பேச்சு:இரட்டைப்படைக் குளம்பி

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic கவை

விலங்கியல் சொற்களின் மூலம் = கிரேக்கம் + ஆங்கிலம் = Artiodactyla comes from Greek ἄρτιος (ártios), "even", and δάκτυλος, (dáktylos), "finger/toe"

4விரல்கள் இரண்டிரண்டாகவும், சமமானதாகவும் இருக்கிறது. முன்விரல்கள் குளம்பிகளாகவும், பின்விரல்கள் சிறிதாக வேறுபட்டும் இருக்கிறது. அந்த குளம்பிகளும், அவ்விலங்குகளின் உடல் எடைக்கு ஏற்றவாறு மாற்றமடைந்து, உடலின் எடையைச் சீராக தாங்குகிறது.

(என்னால் இங்கிருந்த காட்சியகம், இக்கட்டுரைப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளதால், இங்கு நீக்கப்படுகிறது.)-- உழவன் +உரை..

இதன் கீழ் வரும் விலங்குகளின் வாழிடம், உடல் எடைக்கு ஏற்ப, அவற்றின் குளம்பிகள் மாறுபட்டுள்ளதை அறியலாம்.பரிணாம ஒப்பீடு, 4விரல்களின் பரிமாண மாற்றங்களை நன்கு புலப்படுத்தும்.எனவே, இப்பிரிவை இரு சமக்குளம்பிகள் என்று அழைப்பதே பொருந்தமானது. பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

இலங்கையில் உயர்தர விலங்கியலில் இரட்டைக் குளம்பிகள் என்று பயன்படுத்துவதே வழக்கமாக உள்ளது. நாம் கொழும்பில் அப்படித்தான் படித்தோம். எனினும், செல்வாவின் இரட்டைப்படைக் குளம்பிகள் என்பது மேலும் பொருத்தமாக இருப்பதாகக் காண்கிறேன். மாறாக, இருசமக் குளம்பிகள் என்பது பொருத்தமாகப் படவில்லை.--பாஹிம் (பேச்சு) 23:56, 3 சூலை 2012 (UTC)Reply

எடையை ஏறத்தாழ ஈடாகவும் சீராகவும் பகிரும் தன்மை உடையது என்பதை விளக்கத்தில் தரலாம். இரட்டைப்படைக் குளம்பிகள் என்பதே பொருத்தமான பெயராக எனக்கும் படுகின்றது. ஆங்கிலத்திலும் "Even-toed Ungulates" என்று விரித்தும் கூறப்படுவதால், நற்தொடர்பும் இருக்கும். மற்றொரு வகையாக odd-toed ungulates (perissodactyls) என்று இருப்பதை ஒற்றைப்படைக் குளம்பிகள் என்பதும் பொருத்தமான இணையாக இருக்கும். பெயரை மாற்ற வேண்டாம்.--செல்வா (பேச்சு) 01:19, 4 சூலை 2012 (UTC)Reply
நீர்யானையின் பாதங்களைப் பார்க்கும் போது, இரு என்பதற்கு மாற்றாக இரட்டை என்று கூறுதலே பொருந்தும். இலங்கைச் சொல்லுடன், சமம் என்ற சொல்லும் இணைக்கப்படுதல் வேண்டும். இங்கு படை என்ற சொல் பொருத்தமற்றது. பெரும்பாலான இதன் விலங்குகளில் இரண்டு விரல்கள் மட்டுமே பெரும் பயனாகும் குளம்பிகளாகவும், மற்ற இரண்டு விரல்கள் சிறு குளிம்பிகளாகவும் உள்ளன. இருவித குளம்பிகளிலும், சமத்தன்மை காணப்படுகிறது. இரட்டை சமக்குளம்பிகள் எனலாமா?-- உழவன் +உரை..

சிலிக்கன்

வேளி குடி கொண்டவன் பொருள் என்ன

இரட்டைச்சம குளம்பிகள்

தொகு

இங்கு சமமாக இருப்பது எண்ணிக்கையே. எண்ணிக்கை வேறுபடும் போது, அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரேவித அளவுடையக் குளம்பிகள் தோன்றுகின்றன. அதாவது 4குளம்பிகள் இருந்தால், இரண்டு ஒரே அளவிலும், மற்ற இரண்டு வேறு அளவிலும் இருக்கின்றன. இவ்வாறாக 4குளம்பிகளும், இரு இணை (ஜோடி) குளம்பிகளாக இருக்கின்றன. இந்த இணைக்குளம்பிகளை, சமக்குளம்பிகள் என்றால் அனைத்து குளம்புகளும், சமம் என்றாகி விடும். எனவே, குளம்பிகள் என்ற சொல்லுக்கு முன், சிறு இடைவெளி அமைத்து, இரட்டைச்சம குளம்பிகள் அல்லது சம இரட்டைக்குளம்பிகள் என அழைப்பதே பொருத்தம். -- உழவன் +உரை.. 05:40, 9 சூலை 2012 (UTC)Reply

உவைமை

தொகு

//இரட்டைக் கப்பி அமைப்பு கொண்டிருப்பதால், பாதத்திற்கு இசைந்து கொடுக்கும் தன்மை அதிகம் (உவைமை கூடுதல்).// உவைமை என்றால் என்ன? அச்சொல் இலக்கியங்களில் தேடியும், பயன்படுத்தப்படவில்லை என அறிகிறேன். நயம் = நற்பயன், நெகிழும் தன்மை என்ற பொருளில் கூறப்படுகிறதா? உவைமை என்ற சொல், உவமை என்ற சொல்லால் தவறாக புரிந்துணர வழிவகுக்கும்.-- உழவன் +உரை.. 06:31, 10 சூலை 2012 (UTC)Reply

  • இரட்டை என்னும் சொல் 2, 4, 6 ... என வரும் எண்களைக் குறிக்கும். இக் கட்டுரைக்கு இரட்டை என்னும் சொல்லினம் எதுவும் பொருந்தாது. கவட்டை என்பது பொருத்தமான சொல். முனிவர்கள் கை வைத்திருக்கும் கவட்டையும், தாய்மார் களி கிண்டும்போது பானை ஆடாமல் இருக்க அழுத்தில் பிடிக்கும் கோலையும் கவைக்கோல் என்பர். கவர்படு பொருள்மொழி என்பது இரு பொருள் படும் சொல்லைக் குறிக்கும் இலக்கணக் குறியீடு. இவற்றை எண்ணிப் பார்த்து,
கவைக்குளம்பி எனப் பெயரிடலாம். --Sengai Podhuvan (பேச்சு) 01:41, 11 சூலை 2012 (UTC)Reply
எளிமையான சொல்லை, நினைவு படுத்தியமைக்கு நன்றி. பிறரின் கருத்துகளுக்கு பிறகு மாற்றம் செய்ய எண்ணுகிறேன். கவைக்குளம்பி உயிரினங்களில் பிரிவுகள் இருக்கின்றன.அவை பற்றிய கட்டுரை விரிவாக்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ளேன். தொடர்வோம்.வணக்கம்.-- உழவன் +உரை.. 02:15, 11 சூலை 2012 (UTC)Reply

கருத்துகள்

தொகு
  • ஒற்றைபப்டை, இரட்டைப்படை என்பன நன்கு அறிந்த சொற்கள். இங்கு படை என்பது அணி, வரிசை என்னும் பொருளில் பயன்படுகின்றது. 2,4,6,8,10 முதலானவை இரட்டைப்படை எண்கள். 1,3,5,7,9,11 முதலானவை ஒற்றைப்படை எண்கள். சில விரல்கள் அதிகமாக, அல்லது வேறுவிதமாகப் பயன்படுகின்றன என்பன இங்கு உயிரியல் வகைப்பாட்டில் கருத்தில் கொள்ளப்படவில்லை. நம் கையில் கட்டைவிரலின் அமைப்பும் பயனும் வேறாகும், என்றாலும் நம் கையில் 5 விரல்கள் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா? இங்கு குறிப்பிடப்படுவது இரட்டைப்படைக் குளம்பிகள். படை என்னும் சொல் தேவை என்றுதான் தோன்றுகின்றது (ஏனெனில் இரண்டு, நான்கு "விரல்களை"க் குறிக்கும்படியாக இருக்க வேண்டும்). --செல்வா (பேச்சு) 02:38, 11 சூலை 2012 (UTC)Reply
  • உவைதல் என்றால் நகர்தல். உவையும் என்றால் பளு அல்லது எடை அதிகமாக இருந்தால், அடியே முட்டுக்கொடுத்திருக்கும் கட்டைகள் நகரும் அல்லது நகர்ந்துகொடுத்துவிடும் என்பதை உவையும் என்பர். உவைஞ்சுக்கொடுக்கும் என்பர் பேச்சுவழக்கில். இதற்கும் உவமைக்கும் ஏதும் தொடர்பில்லை. உகப்பு வேறு உகைப்பு வேறு. --செல்வா (பேச்சு) 02:38, 11 சூலை 2012 (UTC)Reply
  • தலைப்பைக் கவைக்குளம்பி என்று மாற்றுவது பொருந்தாது. தலைப்பை அருள்கூர்ந்து மாற்றவேண்டாம். கவை என்பது கிளைத்து இருக்கும் இரண்டு என்பதை மட்டுமே குறிப்பது, நான்கு விரல்கள் இருப்பதைக் குறிக்கப் பயன்படாதது. ஒட்டகத்துக்குக் கவை பொருந்தும், ஆனால் காட்டுப்பன்றி, செம்பழுப்பு மான் (red deer) போன்றவைக்கு நான்கு விரல்கள் உண்டு எனவே பொருந்தாது. இரட்டைப்படை என்பது எ|ளிமையான சரியான சொல், ஏன் மாற்றவேன்டும் என்பது விளங்கவில்லை! --செல்வா (பேச்சு) 02:38, 11 சூலை 2012 (UTC)Reply

கவை

தொகு
 
பல விரல்கள்..

கவை என்பது பல்பொருள் ஒரு மொழி. இதுபற்றி விக்சனரியில் விரிவாக்க வேண்டும்.இருப்பினும், Forked stick- கவைக்கோல்.கவைக்கோலில் 2க்கும் மேற்பட்ட விரல்கள் உள்ளன. கானவன் கவைபொறுத்தன்ன (அகநானூறு. 34). படைஎன்ற சொல் தேவையற்றது. இலங்கையில் கற்பிக்கப்படும் சொல் சிறப்பாக, எளிமையாக உள்ளது. அதனுடன் சம ம் என்ற சொல் இணைத்தல் வேண்டுமா? கூடாதா? என்பதேயே நாம் சிந்திக்க வேண்டும். ஒற்றை மாட்டுவண்டி, இரட்டை மாட்டுவண்டி என்று சொல்வது போல, ஏன் சொல்லக்கூடாது என்றே நான் சிந்திக்கிறேன்.-- உழவன் +உரை.. 02:58, 11 சூலை 2012 (UTC)Reply

கவை என்பது இரண்டுக்கும் மேல் உள்ள "விரல்களை" குறிக்கும் என்றே நீங்கள் சொல்வதுபோல் இருந்தாலும், இரட்டைப்படை என்பதைக் குறிக்காது. ஒற்றைப்படையான எண்ணிக்கைக்கும் பொருந்தும் அல்லவா (நீங்கள் பொருந்தும் என்று காட்டியுள்ள முள்கரண்டியில் மூன்று "விரல்கள்" உள்ளன) ? படை என்பது அணி, வரிசையைக் குறிப்பது என்று மேலே குறிப்பிட்டுள்ளேன். --செல்வா (பேச்சு) 03:11, 11 சூலை 2012 (UTC)Reply
//கவை என்பது கிளைத்து இருக்கும் இரண்டு என்பதை மட்டுமே குறிப்பது, நான்கு விரல்கள் இருப்பதைக் குறிக்கப் பயன்படாதது. //

என்ற கூற்றுக்காகவே படத்தைக் காட்டினேன். நீங்கள் ஒரு சொல்லுக்கு குறிப்பிட்ட பொருளை மட்டும் வலியுறுத்துகிறீர்கள்.தமிழ் விரியக்கூடியது;நெகிழக்கூடியதல்லவா?-- உழவன் +உரை.. 06:09, 11 சூலை 2012 (UTC)Reply

αρτιος + δακτυλος

தொகு
  1. Artiodactyla(αρτιος +δάκτυλος) என்ற சொல்லை உருவாக்கிய அறிஞர், தமது தாய்மொழியான ஆங்கிலத்தை விட்டு, இச்சொல்லை பண்டைய கிரேக்க மொழியில் இருந்து உருவாக்கினார். ஏனெனில்,அன்று இலத்தீனியத்தில் குறிப்பிடுவது அக்கால அறிஞர் முறை என்பதால், அம்மொழியில் உருவாக்கியுள்ளார். எனவே, Artiodactyla என்பது ஆங்கிலச் சொல் என்பது தவறு. அதற்கு சமமாக உள்ள ஏறத்தாழ ஆங்கில மொழிபெயர்ப்பு Even-toed ungulate என்பதைச் சொல்கின்றனர்.
  2. அம்மூலச்சொற்களில் ஒன்றான, αρτιος என்பது இரட்டைபடை எண் என்று மட்டுமே வலியுறுத்துவது பொருந்தாது. அம்மூல மொழி தொடுப்பை, எடுகோளாக கட்டுரையிலும் கொடுத்துள்ளேன். அப்படி இருந்தும், பொருளைக் குறுக்குவது எப்படி சரியாகும்?
  3. இலங்கையில் நமக்கு முன்னே தமிழ்அறிஞர் இரட்டைக்குளம்பிகள் என்ற சொல்லை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அதனோடு படை(even) என்ற சொல்லை விட, சமம்(even) என்ற சொல் இணைப்பதில் என்ன தவறு?
  4. இரட்டைபடை என்றால் 2,4,6,8,10 என்ற முடிவிலியை உணர்த்துகிறது. இங்கு குளம்பிகளாக மாறியது4விரல்களே.அதில் இரண்டு மட்டுமே அனைத்து வகை குளம்பு உயிரினங்களிலும் ஓங்கியுள்ளது.
  5. உயிரியல்தமிழ் வளர்க்க, ஆங்கிலம் ஒரு பாதை மட்டுமே. மூலமொழியே ஊர். பாதை ஊராகாது.மேலும், ஆங்கிலச் சொல்லையோ அல்லது பிற சொல்லையோ விளக்குவது என்பது கட்டுரையின் நோக்கம் அன்று. அப்படி செய்தால் அது கட்டுரையாகாது.எந்த சொல்லை விளக்குவதற்கும் சொற்பிறப்பு என்ற கட்டுரைப் பகுதியைப் பேணுவோம்.தமிழ்நடை வளர்ப்போம்.தனிநடை தள்ளுவோம். தமிழில் கற்றுத்தர முயல்வோம். ஏற்கனவே முயன்றோருக்கு கைகொடுப்போம்.-- உழவன் +உரை.. 05:57, 11 சூலை 2012 (UTC)Reply

இப்படியெல்லாம் விவாதிப்பதை விட இலங்கை வழக்குச் சொற்களையே ஒற்றைக் குளம்பிகள் என்றும் இரட்டைக் குளம்பிகள் என்றும் பயன்படுத்தலாமே.--பாஹிம் (பேச்சு) 07:31, 7 மார்ச் 2019 (UTC)

Return to "இரட்டைப்படைக் குளம்பி" page.