாலும் ஆங்கிலத்தில் இதை Symptoms & Signs என்பர். Symptoms என்றால் நோயாளியால் உணரப்படும் நோயின் குறிகள், signs என்றால் மருத்துவரால் அறியப்படும் குறிகள். தமிழில் உள்ள அகரமுதலிகளில் Symptoms என்றாலும் சரி, signs என்றாலும் சரி நோய் அறிகுறிகள் என்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது, எனவே எனது பரிந்துரையின்படி

  • Symptoms : நோய் உணர்குறி (நோயாளியால் உணரப்படுவதால்...)
  • Signs : நோய் அறிகுறி (மருத்துவரால் அறியப்படுவதால்...)
என்று அனைத்து மருத்துவக்கட்டுரைகளிலும் காலப்போக்கில் மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரைகின்றேன். Symptoms & Signs என்று தனித்தனியாக சில இடங்களில் கொடுக்கவேண்டி உள்ளது. அனைத்துலக நோய்கள் வகைப்பாடு - 10 பட்டியல் முழுமை பெறவும் வார்ப்புரு ஒன்றைத் தமிழாக்கம் செய்யவும் இது அவசியமாகின்றது. உங்கள் பரிந்துரைகள், கருத்துக்கள்?--சி. செந்தி 13:24, 16 ஏப்ரல் 2011 (UTC)

இதுபற்றி நான் பல நாட்கள் யோசித்திருக்கின்றேன். ஆனால் எனக்கு இவற்றை சரியாக வேறுபடுத்திப் பெயரிட முடியவில்லை. உங்கள் பரிந்துரைகள் மிகவும் ஏற்புடையவையாகவே தோன்றுகின்றன. மிகவும் நன்றி செந்தி. --கலை 13:26, 16 ஏப்ரல் 2011 (UTC)

”நோய் அடையாளம்” என்று "signs" ஐக் குறிக்க இயலுமா? .--சோடாபாட்டில்உரையாடுக 13:43, 16 ஏப்ரல் 2011 (UTC)

அறிகுறி (ஒன்று இதுவா என தெரிந்துக்கொள்வதற்கான ஆரம்ப நிலை) அடையாளம் (ஒன்று இதுதான் என தெரியும் முழுமையான நிலை) அந்த வகையில் செந்தியின் சொற்கள் பொருத்தமானவை. --HK Arun 14:30, 16 ஏப்ரல் 2011 (UTC)

  • செந்தியின் பரிந்துரைகள் மிக நன்று! நோய்க்குறி என்பதற்கு ஈடான ஆங்கிலச் சொல் என்ன? உணர்குறி, அறிகுறி இரண்டுமே ஏறத்தாழ ஒரே பொருள் கொண்டவையே (symptoms and signs also have very similar meanings). யார் உணர்கிறார்கள், யார் அறிகிறார்கள் என்பதைக் கொண்டு பொருள் மாறுபடக்கூடும். நோயாளியே சில உடல் நிலைகளை தான் உணரும் உணர்வாக உணரமுடியும் (காந்துகின்றது, எரிகின்றது, வலிக்கின்றது, குமட்டல் ஏற்படுகின்றது..), ஆனால் கொப்புளம் உள்ளது, சிவந்து உள்ளது போன்றவற்றையும், பிறவற்றையும் அது சுட்டும் நிலையை அறிந்தவர் அறியத்தக்கனவாக இருப்பது அறிகுறி (மருத்துவர் அறியத்தக்க அறிகுறி, நோய் அறிகுறி) என்று கொள்ளலாம். ஆனால் இப்படி வலித்தால் இன்னது என்று நோயாளிகளும் நோயை (தன் போக்காக, இது தவறானதாகவும் அமையலாம்) அறிந்துகொள்ள உதவும். ஆகவே அறிகுறி, உணர்குறி என்பனவற்றை வழக்கால் இது இன்னது என்று துறைவழக்காக வேறுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும். --செல்வா 17:45, 16 ஏப்ரல் 2011 (UTC)
  • நோய் உணர்குறி, நோய் அறிகுறி என்று வேறுபடுத்துவது மிக்க நன்று. சொற்தேர்வுக்குப் பாராட்டுகள்!--பவுல்-Paul 18:23, 16 ஏப்ரல் 2011 (UTC)
அனைவருக்கும் மிக்க நன்றிகள்...--சி. செந்தி 19:59, 17 ஏப்ரல் 2011 (UTC)

Thrombosis தொகு

இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல்