Untitled

தொகு

அனுஷ்டிப்பு என்பதற்கு கடைப்பிடிப்பு என்பது நல்ல மாற்றுச்சொல். நன்றி ரவி இந்த சொல்லை எழுதும்போது வடசொல்லாக இருக்கிறதே என்ன மாற்று இருக்கமுடியும் என்று சிந்தித்த படியேதான் தொகுத்தேன். தேவையற்ற வடசொற்களை களைவதில் ரவியின் முனைப்பு மகிழ்ச்சியளிக்கிறது --மு.மயூரன் 17:33, 28 நவம்பர் 2006 (UTC)Reply

மகிழ்ச்சி மயூரன். 50களில் வந்த தனித்தமிழ் இயக்கம் நிலப் பிரிவினைகள் காரணமாக இலங்கையில் வலுப்பெறவில்லை. இப்பொழுது இணையத்தின் மூலமாகத் தான் எல்லாம் ஒன்றாகிவிட்டதே ! கடைப்பிடி, கடைபிடி - இரண்டில் எது சரி என்று கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது..--Ravidreams 18:46, 28 நவம்பர் 2006 (UTC)Reply

கடைப்பிடி என்று நினைக்கிறேன். கொஞ்சம் வித்தியாசமாக ரொம்ப வலுவாகவே இருக்கிறது. :-) --கோபி 18:52, 28 நவம்பர் 2006 (UTC)Reply
//50களில் வந்த தனித்தமிழ் இயக்கம் நிலப் பிரிவினைகள் காரணமாக இலங்கையில் வலுப்பெறவில்லை// தமிழ் நாட்டைப்போலவே சம காலப்பகுதியில் இங்கே மணிப்பிரவாள நடை வளர்ச்சி பெற்றிருக்கிறது.

நாவலர் போன்றவர்கள் அதை வளர்த்தெடுத்தார்கள்.

திராவிட இயக்க கொள்கைகள் இங்கே பாதிப்பு செலுத்தாமலில்லை. அடிப்படையில் ஈழத்தமிழ் ஆதிக்க வகுப்பினர் சைவர்கள். இந்து அடையாளத்தை விட சைவ அடையாளமே இங்கே வலுவானது. திராவிட இயக்கத்தின் பிராமணீய எதிர்ப்பு இங்கே எடுபடாமல் போனதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம். இங்கே பிராமணர்களுக்கு பெரிய அதிகார நிலை எதுவும் இல்லை.

திராவிட இயக்கத்தின் அடிப்படை பிராமணீய எதிர்ப்பாக இருந்தமை, அவ்வியக்கக்கொள்கைகள் இங்கே சற்று அந்நியமாக உணரப்பட்டமைக்கு காரணமாக இருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

கலைசொல்லாக்கம், பாடப்புத்தக ஆக்கம் போன்றவற்றின்போது இங்குள்ள பேராசிரியர்கள் தமிழ் சொல்லாக்கத்துக்கு முதலிடம் கொடுத்தபோதும், வடசொற்களை "எதிர்ப்புணர்வோடு" புறந்தள்ளவில்லை. அவற்றையும் சிறிய அளவில், நிபந்தனையுடன் தமிழ்ப்படுத்தி ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மிதவாதகாலப்பகுதியிலும் சரி, தீவிரவாத காலப்பகுதியிலும்சரி தனித்தமிழ், திராவிட உணர்வு காணப்பட்டே வந்திருக்கிறது.

இன்று விடுதலைப்புலிகள் இயக்கத்தினுள் தனித்தமிழ் கொள்கையாளர்களின் செல்வாக்கு மிக மிக அதிகமாக இருக்கிறது. விடுதலைப்புலிகளின் அறிக்கைகளிலும், நிர்வாக செயற்பாடுகளிலும், கல்வித்துறை, நீதித்துறை செயற்பாடுகளிலும் இதனை நீங்கள் மிகத்தெளிவாகவே இனங்காணலாம். மாவீரர் தினம் என்று சொல்ல மறுத்து மாவீரர் நாள் என்றார்கள். தேசிய கீதம் என்று சொல்ல மறுத்து தேசியப்பண் என்றார்கள்.

வெதுப்பகம், உருளி, கருவி போன்ற சொற்கள் தனித்தமிழ் மனநிலையின் பால் பிறந்த விடுதலைப்புலிகளின் சொல்லாக்கங்கள்.

விடுதலைப்புலிகளின் இந்த "தனித்தமிழ்" கொள்கை இங்கே அன்றாட மக்கள் வாழ்வில் மிகுந்த பாதிப்பு செலுத்தியிருக்கிறது.

--மு.மயூரன் 19:08, 28 நவம்பர் 2006 (UTC)Reply

//கொஞ்சம் வித்தியாசமாக ரொம்ப வலுவாகவே இருக்கிறது.// - புரியவில்லை கோபி??
தகவலுக்கு நன்றி, மயூரன். நீங்கள் தந்துள்ள தகவல்களை தொகுத்து மயூரனாதன் பாணியில் தனிக்கட்டுரையாகத் தர இயலுமா? இது ஈழத்தின் தமிழ் இயக்கங்கள், இன்றைய நிலை குறித்து அறிய உதவும். இல்லாவிட்டால், என்னிடம் இருப்பது போன்ற மேம்போக்கான எண்ணங்களை தவறுதலாக நிலைக்கக்கூடும். ஈழத்தில் தனித்தமிழ் பெயர்கள் இடுவது போன்ற முயற்சிகளை நான் கவனித்து இருக்கிறேன். இருந்தாலும், சில இலங்கை தமிழ் இணையத்தளங்களை படிக்கும் போது முக்கியமாக நெருடும் இரண்டு விதயங்கள் பின்வருமாறு - ஆங்கில எழுத்துக்களுக்களான t,r,o ஆகியவற்றை எழுதும் முறை, பிரத்யேக-பிரதி-பிரதான-அனுசரனை-அனுஷ்டிப்பு போன்ற தவிர்க்கக்கூடிய வடமொழிச் சொற்கள். அதே வேளை தமிழகத்தில் முற்றிலும் தொலைத்து விட்ட அருமையான தமிழ்ச் சொற்களை இலங்கைத் தமிழர்கள் பேச்சு வழக்கிலும் கூட பரவலாகப் பயன்படுத்துவது நான் கண்டு மகிழ்ந்த ஒன்று. எடுத்துக்காட்டாக, தமிழ் நாட்டில் பேச்சு, எழுத்து வழக்கு இரண்டிலும் வாரம் என்றே சொல்வார்கள். கிழமை என்று சொன்னால் புரியாது. ஆனால், இலங்கைத் தமிழர்கள் கிழமை என்றே சொல்கிறார்கள். தமிழ்நாட்டிலும் தொலைக்காமல் உணராமல் இன்னும் கலந்திருக்கும் வடசொற்கள் பல உண்டு. இன்னொரு முறை அதை தொகுத்துத் தருகிறேன்--Ravidreams 19:20, 28 நவம்பர் 2006 (UTC)Reply

தமிங்கிலிஸ்காரர் வந்து இந்த டயலோக் எல்லாம் ரீட் பண்ணினா, என்ன திங் பண்ணுவார்களோ தெரியாது :-) --Natkeeran 02:28, 29 நவம்பர் 2006 (UTC)Reply

ஒரு முறை தமிழ் விக்கிபீடியா பற்றி கருத்து சொன்ன ஒருவர் நாம் சமஸ்கிருதப் பண்டிதர் மாதிரி எழுதுவதாக சொன்னார்...காலத்தின் கொடுமை என்பது இது தான் ! 50களில் வட சொல் கலந்து எழுதுவதை நல்ல தமிழ் என்று நினைத்தவர்கள், இப்பொழுது தனித்தமிழில் எழுதினால் அதை சமஸ்கிருதம் என்று நினைக்கிறார்கள். திசைச் சொற்களை பெறலாம் என்ற ஒரு விதியை சாக்கு காட்டி எல்லா மொழியையும் குழப்பி அடித்து கடைசியில் தமிழ் எது என்றே தெரியாமல் அடுத்த தலைமுறையை குழம்ப வைத்து விடுவார்கள் போல் இருக்கிறது. என் அக்கா மகன் rabbit வேறு முயல் வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் :(--Ravidreams 09:50, 29 நவம்பர் 2006 (UTC)Reply
ரவி இவ்வாறு நீங்கள் எழுதுவதை சமஸ்கிருதப் பண்டிதர் போன்று எழுதுவதாகக் கூறியவர் தமிழில் எவ்வாறு எழுதுவது என்று விக்கிபீடியாவில் வந்து எழுதிக்காட்டினால் ஓர் முன்மாதிரியாக இருக்கும். இதைவிட்டு மற்றவர்களைக் குறைகூறிக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. "வாய்ச்சொல்லில் வீரரடி" என்று பாரதியார் சொன்னதுதான் எனக்கு ஞாபகம் வருகின்றது. விக்கிபீடியாவில் நாம் அனைவரின் பங்களிப்பினையும் எதிர்பார்கின்றேன். --Umapathy 16:29, 29 நவம்பர் 2006 (UTC)Reply
"என் அக்கா மகன் rabbit வேறு முயல் வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்..." :-) ரவி, நீங்கள் கூறிய படி அந்த பட்டியலை விரைவில் ஆரம்பித்து விடுங்கள். அகரவரிசைப் படி. சமஸ்கிரத சொற்கள் இணையான தமிழ்ச் சொற்கள். அப்படி பல பட்டியல்கள், புத்தகங்கள் இருக்கின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் 250 சொற்களை முதலில் பட்டியலிடலாம். --Natkeeran 01:47, 30 நவம்பர் 2006 (UTC)Reply
ஏற்கனவே தனித்தமிழ் இயக்கம் கட்டுரையில் இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது. ஞானவெட்டியான் அவர்களும் தமது வலைப்பதிவு இடுகை ஒன்றில் இது போன்ற சொற்களை தொகுத்துத் தருகிறார். இன்னும் பல ஒத்த இடுகைகளும் அவர் இட்டிருக்கக் கூடும் என்றாலும் இப்பொழுது என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை --Ravidreams 10:14, 30 நவம்பர் 2006 (UTC)Reply

தற்போதைய வரையறை இங்கு பொருந்தவில்லை

தொகு
  • தற்போதைய வரையறை பொதுமைப்படுத்துகிறது.
  • மாவீரர் நாள் என்பது முதன்மையாகா விடுதலைப் புலிகளின் போராளிளை நினைவுகூறும் நாள் ஆகும்.
  • நினைவுகூரும் நாள் போன்ற கட்டுரையில் ஆல்லது வேறு ஒரு தலைப்பிலோ பொதுமைப்படுத்தப்பட்ட வரையறை பொருந்தலாம்.
  • இங்கு அவசியமற்றது.

--Natkeeran 23:13, 21 நவம்பர் 2008 (UTC)Reply

பொதுமைப்படுத்தப்பட்டது

தொகு

மாவீரர் நாள் என்பது தாய்/தந்தை நாட்டின் விடுதலைக்காகப் போராடி தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள் ஆகும். இது உலகின் பல நாடுகளிலும் அந்தந்த நாட்டு வீரர்களுக்காக நினைவு கூரப்படுகிறது. ஒவ்வொரு நாட்டவரும் தத்தமக்கென ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து அந்த நாளை மாவீரர் நாளாகப் பிரகடனம் செய்து இந்த அஞ்சலியைச் செய்வார்கள். குறிப்பிட்ட நாடுகளில் அந்த நாள் விடுமுறை நாளாகக் கூடப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

இருந்த வரையறை

தொகு

மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவ்வியக்கத்தால் மாவீரர்களாக கெளரவிக்கப்படும் இயக்கத்துக்கு வெளியேயான போராளிகளையும் நினைவுகூர்ந்து பெருமைப்படுத்தும் நாள் ஆகும். ஈழத் தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.

அது பற்றி நானும் யோசித்தேன். இது பொதுவாகிறது. மீண்டும் தமிழீழமாவீரர் நாளை முன்னிலைப்படுத்தி எழுதப் பார்க்கிறேன். முடிந்தால் நீங்களும் மாற்றுங்கள்.
--Chandravathanaa 23:28, 21 நவம்பர் 2008 (UTC)Reply

முன்னர் இருந்தவாறு மாற்றவா. கார்த்திகைப் பூ, எப்படி அஞ்சலி செலுத்துவார்கள் போன்ற விடயங்களில் விரிவுபடுத்தாலாம். --Natkeeran 23:30, 21 நவம்பர் 2008 (UTC)Reply

இக்கட்டுரையை வேண்டுமானால் இரண்டாக்கலாம். தமிழீழ மாவீரர் நாள் என்ற பெயரில் எழுதலாம். வேறு எந்த நாடுகளில் எப்போது கொண்டாடப்படுகிறது என அறிந்தால், அதனைப் பொதுக்கட்டுரையில் குறிக்கலாம்.--Kanags \பேச்சு 23:59, 21 நவம்பர் 2008 (UTC)Reply

ஏற்றவாறு மாற்றுங்கள். நான் பின்னர் முடிந்ததைச் சேர்க்கிறேன்
--Chandravathanaa 00:11, 22 நவம்பர் 2008 (UTC)Reply

சந்திரவதனா, நீங்கள் தொடர்ந்து இதனை எழுதி முடியுங்கள். பின்னர் தேவையானால் மாற்றலாம்.--Kanags \பேச்சு 00:28, 22 நவம்பர் 2008 (UTC)Reply
சந்திரவதனா, இக்கட்டுரையில் உள்ள தமிழீழப் பகுதிகளை அப்படியே மாவீரர் நாள் (தமிழீழம்) என்ற புதிய கட்டுரைக்கு நீங்களே மாற்றி விடுங்கள் (cut/paste அல்லாமல் copy/paste செய்யுங்கள்). இக்கட்டுரையைப் பொதுக்கட்டுரை ஆக்கி விடுகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 11:35, 23 நவம்பர் 2008 (UTC)Reply

வணக்கம் நக்கீரன். வழிமாற்று செய்தமைக்கு நன்றி. இந்த கட்டுரையை தேடித் திரிந்தேன் கிடைக்கவில்லை அதனால் நான் ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்தேன், நீங்கள் சரியான இடத்தை காட்டி உள்ளீர்கள். நன்றி.--சிவம் 10:45, 5 நவம்பர் 2012 (UTC)

Return to "மாவீரர் நாள் (தமிழீழம்)" page.