உயிரணு என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சொல் பற்றிய தொடக்க நிலை உரையாடல்கள்

தொகு

செல் என்பதை இப்பக்கத்திற்கு வழிமாற்றலாமா? --Sivakumar \பேச்சு 18:40, 14 செப்டெம்பர் 2006 (UTC)Reply

வழிமாற்றியாகிவிட்டது--ரவி 21:21, 14 செப்டெம்பர் 2006 (UTC)Reply

இப்பக்கத்தைச் சற்று "சரிசெய்யலாம்" (திருத்தி விரிவாக்கலாம்) என்று நினைக்கின்றேன். தமிழில் கண்ணறை என்னும் சொல் நெடுங்காலமாக உள்ளது. உயிரோட்டம் செல்வதற்கு - உடலியக்கம் செல்லும் அல்லது செலுத்தும் அடிப்படைக் கூறு ஆகையால் அதனைச் செல் என்றே கூறலாம். உடலியக்கம் செல்வதால், செலுத்துவதால் செல். ஆங்கிலச் சொல்லை ஒத்ததாக இருக்கின்றதே என்று மயங்கவேண்டாம். தூண்டுதல் ஆங்கிலச் சொல்லே, ஆனால் தமிழ்வழிப் பொருள் உள்ள சொல். எனவே செல் எனலாம். கலம் என்பது இலங்கையில் உள்ள வழக்கு, கண்ணறை, செல் (ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவமாக உள்ள சொல். நான் இங்கு கூறும் பொருளில் இல்லை) என்பன தமிழ்நாட்டு வழக்கு. எல்லா இடங்களிலும் செல்/கலம் என்னும் இருசொற்களையும் பயன்படுத்தலாமா? --செல்வா 17:03, 10 ஏப்ரல் 2008 (UTC)

கண்ணறைத் தசை = cellular tissue . பார்க்கவும்


--செல்வா 18:49, 10 ஏப்ரல் 2008 (UTC)

Cell என்பதற்கு டாக்டர் சாமி சண்முகத்தின் மருத்துவக் கலைச் சொற்கள் தொகுப்பில் உயிரணு என்றும், அ. கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியில் உயிரணு, கண்ணறை என்னும் இரண்டு சொற்களும் தரப்பட்டுள்ளன. தமிழ் நாட்டுப் பாட நூல்களில் செல் என்னும் சொல் பயன்படுகின்றதா? கட்டுரையில் திசுள் என்னும் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதே! மயூரநாதன் 17:46, 30 மே 2008 (UTC)Reply
தமிழில் அணு என்னும் சொல் மிகச் சிறியது, மிகச் சிறுதுகள் என்று பொருள்படும். மிகச் சிறிய அடிப்படைக் கட்டுமானப் பொருள் என்றும் பொருள்படும். அதன் வழி உயிரணு என்று பெயரிட்டிருக்கலாம். ஆனால் 'டி.என்.ஏ' என்பதோடும் குழப்பம் தரலாம். தமிழ் உலகில் கலைச்சொற்கள் சீர் செய்யப்படாமல் இருப்பது கவலையாக உள்ளது. சொற்கள் தவறாகவும் பல இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் பாட நூல்களில் செல் என்னும் சொல் ஆட்சியில் உள்ளது பார்க்கவும். --செல்வா 18:13, 30 மே 2008 (UTC)Reply

உயிரணு, கலம், திசுக்கள், செல் தீர்க்கமான ஒரு முடிவு தந்தால் நன்று

தொகு

எனது பரிந்துரை கலம். பல சொற்களோடு இயல்பாகப் பொருந்தி வருகிறது. தனியே இயங்கக் கூடியது போன்ற ஒரு பொருள் தருகிறது. உயிரணு மரபணு வோடு குழப்பலாம். செல் போ, செல் பேசி என்றும் சற்று குழப்பலாம். திசுக்கள் பற்றிய பின்புலம் அறியேன். --Natkeeran 17:29, 8 செப்டெம்பர் 2008 (UTC)Reply

விரைவில் இந்த கட்டுரையில் முழுமையாக கலம் என்று எடுத்தாளவுள்ளேன். உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். நன்றி. --Natkeeran 22:23, 10 செப்டெம்பர் 2008 (UTC)Reply

கலம் பகுதிகள்

தொகு
  • கலச் சுவர் - cell wall
  • கலக் கரு - nucleus
  • புன்கரு - nucleus
  • கரு முதலுரு - cytoplasm
  • இழைமணி - mitochondria
  • இரைபசோம்கள் - ribosome
  • இலைசோசோம் - lysosome
  • சுரப்பு புடகம் - vesicle
  • கொல்கிச் சிக்கல் - Golgi apparatus
  • அழுத்தமான அகக்கலகருவுருச் சிறுவலை - rough endoplasmic reticulum
  • அழுத்தமற்ற அகக்கலகருவுருச் சிறுவலை - smooth endoplasmic reticulum
  • கலமென்சவ்வு - cytoskeleton
  • புன்மையத்தி - centrioles

கலைச்சொற்கள்

தொகு
  • உயிரணுவியல் (cytology) = Cell biology + Cytopathology.
  • உயிரணு உயிரியல் - Cell (biology)
  • செயற்கைமுறை வளர்ப்பு - Culture
  • உயிரணுச் சுழற்சி - Cell cycle
  • உயிரணுத் தற்கொலை - Apoptosis
  • உயிரணு வகை பிரிதல் - Cell differentiation
  • வட்டு - Dish
  • சாயம் - Stain (biology)
  • உள்ளுறுப்புகள்/சிற்றுறுப்புகள் - Organelles

மேலுள்ள உயிரியல் துறைச்சொற்களை, கட்டுரைப் பகுதியிலிருந்து இப்பகுதிக்கு மாற்றியுள்ளேன். இது போன்றத் தொகுத்தலை, விக்சனரி அகரமுதலியில் செய்வதே சாலச் சிறந்தது. 05:31, 29 செப்டெம்பர் 2011 (UTC)உழவன்+உரை..


உயிரணு, கலம்

தொகு

கலம் என்ற தலைப்பு உயிர்க்கலம் என்பதை மட்டுமல்லாது மின்கலம் உட்பட பல கருத்துக்களை கொண்டு வருவதை கவனத்திற்குத் தருகிறேன். DNA பற்றிய விளக்கம் தரும் போது கலம் என்ற சொல் மயக்கம் தெளிவடையலாம் எனவும் கருதுகிறேன். --Mohamed S. Nisardeen 12:00, 24 டிசம்பர் 2008 (UTC)

உயிரணு என்ற சொல் cell என்பதற்கு சிறந்ததாகத் தெரிகிறது. டி.என்.ஏ என்பதற்கு மரபணு என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது.--Kanags \பேச்சு 20:53, 24 டிசம்பர் 2008 (UTC)

தலைப்பிடுவதை உங்களது முடிவிற்குத் தருகிறேன். உள்ளடக்கத்தை மாற்றலாமா?

நிசார்டீன், கலம் என்ற இக்கட்டுரையிலேயே உள்ளடக்கத்தை விரிவு படுத்துங்கள். உயிரணு கட்டுரையில் நீங்கள் கூடுதலாக எழுதியவற்றை இங்கு மாற்றுங்கள். தலைப்பை மாற்றுவது குறித்து மீண்டும் ஆராயலாம். செல் என்ற ஆங்கிலத் தலைப்பிற்குச் செல்வாவின் புதிய தமிழ் விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. நன்றி.--Kanags \பேச்சு 21:48, 24 டிசம்பர் 2008 (UTC)
கனகு, நீங்கள் என் புதிய தமிழ் விளக்கத்தை ஏற்க வேண்டாம். ஆங்கிலச் சொல்லாகிய செல்லையே வைத்துக்கொள்வதில் ஒப்புதல் உண்டா? மீன்சிறை,மீன் நீரில் உந்தி முன் செல்லும் செதிள் (fin) என்னும் உறுப்புக்கு செலு என்று பெயர். சென்னை பல்கலைக்கழகத் தமிழ் அகராதியிலோ, கழகத் தமிழ் அகராதியிலோ பாருங்கள். முன்செல்ல, செலுத்தப் பயன்படுவதால் அதற்கு செலு என்று பெயர். உயிர் நடத்திச் செல்லுவதை ஏன் செல் என்று கூறுவது பொருந்தாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என எனக்கு விளங்கவில்லை. உங்களை ஏற்கச் சொல்லவில்லை, குறைந்தது ஆங்கிலச் சொல்லாகவேனும் இருக்கலாம் அல்லவா? cell என்னும் சொல் ஆங்கிலத்தில் அறை என்னும் பொருள் கொண்டது. தமிழில் இதனைக் கண்ணறை என்று கூறுவது முற்றிலும் பொருந்துவது. நெடுநாட்களாகத் தமிழில் வழங்குவது. ஆனால் cell என்றால் அறை என்னும் பொருளுடைய ஆங்கிலச் சொல்லைத் தமிழில் வேறு பொருளில் செல் என்று உயிர் செலுத்தும், நடக்கும், நடத்தும் உள் கூறுக்குப் பொருத்தமான சொல்லாகக் கூறலாம் என்பது என் பரிந்துரை. இத் தமிழ்வழிப் பொருள் ஏற்க ஒல்லாதது என்றாலும், ஆங்கிலச் சொல்லாகவே ஆளலாமே? லைசோசோம், மைட்டோகாண்ட்ரியா முதலான சொற்களை ஆள்கிறார்களே அது போல ஆளலாமே. என் கருத்தில் செல் என்பது தமிழ்வழிப் பொருள் செறிவாகத் தருவது. --செல்வா 23:07, 24 டிசம்பர் 2008 (UTC)
பொதுவாக த.வி தமிழ் கலைச்சொற்களைப் பெரிதும் பயன்படுத்தி வருகிறோம். ஒரு குறிப்பிட்ட வேதியியல் மூலக்கூறுக்கு ஆங்கிலப் பெயரையே வைத்துக்கொள்ளலாம். ஆனால், மூலக்கூறு நல்ல கலைச் சொல்லாக்கம். கலம் என்பது இலங்கையில் பரவலாக பயன்படுத்தப்படும் சொல். உயரணு என்பது ஏற்ககூடியது. தமிழ்நாட்டுப் பாட நூல்களில் செல் என்றே ஆளப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். --Natkeeran 23:18, 24 டிசம்பர் 2008 (UTC)
தமிழ்நாட்டுப் பாடநூலில் 31 பக்கங்களில் விரிவாக எழுதியுள்ளார்கள். [இங்கே பார்க்கவும். நாம் இரண்டொரு படிகள் மேலே சென்று ஒரு சில கட்டுரைகளாக எழுத வேண்டும். தமிழ்ப் பாடநூல்களில் (தமிழ்நாடு, இலங்கை) இருப்பதைக் காட்டிலும் நன்றாக, கூடுதலான செய்திகளுடன் எழுத முற்பட வேண்டும் என்பது என் அவா. கலம், உயிரணு, கண்ணறை ஆகிய சொற்கள் மூன்றுமே நல்ல சொற்கள். cell என்பதும் cyto என்பதும் ஆங்கிலத்தில் விரிவாக 30-50 கலைச் சொற்களில் பயன்படுவன. நாம் செல் என்றும் கூட்டுச் சொற்களில் செல்லிய-, எ.கசெல் கூழமம் அல்லது செல்லியக் கூழ்மம் (cytoplasm), செல் சுவர், செல் கரு என்று ஆளலாம்.--செல்வா 23:36, 24 டிசம்பர் 2008 (UTC)
உயிரணு, கலம், செல் எது பயன்படுத்தினாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. உயரணுக் கூழ்மம், உயிரணுச் சுவர், உயிரணுக் கரு என்றும் நன்றாக வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. http://en.wiktionary.org/wiki/cell move என்ற பொருளிலும் பாக்க கலம் என்ற பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது தெரிகிறது. --Natkeeran 23:54, 24 டிசம்பர் 2008 (UTC)

உயிரணு மரபணு மரபு கரு அமிலம்

தொகு

எனது கருத்துகளையும் முன்வைக்கிறேன். இது கருத்து மட்டுமே. முடிவுகளை சேர்ந்தே மேற்கொள்ளலாம்.

என்றவாறான அறிமுகம் ஒன்றையொன்று சார்ந்தது என்பதை விளங்கிக் கொள்ள ஏதுவாக அமையும். அடுத்தது கட்டுரையின் உள்ளடக்கம் உயிரியலில் ஆர்வமில்லாத சாதாரண வாசகர்களுக்கும் விளங்கக் கூடியதாக உள்ளதா?--Mohamed S. Nisardeen 08:06, 25 டிசம்பர் 2008 (UTC)

சொல் தேர்வு

தொகு

என் பரிந்துரை செல். இதனைப் பலரும் வேண்டாம் என்று கூறினால் உயிரணு என்ற சொல்லைத் தேர்ந்து எடுத்தாள்வோம். உயிரணு என்னும் சொல் அ.கி மூர்த்தியின் அறிவியல் அகராதி போன்ற சில நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே மயூரநாதன் குறிப்பிட்டுள்ளபடி// Cell என்பதற்கு டாக்டர் சாமி சண்முகத்தின் மருத்துவக் கலைச் சொற்கள் தொகுப்பில் உயிரணு என்றும், அ. கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியில் உயிரணு, கண்ணறை என்னும் இரண்டு சொற்களும் தரப்பட்டுள்ளன.// நூறாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ள நல்ல சொல்லாகிய கண்ணறை வேண்டாம் எனில், அடுத்த பொருத்தமான சொல் உயிரணுதான் என்பது என் கருத்து. அதாவது உயிர்களின் உடலத்தின் அடிப்படையான கட்டுமானப் பொருள் என்னும் பொருள் ஒருவாறேனும் சுட்டுமாறு இச்சொல் இருந்தால் நல்லது. அப்படிப்பட்ட பொருத்தமான சொற்கள் கண்ணறை, செல் (தமிழ்வழிப்பொருள்), உயிரணு ஆகிய சொற்கள். கலம் என்பதும் நல்ல சொல்லே, ஆனால், உயிரணு என்னும் சொல்லோடும் பிற சொற்களோடும் ஒப்பிடும் பொழுது அவ்வளவு பொருத்தமாக இல்லை (சுருக்கமாக இருப்பது கவர்ச்சியாக உள்ளது) என்று நினைக்கிறேன். நிசாருதீன், நுகம் என்னும் ஒரு சொல்லை ஆண்டிருக்கின்றார். அதனை அவர் எங்கிருந்து எடுத்து ஆள்கிறார் என்று விளங்கவில்லை. நுகம் என்பது நுகத்தடி (வண்டிமாடுகளை பூட்டும் மரக்கட்டை), நுகக்கால் (ஏர்க்கால்) போன்ற பொருள்களில் நன்கு அறிந்த சொல். ஆனால் இங்கு நிசாருதீன் வேறு பொருளில் ஆண்டுள்ளார் என நினைக்கிறேன். இதனை அவர் புதிதாக, புதிய பொருளில் ஆள்கிறாரா என்று விளங்கவில்லை. நுக்கு என்றால் மிகப் பொடியாக உள்ளது என்று ஒரு பொருள் உண்டு, அதன் அடிப்படையில் நுகம் என்று ஆள்கிறாரா என்று விளங்கவில்லை. நுக்குதல் என்றால் நொறுக்குதல் என்று பொருள். இன்றும் பேச்சு வழக்கில், போட்டு நொக்கறாண்டா என்றால் நொறுங்கப் போட்டு அடிக்கிறான், நையப் புடைக்கிறான் என்று பொருள். நிறைய நொறுக்குத் தீனி உண்பதற்கும் போட்டு நொக்கறான் என்னும் சொல்லாட்சி வழங்குவதுண்டு. நுக்கு -> நொக்கு (பேச்சு வழக்கு). ஒப்பு நோக்குக: புடை--> பொடை, குடை--> கொடை. நுக்குதல் என்னும் வினையடி நுக்கு (மிகப் பொடியான துணுக்கு) என்னும் பொருளில் மிகப் பொருத்தமான பொருளில் இங்கு ஆள வழியுள்ளது. ஆகவே செல், கண்ணறை, உயிரணு, நுக்கு (நுக்கம்? நுகம்?) ஆகிய சொற்களை முறையே, அதே வரிசையில் பரிந்துரைக்கிறேன். நுகம் என்னும் சொல்லை நிசாருதீன், நான் இங்கு குறிப்பிட்டுள்ள பொருளில் ஆண்டுள்ளாரா என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். --செல்வா 23:56, 26 டிசம்பர் 2008 (UTC)

உயிரணு எனது தேர்வு.--Kanags \பேச்சு 01:08, 27 டிசம்பர் 2008 (UTC)
உயிரணு எனது தேர்வு.--Natkeeran 01:50, 27 டிசம்பர் 2008 (UTC)

'கண்ணறை நல்ல சொல். ஆனால் உயிரணு என்று பள்ளியில் படித்த நினைவு. எனது ஓட்டு உயிரணுவுக்கே --குறும்பன் 02:50, 27 டிசம்பர் 2008 (UTC)

உங்கள் தேர்வுகளுக்கு மிக்க நன்றி. உயிரணு மிகச் சிறந்த சொல்லே. பெரும்பாலோர், தேர்ந்தெடுத்தால் கட்டாயம் எடுத்தாள்வோம். இன்னும் 2-3 பேராவது கருத்துதெரிவிக்கட்டும். நானும் உவப்புடன் உயிரணு என்னும் சொல்லை எடுத்து ஆள்வேன். மயூரநாதன், நிசாருதீன், சுந்தர், சிவகுமார், உமாபதி போன்ற மற்றவர்களும் கருத்து தெரிவிக்கட்டும். --செல்வா 03:18, 27 டிசம்பர் 2008 (UTC)
உயிரணு என்றே பயன்படுத்தலாம். மயூரநாதன் 05:14, 27 டிசம்பர் 2008 (UTC)

"நுகம்" என்ற சொல்லை பிரதானமாக நான் எடுத்தாள விரும்பியது Zygote என்ற ஆங்கில சொல்லுக்கான விளக்கமாகவே தற்போதைய ஆங்கில-தமிழ் அகராதிகளில் இப்பிரயோகத்தை தாராளமாகக் காணலாம். விளங்குவதற்கு சிரமமிருந்தால் "புணரியணு or புணரி உயிரணு" என்ற சொல்லை பயன்படுத்துவதை சிந்திக்கலாம்.(Zygote என்பதும் உயிரணுவை நூறு வீதம் ஒத்தவை என்பதனாலேயே இதனையும் அறிமுகத்தில் கொடுக்க வேண்டியேற்பட்டது.) இக்கட்டுரையில் இச்சொல்லுக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் தொடர வேண்டிய இன்னும் சில கட்டுரைகளுக்கு இவ்வார்த்தை (Zygote) கட்டாயத் தேவையாகும். "உயிரணுவின் பகுதிகள்" என்று தனியாக கட்டுரை ஆரம்பிக்கும் போதே அவைகளையும் விரிவாக விளக்க ஏதுவாக அமையும். இக்கட்டுரையினை விரிவாக்கும் எனது முயற்சிக்கு உந்துதல் ஆய்வுகூட இறைச்சி (வளர்ப்பு முறை இறைச்சி)யே; அது வரையும் இக்கட்டுரையை தொடர்புபடுத்தி செல்ல வேண்டியுள்ளது. அதன் பேச்சுப்பக்கத்தில் நான் மேற்கோளிட்ட தண்டுக்கலம் (Stem Cell) என்ற பிரயோகத்தை கவனித்திருப்பீர்கள். இதுவே குருத்துத் திசுள் என்ற தலைப்பில் எடுத்தாளப்பட்டுள்ளதைக் காண்கிறேன். "தமிழ் இணையப் பல்கலைக்கழகதின்" விளக்கமாக "முதல் நிலை உயிரணு" இருப்பதாக அறிகிறேன். இதுவும் மிக நெடியதாக உள்ளது. அக்கட்டுரையின் தலைப்பும் மாற்றப்பட வேண்டியுள்ளதை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். (நகலாக்கம், நகல் இனப்பெருக்கம், குளோனிங் என்பவைகளையும் படியெடுப்பு இனப்பெருக்கம் (Cloning) என்பதற்கு நகர்த்தி விடலாம்.) --Mohamed S. Nisardeen 11:12, 27 டிசம்பர் 2008 (UTC)

கருத்துகளுக்கு நன்றி நிசாருதீன். Zygote என்பதற்கு அ. கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி "கருவணு: முட்டையும் சிதலும் சேர்வதால் உண்டாகும் அணு" என்று கொடுத்துள்ளார்கள். நீங்கள் புணரியணு என்று கூறும் பொருளிலேயே கருவணு என்று கொடுத்துள்ளார்கள். முளையணு, புணரணு, சினையணு, துளிரணு என்றும் கூறலாம், ஆனால் கருவணு என்பதே நன்றாக இருப்பதாக நினைக்கின்றேன். நீங்கள் யு'க், யோ'க் (yog) (=சேர்தல், புணர்தல்), என்னும் பொருளில் நுகம் என்று ஆண்டிருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது. தமிழில் ஓகு, ஓகம் என்றால் சேர்தல் உண்டாகுதல் என்று பொருள். தேவநேயப்பாவாணர் ஓகு, ஓகம் என்பதில் இருந்துதான் சமசுகிருத யோகா, யோகம் எழுந்தது என்று எங்கோ கூறியது நினைவுக்கு வருகின்றது. மூர்த்தியின் அகராதியில் zygosis என்பதற்கு "புணர்ச்சி: இனப் பெருக்க முறைகளில் ஒன்று " என்றும் கொடுத்துள்ளார்கள். அடுத்ததாக Cyto- என வரும் சொற்களுக்கு அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி தரும் சொற்கள்:

  1. cytocytes:பையணுக்கள்
  2. cytochemistry: கண்ணறை வேதி இயல்
  3. cytochrome: சைட்டோகுரோம் - பச்சையம், ஹெமாட்டின் ஆகியவற்றோடு தொடர்புடைய நிறமி
  4. cytogenetics:கண்ணறை மரபணுவியல்
  5. cytokinesis:கண்ணறைக் கணியப்பிரிவு
  6. cytology:கண்ணறைவியல்
  7. cytolysis:கண்ணறைச்சிதைவு
  8. cytoplasm:கண்ணறைக் கணியம்
  9. cytosine:சைட்டோசின்: உட்கருவிலுள்ள காடியின் பிரிமிடின், இக்காடியின் நீராற்பகுப்பு நடைபெறும் பொழுது இப்பொருள் பிரியும்
  10. cytosol: சைட்டோசால்: மைய விலக்கு விசையால் எல்லாத் துகள்களும் நீங்கியபின், தங்கி இருக்கும் உயிரணுக் கணியப்பகுதி. இது கரையக்கூடியது
  11. cytotaxonomy:கண்ணறை வகைப்பாட்டியல்

மேலே உள்ளவை கருத்துப் பரிமாற்றத்திற்காக தந்துள்ளேன். பயனர்கள் எண்ணிப்பார்க்க. என் பரிந்துரையாகக் கருத வேண்டாம். --செல்வா 00:59, 28 டிசம்பர் 2008 (UTC)

//தற்போதைய ஆங்கில-தமிழ் அகராதிகளில் இப்பிரயோகத்தை தாராளமாகக் காணலாம்.// எந்த அகராதிகள் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். எப்பொருள் அடிப்படையில் நுகம் என்பதை Zygote என்பதற்கு ஈடாகப் பயன்படுத்துகிறார்கள்? நன்றி.--செல்வா 01:07, 28 டிசம்பர் 2008 (UTC)


செல்வா அறிவதற்கு,

தொல்காப்பியத்தையும் நன்னூலையும் துருவிக் கொண்டிருப்பது மாணவர்களை விஞ்ஞானத்தை விட்டும் தூர விரண்டோடச் செய்வதற்கே வழியமைத்துக்கொடுக்கும். "நுகம்" என்பது தமிழிலிருந்து விலகாத சொல்லாகவும் புரிவதற்கு இலகுவாக ஒற்றைச் சொல்லாகவும் இருந்ததாலேயே இச்சொல்லைக் கையாண்டேன். Online அகராதிகளைப் பார்க்கவும் [1] [2]. கருவணு மற்றும் உயிரணுக்கரு என்ற இரண்டையும் ஒரே கட்டுரையில் பயன்படுத்த எத்தனிக்கும்; போது நாம் மாணவர்களேயே சிந்திக்க வேண்டும். அடுத்து ஆங்கிலத்தில் அவர்கள் பெயர் வைக்கும் அழகை நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகப் புலப்படும் ஆங்கில இலக்கணத்தை வளர்ப்பதற்கு அவர்கள் விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதில்லை; விஞ்ஞானத்தை இலகுவாக்கவே பெயரிடலைப் பயன்படுத்துகிறார்கள். நேற்று அறிமுகமான சொற்களுக்குக் கிறிஸ்துவுக்கு முன்னுள்ள அகராதிகளைத் தோண்டுவதற்கு என் மனம் இடங்கொடுக்கவில்லை. உங்களால் முடியுமானவரை சகலருடனும் சேர்ந்து கட்டுரையில் கையாளப்பட்டுள்ள சொற்களில் தேவையான மாற்றங்களை செய்து விடுங்கள். சேர்ந்து எடுக்கும் முடிவுகளில் எனது ஒத்துழைப்பு இருக்கும்.

// ஆங்கில-தமிழ் அகராதிகளில் இப்பிரயோகத்தைத் தாராளமாகக் காணலாம்.//

என்ற வசனத்தை

// பரவலாக புதிய ஆங்கில-தமிழ் அகராதிகளில் இப்பிரயோகத்தைக் காணலாம்.// (Zygote= நுகம்)

என்ற அர்த்தப்படவே எழுதினேன் கருத்துப்பிழை ஏற்பட்டிருப்பதால் வருந்துகிறேன். --Mohamed S. Nisardeen 11:27, 28 டிசம்பர் 2008 (UTC)

நிசாருதீன், நீங்கள் தந்த இணைப்பின் வழியாக http://dictionary.sarma.co.in மற்றும் http://www.tamildict.com ஆகிய தளங்களைப் பார்த்தேன். அவ்விடங்களில் zygote என்பதற்கு புணரிக்கலம், நுகம் ஆகிய சொற்களைத் தந்துள்ளார்கள். நன்றி. அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியில் கருவணு என்று கொடுத்துள்ளார்கள். கருவணு என்பது வேறு அணுக்கரு என்பது வேறு என்பது தெளிவாகத்தானே இருக்கின்றது. தலைநாய் வேறு நாய்த்தலை வேறு அல்லவா. மேலும் கருவணு போன்ற சொற்கள் அவற்றை விளக்கும் பொழுது தெளிவாகும். கருவணு என்பதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று நான் கூறவில்லை, வலியுறுத்தவும் இல்லை, ஆனால் கருவணு என்பது நல்ல சொல் என்பது என் கருத்து. நீங்கள்://நேற்று அறிமுகமான சொற்களுக்குக் கிறிஸ்துவுக்கு முன்னுள்ள அகராதிகளை தோண்டுவதற்கு என் மனம் இடங்கொடுக்கவில்லை.// என்கின்றீர்கள். ஆங்கிலத்தில் atom முதல் zygote வரை பெரும்பாலான சொற்களை 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க, இலத்தீன் மொழியில் இருந்தே அவர்கள் ஆக்கிக்கொள்கிறார்கள். தமிழும் கிரேக்கம், இலத்தீனைப் போல செவ்வியல் மொழி, ஆகவே தமிழ் வேரிலிருந்து சொற்களை ஆக்கிக்கொள்கிறோம். நீங்கள், "தொல்காப்பியத்தையும் நன்னூலையும் துருவிக்கொண்டிருப்பது" என்றும் "நேற்று அறிமுகமான சொற்களுக்குக் கிறிஸ்துவுக்கு முன்னுள்ள அகராதிகளைத் தோண்டுவது" என்றெல்லாம் கூறுவதைப் பார்க்கும் பொழுது ஏதோ வெறுப்புடன் கூறுவதாக எண்ணத் தோன்றுகின்றது. Femur என்னும் சொல்லைப்பற்றி கூறும்பொழுது ஆங்கில விக்கி என்ன கூறுகிறது பாருங்கள் en:Femur://The word femur is Latin for thigh. Theoretically in strict usage, femur bone is more proper than femur, as in classical Latin femur means "thigh", and os femoris means "the bone within it". In medical Latin its genitive is always femoris, but in classical Latin its genitive is often feminis, and should not be confused with case forms of femina, which means "woman".// நீங்கள் கூறும் தொல்மொழி இலக்கணம் எல்லாம் வருகின்றது. Femur என்பதை டாய்ட்சு மொழியில் Oberschenkelknochen என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு Ober-schenkel-knochen என்னும் சொல் பொருள் விளங்குமாறு உள்ளது. ஆகவே அவர்கள் அதனை எடுத்து ஆள்கிறார்கள். நாமும் நம் மொழியில் பொருள் விளங்குமாறு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். நான் ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகள் சிலவற்றிலும் கலைச்சொற்களை எவ்வாறு ஆக்குகிறார்கள், பயன்படுத்துகிறார்கள் என்று பல ஆண்டுகளாகக் கூர்ந்து நோக்கியிருக்கின்றேன். தமிழில் நாம் செய்வது ஒன்றும் புதிதல்ல. நீங்கள் நுகம் என்பதை என்ன பொருளில் ஆண்டீர்கள் என்று அறியவே கேள்விகள் கேட்டேன். பொருள் அறியவும் முற்பட்டேன். இப்படி இங்கே தமிழ் விக்கியில் அலசுவது புதிதல்ல. சொல்லின் பொருள், பொருத்தம் முதலியன பற்றி உரையாடுவதும் தேர்வதும் தேவையானது. புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.--செல்வா 05:21, 29 டிசம்பர் 2008 (UTC)

மதிப்பிற்குரிய பேராசிரியருக்கு,

நீங்கள் தமிழ் மீது கொண்டிருக்கும் ஆழிய ஈடுபாட்டை மதிக்கிறேன். உங்களது ஆய்வுகளுக்கும் மதிப்பு தருகிறேன். ஆராய்ந்ததில் கருவணு என்ற சொல்லும் அழகிய வார்த்தை என்பதை என்னாலும் ஏற்க முடிகிறது தொடர்ந்து பயன்படுத்த முயற்சிக்கிறேன். எனது சொந்த கருத்தையே நீங்கள் மேற்கோளிட்டுள்ளீர்கள்; அதை வெறுப்புடன் என எடுக்கத் தேவையில்லை நகைச் சுவையாக எடுத்துக்கொள்ளுமாறு பணிவாக வேண்டுகிறேன். எனது ஆக்கங்களில் தவறு நேரும் போது தொடர்ந்தும் உங்களது ஆலோசனைகளைத் தர வேண்டுகிறேன். நன்றி.--Mohamed S. Nisardeen 10:37, 29 டிசம்பர் 2008 (UTC)

நிசாருதீன், இங்கு எல்லோருமே ஈடான உடன் பங்களிப்பாளர்கள் என்னும் தோழமை உணர்விலேயே உரையாடுகின்றோம். இதே உரிமையில்தான் நானும் உங்களை நிசாருதீன் என்று அழைக்கின்றேன். என்னைவிட நீங்கள் அகவையில் (வயதில்) பெரியவராகவோ, கல்வி கேள்விகளில் உயர்ந்தவராகவோ இருக்கலாம். எனினும் இங்கு உடன்பங்களிப்பாளர் என்னும் உறவிலேயே உங்களை நிசாருதீன் என அழைக்கின்றேன். அதே போல என்னை அருள்கூர்ந்து செல்வா என்றே அழையுங்கள். பேராசிரியர், அண்ணா, அக்கா என்று அழைக்கும் வழக்கம் இல்லை. நீங்கள் நகைச் சுவையாக அக்குறிப்புகளைத் தந்தீர்கள் என விளக்கி எனக்கு அறிவித்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. என் கருத்துகளை இயன்றவாறு கட்டாயம் தெரிவிக்கின்றேன். தாங்களும் தங்கள் கருத்துகளை என் கட்டுரைகளிலும் பிறர் கட்டுரைகளிலும் தயங்காமல் தர வேண்டிக் கொள்கிறேன். --செல்வா 15:45, 29 டிசம்பர் 2008 (UTC)

நிசார்டீன் கருத்துக்கள்

தொகு

விக்கிபீடியாவுக்கு தகுந்தவாறான வடிவமைப்புகள் செய்ய அழைக்கிறேன்.

நிசார்டீன், உயிரணு பற்றிய கட்டுரையை ஆரம்பித்தமைக்கு நன்றிகள். உயிரணு என்பதை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கலாம்? ஏற்கெனவே கலம் (cell) என்றொரு கட்டுரை உள்ளது. அதிலும் உயிரணு என்ற சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. அதன் பேச்சுப் பக்கத்தையும் பார்க்கவும். கலம், உயிரணு இரண்டும் வேறு வேறா? (உயிரியல் எனக்கு வரவே வராது:-) இரண்டும் ஒன்றானால் இக்கட்டுரையின் தேவையான பகுதிகளை அங்கு இணைத்து, இத்தலைப்பைக் கலம் கட்டுரைக்கு வழிமாற்றவேண்டும். நன்றி.--Kanags \பேச்சு 07:27, 24 டிசம்பர் 2008 (UTC)

இரண்டும் ஒன்றே இணைக்க முயற்சிக்கிறேன்.

அறியத்தந்தமைக்கு நன்றி. --Mohamed S. Nisardeen 11:30, 24 டிசம்பர் 2008 (UTC)


உயிரணு அல்லது உயிர்க்கலம் என்பதே சிறந்த தலைப்பாகத் தெரிகிறது. கலம் எனும் போது மின் கலம் கடற்கலம் எனும் பொருட்களையும் தரக்கூடியது. சகல தரவுகளையும் இத்தலைப்பின் கீழ் உள்ளடக்கியுள்ளேன். கருத்துகளைப் பரிமாறலாம். --Mohamed S. Nisardeen 19:42, 24 டிசம்பர் 2008 (UTC)

முகமது நிசாருதீன், நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றாலும் இப்பக்கத்தைப் பார்க்க வேண்டுகிறேன். செல் என்னும் சொல்லே சிறந்ததென்பது என் கருத்து. தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும் இது ஆட்சியில் உள்ளது. உயிரணு, கண்ணறை, கலம் ஆகிய சொற்களும் வழக்கில் உள்ளன. செல் என்பது ஆங்கிலச் சொல்லால் தூண்டப்பட்டாலும், தமிழ்வழி நிறைபொருள் தருவது. உயிர் நடப்பதற்கு (செல்வதற்கு) அடிப்படையாக உள்ளது என்னும் பொருளில் செல் என்று கூறலாம். கல்லுவது என்றால் தோண்டுவது என்று பொருள் தருவது. அதனைக் கல் என்கிறோம், சொல்வதைச் சொல் என்கிறோம். அதுபோல உயிர் செல்வதை (நடந்துகொண்டு இருப்பதை), செலுத்துவதின் அடிப்படையை செல் என்று கூறுவது பொருந்தும். ஆங்கிலத்தில் bit என்பதை நாம் பிட்டு (பிள் --> பிட் ஆகும்) என்றே கூறலாம். ஆங்கிலத்தில் cry என்பதைத் தமிழில் கரை (கரைதல்) என்றே கூறலாம். இவை போன்று ஒலிப்பொத்த சொற்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல உண்டு. என் பரிந்துரை செல் அல்லது கண்ணறை. உயிரணு, கலம் என்பன தவறில்லை என்றாலும், குழப்பம் ஏற்படுத்த வல்லன. கலம் என்னும் கட்டுரையை விரிவுபடுத்த வேண்டும் என நான் எண்ணியபொழுதும், இந்த சொற்சீர்மை பெறாததால் தயங்கிக்கொண்டே வந்திருக்கின்றேன். அடுத்ததாக neucleus என்பதற்குக் கரு என்றே கூறலாம். கண்ணறைக் கரு, செல்லின் கரு என்று எழுதத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். --செல்வா 21:12, 24 டிசம்பர் 2008 (UTC)

வளர்ப்பூடகம்

தொகு

இக்கட்டுரையின் 6 செயற்கைமுறை உயிரணு வளர்ப்பு என்ற பத்தியில், வளர்ப்பூடகம் என்பது அடைப்புக் குறிக்குள் test tube எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்ப்பூடகம் என்பது, Growth media / culture media என்று குறிப்பிடப்படுவதே சரியென நினைக்கிறேன். அதை அங்கே மாற்று முன்னர், உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன். --கலை 22:25, 19 ஆகஸ்ட் 2009 (UTC)

நீங்கள் கூறுவது சரியென்றே படுகிறது. test tube ஐ பரிசோதனைக் குழாய் எனலாம். --Natkeeran 22:52, 19 ஆகஸ்ட் 2009 (UTC)
கலை நீங்கள் தயங்காமல் மாற்றுங்கள். சோதனைக் குழாய், பரிசோதனைக் குழாய், தேர்வுக் குழாய் என்று ஏதேனும் பொருத்தமான சொல்லை இட்டு மாற்றுங்கள். வளர்ப்பூடகம் என்பதும் ஒருவகையில் சரியானதே. ஏனெனில், அந்தக் குழாயில் இருப்பது வளர்ப்பூடகம். வளர்ப்பூடகத்தின் வெறும் கொள்கலம்தான் அக்குழாய். ஊடகம்தானே முக்கியம்?--செல்வா 23:15, 19 ஆகஸ்ட் 2009 (UTC)

கலைச்சொல் உதவி தேவை

தொகு

உயிரணுவின் கூறுகள் சிலவற்றுக்குப் புதிய கட்டுரைகள் தொடங்க விருப்பம். பலவற்றிற்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கட்டுரைகளை ஆரம்பிக்கு முன்னர், அவற்றிற்குச் சரியான அல்லது பொருத்தமான தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ள விரும்புகின்றேன். உதவுங்கள்.

  • Vesicle - சுரப்பு புடகம்
  • Endoplasmic reticulam - அகக்கலவுருச் சிறுவலை
  • Vacuole - புன்வெற்றிடம் / சாற்றுக்குழி
  • Cytoplasm - குழியமுதலுரு / முதலுரு / கரு முதலுரு
  • Cytosol - ?
  • Centriole - புன்மையத்தி

--கலை (பேச்சு) 20:16, 9 அக்டோபர் 2012 (UTC)Reply

கலை, அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி-யில் உள்ள சொற்களை முதலில் தருகின்றேன். பிறகு இக்கருத்துகளைப் பார்ப்போம்.

  • Cytoplasm -கண்ணறைக் கணியம் ("கண்ணறையின் உயிர்ப்பகுதிகள் அடங்கிய பகுதி. உட்கருவும் பெரும் நுண்குமிழிகளும் நீக்கியது. இதில் வளர்சிதை மாற்றச்செயல்கள் நடைபெறுகின்றன" )
  • Cytosol = சைட்டோசால் (ஆங்கிலச்சொல்லை அப்படியே தந்துள்ளார்)
  • Centriole - மையப்புரி ("உட்கருப்படலத்திற்கு வெளியே செயல் ஒடுங்கிய கண்ணறைகளில் காணப்படும் நுண்ணிய உருளை அடிவப் பொருள். இழைப் பிரிவிலும் குன்றல் பிரிவிலும் கதிர்முனைகளை உண்டாக்குவது..."
  • Vacuole - நுண்குமிழி ("உயிரணுவில் உள்ளது. இதில் பாய்மம் நிரம்பியுள்ளது..")
  • Vesicle - குழி ("வேறுபட்ட தோற்றமுள்ள நுண்குமிழி.")
  • Endoplasmic reticulum - அகக்கணிய வலைப்பின்னல் ("தட்டையானதும் படலங்களால் வரையறுக்கப்பட்டதுமான தொகுதி. கண்ணறைக் கணியத்தின் வழியாக ஓடுவது")

நாம் கண்ணறை என்பதை உயிரணு என்கிறோம். cytoplasm என்பதைக் கணியம் என்று கூறும் வழக்கம் நெடியது (ஏறத்தாழ 50-70 ஆண்டுகள் பழமையானது). கணியம் என்றால் மிகவும் சிறியது என்றுதான் பொருள். ஆனால் உயிரணுவின் உட்கருவைச் சுற்றியுள்ள பகுதி. கணியம் என்பதை ஏற்றால், சைட்டோபிளாசம் என்பதை உயிரணுக்கணியம் எனலாம். உட்கருவைச் சுற்றி இருக்கும் களியம் என்றும் சொல்லலாம் என்று நினைக்கின்றேன். களியம் என்றால் மெதுமையான உண்ணும் வகையான உருண்டையையும் குறிக்கும். சைட்டோசால் (cytosol) என்பதை உயிரணு நீர்மியம் எனலாம் ஏனெனில் "The aqueous component of the cytoplasm of a cell, within which various organelles and particles are suspended." என்பது இதன் விளக்கமாக உள்ளது. Vesicle என்பதைக் குழிசி எனலாம். Endoplasmic reticulum என்பதை அகக்கணிய பிணையல் எனலாம். எனவே என் பரிந்துரை:

  • Cytoplasm - உயிரணுக்கணியம், உயிரணுக்களியம்
  • Cytosol - உயிரணுநீர்மியம், உயிரணுநீர்மகம்
  • Vacuole - நுண்குமிழி
  • Vesicle - நுண்குழிசி
  • Endoplasmic reticulum- அகக்கணியப் பிணையல், அகக்களியப் பிணையல்
  • Centriole - மையப்புரி; இடைப்புரி

--செல்வா (பேச்சு) 23:31, 9 அக்டோபர் 2012 (UTC)Reply

cytoplasm பல பெயர்களில்

தொகு

இங்கு cytoplasm பல பெயர்களில் இருப்பதைக் கீழ்க்காணும் படத்தில் காணலாம்.   கலை, protoplasm தான் முதலுரு என்று அழைக்கப்படுகின்றது. Cytoplasm குழியவுரு என்பது நாம் படித்தது. குழியமுதலுரு என்றும் அழைத்துள்ளோம். செல்வா கொடுத்த சொற்களைப் பயன்படுத்தலாம்.

cyto + plasm
-plasm -

word-forming element meaning "a growth, a development; something molded," from Greek -plasma, from plasma "something molded or created".

ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டுமாயின் cytoplasm, cytosol என்பவற்றை முறையே குழியவுரு (அல்லது குழியமுதலுரு), குழியவுருநீர்மியம் என அழைக்கலாம்.--சி.செந்தி (உரையாடுக) 18:01, 14 சூலை 2017 (UTC)Reply

வேங்கைத் திட்டம்

தொகு

@Sancheevis: இந்தக் கட்டுரையைச் சற்று விரிவுபடுத்த வேண்டுகிறேன். போட்டிக் காலத்தில் நீங்கள் மட்டுமே தனியாளாக 9000 பைட்டுகளுக்கு மேலாகச் சேர்க்க வேண்டும். கட்டுரை மட்டும் 9000 பைட்டுகளைத் தாண்டினால் போதாது. போட்டியின் இறுதி நேரத்திலேயே இதைக் கவனித்து உங்களுக்குத் தெரியப் படுத்த இயன்றமைக்கு வருந்துகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:59, 31 மே 2018 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிரணு&oldid=3288766" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உயிரணு" page.