விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/உயிரியல்/தொகுப்பு 01

Exocytosis and Endocytosis

தொகு

இந்தச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் தேவை. தமிழ்விக்சனரியில் உள்ள சொற்கள் பொருத்தமாகத் தெரியவில்லை.

மறுமொழி

தொகு
Exocytosis: புறக்குழியமை
Endocytosis: அகக்குழியமை
--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 14:25, 15 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஆக்டினோபாக்டீரியாக்கள்

தொகு

பேச்சு:ஆக்டினோபாக்டீரியாக்கள்

ஆக்டின் - கீற்று, கற்றை, தூலம், விட்டம் என்னும் பொருள் தரக்கூடிய வார்த்தையாகும். மேலும், ஆக்டின் என்பது நூலிழைகளைக்குறிக்கும். ஆக்டின் எனப்படும் கல நார், கலம் அதன் தன்மையில் இருக்க உதவுகிறது. ஆக்டின் இழைகள் கலச்சட்டகமாக இருந்து கலத்தின் வலிமையைக் காக்கிறது.

பெயர்க்காரணம்: ஆக்டினோபாக்டீரியா என்பது பூஞ்சைகளைப்போல் உள்ள நுண்ணுழையாட்களாகும். நுண்பூஞ்சைகள் பெற்றிருப்பதுப்போல் இழைத்தன்மை கொண்ட உருவமைப்பைப் பெற்றவை. விவாதியுஙகள்.

நன்றிகளுடன். --சிங்கமுகன் 09:40, 4 மார்ச் 2011 (UTC)

இழைபாக்டீரியாக்கள் என்ற சொல் பொருத்தமாக இருப்பதாகவே தோன்றுகின்றது.--கலை 09:04, 21 மே 2011 (UTC)[பதிலளி]

en:Cricket_(insect) எனும் பூச்சிக்கு தமிழ் என்ன? grasshoper (வெட்டுக்கிளி) வேறு cricket வேறு அல்லவா?.--செந்தி//உரையாடுக// 15:33, 28 மே 2011 (UTC)[பதிலளி]

தமிழில் சிள்வண்டு, சில்லிவண்டு, சுவர்க்கோழி என்று பரவலாக அறியபப்டுபவை. இவை தவிர, சிதடி, நெடி, நிலப்பூச்சி, சீரிகை, சில்லி, சில்லிகை, சிமிலி, சுல்லிகை என்னும் சொற்களை இலக்கியங்களிலும் அகரமுதலிகளிலும் காணலாம். --செல்வா 17:24, 28 மே 2011 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா.--செந்தி//உரையாடுக// 18:40, 28 மே 2011 (UTC)[பதிலளி]

சமநுகம், இதரநுகம் என்றால் என்ன?

தொகு

சில சொல்லாட்சிகளை விளக்க வேண்டியிருக்குமோ? நுகம் என்பது சரியான சொல்லாட்சியா? இங்கே என்ன பொருளில் ஆளப்பட்டுளது என்று புரியவில்லை. --செல்வா 02:08, 1 பெப்ரவரி 2012 (UTC)

பல்லுருத்தோற்றத்துக்கான சொடுக்கி என்னும் பகுதியில் வரும் "இருமடிய நிலையில் உள்ள மனிதரில் XX சமநுகம் ஆணையும், XY இதரநுகம் பெண்ணையும் உருவாக்குகின்றது. " என்பதன் பொருள் என்ன?--செல்வா 02:11, 1 பெப்ரவரி 2012 (UTC)

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இந்த இடத்தில் சமநுகம், இதரநுகம் என்ற சொற்கள் பொருத்தமற்றவை. அவற்றை மாற்றி விடுகின்றேன். நுகம் என்பது சரியான சொல்லாட்சியா எனத் தெரியவில்லை. Zygote என்பதை எப்படிக் குறிப்பிடுவது? நாம் படித்தது நுகம் என்றே. அத்துடன் Homozygote, heterozygote என்ற சொற்களுக்கு தமிழ் விக்சனரியிலும், மரபியலில், சமநுகம், இதரநுகம் என்ற சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் படித்ததும் அவ்வாறே. --கலை 11:06, 2 பெப்ரவரி 2012 (UTC)

கருக்கட்டப்பட்ட முட்டை, நுகம் எனப்படும் என நானும் படித்திருக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் 11:24, 2 பெப்ரவரி 2012 (UTC)

ஆம். அதுவேதான். நுகம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை ஆக்கவும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். கருக்கட்டல் மூலம் ஆண், பெண் புணரிகள் இணைந்து உருவாகும் முதற்கலம் நுகம் எனப்படுகின்றது. நுகத்திற்கு வேறு சொல் உள்ளதா என்பது தெரியவில்லை. சில இடங்களில் கருவணு என இருந்ததாக நினைவு. ஆனால் பொருத்தமான சொல்லா எனத் தெரியவில்லை. --கலை 12:29, 2 பெப்ரவரி 2012 (UTC)

கலை, சில ஆண்டுகளுக்கு முன்பு இது பற்றி பேச்சு:உயிரணு என்னும் பக்கத்தில் விரிவாக உரையாடியிருக்கின்றோம். சைகான் (zygon) என்றால் கிரேக்க மொழியில் நுகம் (yoke) . இதிலிருந்து தமிழில் நுகம் என ஆக்கியுள்ளனர் என நினைக்கின்றேன். yoke-நுகம் என்பது பூட்டுவது என்றாகும். இது ஓரளவுக்குப் பொருந்தும் (கிரேக்கச்சொல் சுட்டும் பொருளோடு தொடர்பு படுத்தினால்). ஆனால் Zygote என்பதற்கு அ. கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி "கருவணு: முட்டையும் சிதலும் சேர்வதால் உண்டாகும் அணு" என்று கொடுத்துள்ளார்கள். புணரியணு என்றும் ஒரு சொல் கருவணுவுக்கு ஈடாகத் தருகிறார்கள் (பிற இடங்களிலே). "முளையணு, புணரணு, சினையணு, துளிரணு என்றும் கூறலாம், ஆனால் கருவணு என்பதே நன்றாக இருப்பதாக நினைக்கின்றேன்." என்று திசம்பர் 2008 இல் நிகழ்ந்த உரையாடலில் கூறினேன்.

Homozygote என்பதற்கு ஆக்ஃசுபோர்டு அகரமுதலி, "A diploid individual that has identical alleles at one or more genetic loci." (OED) என்கிறது. எனவே இது ஒத்த இணைமாற்றுக் கருவணு என்னும் பொருள் தருகின்றது. அ.கி மூர்த்தியின் அகராதி allele என்பதற்கு "இணைமாற்று" என்கிறது. அதாவது அல்லீல் என்பது மரபணுவின் ஒரு மாற்றுரு (இணையாகக் கருதப்படும் மாற்றுரு). எனவே ஒத்தினக் கருவணு என்பது Homozygote ஆகக் கருதலாம். heterozygote என்பது கலப்பினக் கருவணு. zygosis என்பதைப் புணர்ச்சி என்றோ கருப்புணர்ச்சி என்றோ கருவொன்றல் என்றோ கூறலாம். நுகம் என்பது இலங்கையில் உள்ள ஆட்சி போல் தெரிவதால், இருவேறு சொற்கள் தர வேண்டியிருக்கலாம் (கருவணு, நுகம்). கருவணு என்பது பொருள் நன்கு சுட்டுவதாக எனக்குத் தோன்றுகின்றது. இங்கே homo,hetero என்பதை, ஓரின (அல்லது ஒத்தின), கலப்பின என்று கூறலாம் என்று நினைக்கின்றேன்.--செல்வா 12:45, 2 பெப்ரவரி 2012 (UTC)
அப்படியானால் Zygote இற்கு கருவணு, நுகம் ஆகிய இரு சொற்களையும் பயன்படுத்தலாம். கருவணு என்ற தலைப்பை கட்டுரைத் தலைப்பாகக் கொள்ளலாம். நுகம் என்ற சொல்லும் ஏற்றுக் கொள்ளப்படுவதனால், Homozygote, Heterozygote இற்கு சமநுகம், இதரநுகமும் ஏற்றுக் கொள்ளப்படலாம்தானே?
//புணரியணு என்றும் ஒரு சொல் கருவணுவுக்கு ஈடாகத் தருகிறார்கள் (பிற இடங்களிலே).// இது பொருத்தமற்றதாகவே தோன்றுகின்றது. காரணம். முட்டை, விந்து உயிரணுக்களே புணரிகள். அவை இரண்டும் இணைந்து ஒருவாகும் உயிரணுவே Zygote. எனவே Zygote ஐ புணரியணு என்பது பொருத்தமில்லை என்றே தோன்றுகின்றது. முட்டை, விந்து கருக்கட்டலால் உருவாதலினால் கருவணு என்பது பொருந்துகின்றது.
Allele என்பதனை எதிருருக்கள் என்று குறித்து ஏற்கனவே கட்டுரை ஆக்கியுள்ளேன். ஒரு நிறப்புரியின் குறிப்பிட்ட ஒரு மரபணு இருக்கையில் அமைந்திருக்கக் கூடிய எதிரான (அல்லது ஒன்றுக்கொன்று மாற்றாகக் கருதப்படக் கூடிய) மரபணு வடிவங்கள்/உருவங்கள் என்பதனால் எதிருரு என்ற சொல்லும் சரியாகவே தோன்றுகின்றது.பயனர்:Kalaiarasy
கலை, நுகம் என்பது பொருத்தமாக நீங்கள் நினைத்தாலும் சமநுகம், இதரநுகம் பொருந்தாததாகவே நினைக்கின்றேன். ஏனெனில் இதர என்றால் "etc." அது போன்ற பிற பல என்பதாகப் பொருள் தரும். சமநுகம் என்பதும் பொருத்தம் இல்லை. சமம் என்பது ஈடு ஒன்றுக்கு ஒன்று ஈடு என்னும் பொருள். ஒரே வகை என்னும் பொருள் தராது. அல்லீல் என்பதற்கு எதிருரு என்பதும் சற்று நெருடுகின்றது. காரணம் எதிர் என்றால் opposite, oppose என்பது போன்ற பொருள் தருவது. மாற்று என்பது alternative என்னும் பொருள் தருவது. எண்ணிப்பாருங்கள். மற்றவர்களும் கருதிப்பார்க்க வேண்டும். புணிரியணு என்பது புணர்ந்தகூட்டு என்றும் பொருள்தரும் (இதனைப் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லவில்லை, பொருள் சொல்கின்றேன்; புணரும் அணு என்றும் பொருள் தருவதால் குழப்பம் தரலாம்). ஒத்தின அல்லது ஓரினக் கருவணு, கலப்பினக் கருவணு என்பன என் தேர்வுகள் (நுகமமென்று பயன்படுத்தினாலும், ஓரின நுகம் கலப்பின நுகம் என்பது பொருந்தும்)--செல்வா 14:46, 2 பெப்ரவரி 2012 (UTC)

Homozygote, Heterozygote இற்கு ஒத்தினக் கருவணு, கலப்பினக் கருவணு எனப் பயன்படுத்தலாம். அடைப்புக்குறிக்குள் சமநுகம்/ஓரின நுகம், இதரநுகம்/கலப்பின நுகம் என்பவற்றைக் கொடுக்கலாம். அவ்வகையாக படித்தவர்கள் அடையாளம் காண இலகுவாக இருக்கும். புணரும் அணுக்கள் என்றும் பொருள் வருவதனால், புணரியணு என்பது நிச்சயம் குழப்பம் தருவதாகவே தோன்றுகின்றது. எனவே அதனைத் தவிர்க்கலாம்.பயனர்:Kalaiarasy

Homozygote, Heterozygote

தொகு
  • Homozygote - ஒத்தினக் கருவணு (சமநுகம்/ஓரினநுகம்)
  • Heterozygote - கலப்பினக் கருவணு (இதரநுகம்/கலப்பினநுகம்)
  • கருவணு என்பது விந்தணு,அண்டம் இரண்டையும் குறிக்கும் பொதுச் சொல்.zygote இரண்டும் கலந்த கூட்டு. இதற்கு பள்ளிப் பாடநூல்களிலும் பட்டப் பாடநூல்களிலும் கருமுட்டை என வழங்கப்பட்டு வருவதால் அதை மாற்றவெண்டாமெனக் கருதுகிறேன்.
  • மேலும் இரண்டு சொற்களையும் இங்கு உடன் கருதி பார்த்தல் நல்லது.

stem cell-முகிழணு; முகிழ்கலம்; முகிழ் கருவணு. embrio-முதிரணு;முதிர் கருவணு;முதிர்கலம்

  • homozygous-ஒருமய; heterozygous-பன்மய ஆகியவை ஏற்கெனவே விலங்கியல் அறிஞர்களிடம் வழக்கில் உள்ளவை.
  • எனவே,Homozygote - ஒருமயக் கருமுட்டை;இதன்வழி உயிரி ஒருமய உயிரியாகும். Heterozygote- பன்மயக் கருமுட்டை;இதன்வழி உயிரி பன்மய உயிரியாகும்.

உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:00, 9 சூன் 2015 (UTC)[பதிலளி]

காழ்

தொகு

காழின் பாகங் களான Tracheid, vessel elements என்பவற்றுக்கான தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள் என்னவென அறியத்தர முடியுமா? இலங்கையில் இவற்றுக்காக முறையே குழற்போலி, காழ்க் கலன் மூலகம் என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரச்சினை என்னவென்றால் Tracheid எனக் குறிப்பிட்டு காழ்க்கலன் என்றொரு கட்டுரை உள்ளது. இது எமது பயன்பாட்டுக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. --G.Kiruthikan (பேச்சு) 14:15, 2 மே 2014 (UTC)[பதிலளி]

Urethra and Ureter

தொகு

தயவுசெய்து இந்தப் பேச்சுப் பக்கத்தைப் பார்த்து கருத்தளியுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 15:32, 14 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

பேச்சு:சிறுநீர்வழியில் விளக்கம் உள்ளது.--கலை (பேச்சு) 12:01, 12 மே 2013 (UTC)[பதிலளி]

Nutrient, Nutrition

தொகு
  • Nutrition - ஊட்டச்சத்து
  • Nutrient - ?? தமிழ் விக்சனரியில் Nutrient cycle ஊட்டச்சத்தின் சுழற்சி என்று உள்ளது. எவ்வாறு இவற்றை வேறுபடுத்தி அழைக்கலாம்?.

--கலை (பேச்சு) 13:49, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

Nutrition : போசணை; ஊட்டம்; உணவூட்டம்; (இது ஒரு செயற்பாடு என்றும் கூறலாம்) (இலங்கையில் போசாக்கு என்று வழக்கத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்)

Nutrient : ஊட்டச்சத்து; போசணைப்பொருள் nutrition என்பது ஒருவர் உட்கொள்ளுதல் மூலம் பெறப்படும் nutrients இன் ஒட்டுமொத்தச் சேர்க்கை, அதாவது மாப்பொருள், உயிர்ச்சத்து, கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துகள் (nutrients ) எடுப்பதால் எமக்குக் கிடைப்பது. த.வியில் உள்ள ஊட்டச்சத்து கட்டுரை ஆ.வியில் உள்ள en:Nutritionக்குச் சமனானது, en:Nutrient என்பதற்குப் பிறிதொரு கட்டுரை தொடங்கவேண்டும். Nutrient cycle ஊட்டச்சத்தின் சுழற்சி என்பது சரியானது. "There are six major classes of nutrients: carbohydrates, fats, minerals, protein, vitamins, and water." எனினும் இவை ஏறக்குறைய சமனானவை.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 14:44, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

நியூட்ரியண்ட்டு என்பது ஊட்டக்கூறு, உரக்கூறு (உரமூட்டும் கூறுகள்); நியூட்ரிசன் என்பது ஊட்டம் தருவனவற்றின் தொகுநிலை. தொகுநலம். ஊட்டச்சத்து என்பது nutrient, nutrition ஆகிய இரண்டுக்கும் பயன்படக்கூடிய சொல். சத்து என்பது ஊட்டம்தருவதே. ஊட்டச்சத்து என்பது ஊட்டம் தரும் நற்கூறு (சத்து என்பது உரமான பொருள் என்று பொருள்கொண்டது). உரமான நிலையை (nutrition) சத்து என்றும் கூறலாம். எனவே ஊட்டநிலை = nutrition; ஊட்டக்கூறு = nutrient. இவற்றை முறையே உரநிலை, உரக்கூறு என்றும் கூறலாம். உடலுக்கு உரம் தருவது. ஊட்டச்சத்து என்னும் சொல்லாட்சி நன்கு வழக்கூன்றி இருப்பதால் இவை எடுபடுமா அறியேன். Nutrient cycle = ஊட்டக்கூறுகள் சுழற்சி எனலாம். ஆறு ஊட்டக்கூறுகள் "carbohydrates, fats, minerals, protein, vitamins, and wate" = மாவுப்பொருள், கொழுப்பு, கனிமங்கள், புரதம், உயிர்ச்சத்து, நீர்.--செல்வா (பேச்சு) 14:25, 13 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி செல்வா. தற்போது "ஊட்டச்சத்து" என்று கருதுவது Nutrition என்பதால் அந்த ஊட்டச்சத்துக் கட்டுரையில் ஊட்டநிலை என்றும் குறித்து nutrient எனும் உருவாக்க வேண்டிய கட்டுரைக்கு ஊட்டக்கூறு என்று கையாளலாம். இவ்விரண்டு கட்டுரைகளிலும் ஊட்டச்சத்து என்பது இரண்டையும் குறிக்கப்பயன்படும் என்று குறிப்பிடலாம்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:24, 13 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

Tendon, Ligament, Fascia

தொகு

கீழுள்ள சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்கள் தேவைப்படுகின்றன.

  • Tendon - தசைநாண் ?
  • Ligament - தசைநார் ? (அப்படியானால் muscle fibre ஐ எப்படி அழைப்பது?)
  • Fascia - ??

--கலை (பேச்சு) 11:49, 11 சனவரி 2013 (UTC)[பதிலளி]

  • Tendon - தசைநாண் அல்லது சிரை என்று குறிக்கப்படுகின்றது, ஆனால் குருதிக் குழலி ஒன்றுக்கும் சிரை எனும் பெயர் இருப்பதால் குழப்பம் விளைவிக்கும்.

வின்சுலோவின் அகரமுதலியில் சிரை என்பதற்கு Nerve, cord, muscle, tendon, vein, artery எல்லாவற்றையும் குறிப்பிடுகின்றார்.

  • Fascia - இழையப்படலம், திசுப்படலம் / இழையப்பட்டை, திசுப்பட்டை

இச்சொல்லைத் தசையுடன் இணைத்துச் (தசைநார்ப் பட்டை என்று) சொல்வது சரியல்ல எனக்கருதுகிறேன், ஏனென்றால் இது தசையைத் தசையுடன் இணைப்பதுடன் உடலின் வேறு பகுதிகளிலும் (எ.கா: குருதிக்குழாய்களை) இணைப்பை ஏற்படுத்துகின்றது.

  • Fasciitis - இழையப்படல அழற்சி (திசுப்படல அழற்சி)
  • muscle fibre - தசைநார்
  • Aponeurosis - தசைநாண் படலம்
  • Ligament - பிரதானமாக எலும்புகளை எலும்புகளுடன் / மூட்டுகளுடன் இணைப்பதால் இது தசைநார் எனும் பெயருக்குப் பொருத்தமானது அல்ல. பிணைப்பிழை, இணைப்பிழை (அல்லது பிணையம்) என்பது ஓரளவு பொருந்துவது போலத் தோன்றுகிறது.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:36, 12 சனவரி 2013 (UTC)[பதிலளி]