பேச்சு:மிகுவித்த மெய்ந்நிலை

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

--Natkeeran 22:14, 6 மார்ச் 2006 (UTC)

இணைப்புநிஜமாக்கம் - இவ்விரு வார்த்தைகளுக்கும் இடைவெளி இருக்க வேண்டுமல்லவா? --சிவகுமார் 16:03, 27 மே 2006 (UTC)Reply
ஆமாம், இடைவெளி நன்று போலதான் தெரிகின்றது. --Natkeeran 16:24, 27 மே 2006 (UTC)Reply

தலைப்பு பொருத்தமாகத் தோன்றவில்லை. வேறு தலைப்பு குறித்து சிந்திக்கலாம்--ரவி 12:12, 3 ஏப்ரல் 2007 (UTC)

மிகை உண்மை தொழில்நுட்பம் என்ற தலைப்பு பொருத்தமானதாக இருக்குமா என்பது குறித்து ஆலோசிக்கவும்--குமரன் (பேச்சு) 08:27, 28 சூலை 2012 (UTC)Reply

தலைப்பு

தொகு

"மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை" என்னும் இத்தலைப்பு மிகவும் நீண்டதாய் இருக்கிறது; செயப்பாட்டு வினை. அதோடு, மிகை என்ற சொல்லில் அதிக அளவு என்ற பொருள் இருந்தாலும், அது அவசியமற்ற, தேவைக்கு மிஞ்சிய என்னும் சாயலைத் தருவதாக எனக்குத் தோன்றுகிறது.

Augmentation என்பதற்கு அதிகப்படியான, கூடுதலான, மேம்படுத்தப்பட்ட விவரங்கள் பொருந்திய என்னும் பொருளமைந்தால் சிறப்பு. இவை தேவையற்ற விவரங்கள் அல்ல; மெய்யான நிலையை இன்னும் நன்கு அறிந்துகொள்ள, விளங்கிக்கொள்ள உதவும் கூடுதல் தகவல்கள்.

மிகை என்னும் சொல் கிளர்ந்த வேரான மிகு என்னும் வினைச்சொல்லில் இருந்து மிகுத்தல் என்ற சொல்லைப் புழங்கலாம்.

மிகு>மிகுதல்>மிகுத்தல் மிகு>மிகுவி>மிகுவித்தல்

மிகுத்தல் என்ற சொல் புதிதுமன்று. அது குறளிலேயே இருக்குமொன்று என்று அகரமுதலிகளும் எடுத்துக் காட்டுகின்றன.

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்" (குறள் 475)

(மயிலிறகே ஆனாலும் அளவு மிகுதியாய் ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும்)

அதனால், மிகுவித்த மெய்ந்நிலை என்றோ மிகுத்த மெய்ந்நிலை என்றோ நாம் கூறலாம். Augmented reality என்பது பெயரடை போன்ற பொருளையே கொண்டிருப்பதால், இவ்விரண்டில் மிகுத்த என்ற சொல்லையே கருத்தில் கொண்டு, Augmented reality என்பதற்கு "மிகுத்த மெய்ந்நிலை" என்றும் கூறலாம்.

-இரா. செல்வராசு (பேச்சு) 03:16, 4 சூலை 2023 (UTC)Reply

மிகுவித்த மெய்ந்நிலை பொருத்தமாக உள்ளது. அதையே பயன்படுத்தலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 03:25, 4 சூலை 2023 (UTC)Reply
மிகுவித்த மெய்ந்நிலை என்பதையே பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். செல்வா (பேச்சு) 05:13, 4 சூலை 2023 (UTC)Reply
கட்டுரையை நகர்த்தியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:21, 5 சூலை 2023 (UTC)Reply
Return to "மிகுவித்த மெய்ந்நிலை" page.