பேச்சு:மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள்

அருள் கூர்ந்து கருத்து கூறுங்கள்

தொகு

இக்கட்டுரையை நான் விக்கி மாரத்தானில் தொடங்கி வைத்தேன். இன்று முழுமையாக முடித்துள்ளேன். இக்கட்டுரை பற்றிய கருத்து தேவை. அது மேலும் மேலும் என் எழுத்தாற்றலை அதிகரிக்கும். என்னை இன்னும் ஆர்வத்துடன் எழுதத் தூண்டும் என்றும் எண்ணுகிறேன். ஆகவே அருள் கூர்ந்து கருத்து கூறுங்கள்.
--சூர்ய பிரகாசு.ச.அ. 14:15, 16 நவம்பர் 2010 (UTC)Reply

சூரிய பிரகாசு, நன்றாக எழுதியுள்ளீர்கள், ஆனாலும் சில திருத்தம் செய்யப்பட வேண்டும் (ஆங்கில விக்கி கட்டுரையும் சரியாக இல்லை). அதாவது மிதப்புப் புள்ளி செயல்பாடுகள் என்றால் என்ன, அதற்கான சில எடுத்துக்காட்டுகள் முதலியன இன்னும் தெளிவாக விளங்குமாறு சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இதற்குத் துணை செய்யும் முகமாக கீழ்வாய்ப்புள்ளி (radix point) பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். மிதப்புப் புள்ளி என்பது மிக அருமையான கலைச்சொல். பாராட்டுகள்! ஏனோ செயல்பாடுகள் (operations) என்னும் சொல் மிகச் சரியான சொல்லாக இருப்பினும் இங்கு பொருந்தாதது போலவே தெரிகின்றது (ஒருகால் பயன்படுத்தினால் பழகிவிடலாம்). ஒருகால் மிதப்புப்புள்ளி கணக்கு, கணிவினைகள் என்றால் சரியாக இருக்குமோ? ஆங்கிலத்தில் இக்கருத்தை அறியாத ஒருவர், இக்கட்டுரையை மட்டும் படித்து புரிந்து கொள்ள முடியுமா என்றால் சற்று ஐயமாகவே உள்ளது. காரணம், தக்க எடுத்துக்காட்டுகள் இல்லை. நானும் திருத்தி, தெளிவு பெற உதவமுடியுமா என்று பார்க்கிறேன். நீங்கள் கடினமான ஒரு கட்டுரரயை நன்கு எழுதியுள்ளீர்கள். பயனுடைய கட்டுரையும் கூட. --செல்வா 03:32, 17 நவம்பர் 2010 (UTC) இப்பக்கத்தைப் பார்த்தும் கருத்தை உள்வாங்கி தமிழில் எழுதலாம். இதில் நல்ல பல கருத்துகளும், "Real-world numerical catastrophes" என்னும் பகுதியில் மிதப்புப் புள்ளி என்னும் இக்கருத்தைச் சரிவர பயன்படுத்தாததால் ஏற்பட்ட பெரும் தீங்குகள் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளன. --செல்வா 03:36, 17 நவம்பர் 2010 (UTC)Reply


என்னால் இயன்ற அளவு மாற்றியுள்ளேன் ஐயன்மீர். இனியும் ஏதேனும் மாற்றம் தேவைப்படின் தாங்கள் இங்கு குறிப்பிடுங்கள். அல்லது விருப்பப் படின் நீங்களாகவே மாற்றிடுவீராக!
என்றும் அன்புடன் உங்கள் விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 08:53, 17 நவம்பர் 2010 (UTC)Reply

சூரியப்பிரகாசு, நல்ல கட்டுரை ஒன்றை எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். மிதப்புப் புள்ளி (Floating point பற்றிய ஒரு கட்டுரையும் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் கட்டுரைகளில் <br/> என எழுதுவது தேவையற்றது. கட்டுரையில் திருத்தம் செய்துள்ளேன். பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:47, 17

நவம்பர் 2010 (UTC)

அருமையான கன்னி முயற்சி. வாழ்த்துகள் !! இனி தொடர்ந்து பங்களித்து வாருங்கள். விக்கி சமூக உரையாடல்களை கவனித்தும் பங்களித்தும் வந்தால் உங்கள் உள்ளீடுகள் மேம்படும்.தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்களாக !--மணியன் 13:01, 17 நவம்பர் 2010 (UTC)Reply
சூரிய பிரகாசு, இப்பொழுது இக் கட்டுரை முன்பினும் மிக நன்றாக உள்ளது. நல்ல திருத்தங்கள் செய்துள்ளீர்கள். வேண்டிய மாற்றங்களை இன்னும் செய்வோம். முதல் பத்தியிலேயே, மிதப்புப்புள்ளி எண்கள் என்பன 2.345 அல்லது -7.4467 போன்ற பின்னத்தையும் சேர்த்துத் தொடர் எண்ணாக புள்ளியுடன் குறிப்பிடப்படும் எண் என்பதனையும், இது பொதுவாக இயல்பாகவே துல்லியம் அற்ற எண் முறை என்பதனையும் குறிப்பிடப் பெற வேண்டும். எங்கு எப்படிச் சேர்க்கலாம், மேலும் எப்படிப் பயனுடையதாக்கலாம் என்பதை எண்ணி திருத்தங்கள் செய்கின்றேன். மிக முக்கியமான ஒரு தலைப்பில் மிக நன்றாக நீங்கள் எழுதி ஒரு நல்வரலாறு படைத்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! --செல்வா 14:29, 17 நவம்பர் 2010 (UTC)Reply
செல்வா, உங்கள் நொமிசெகள் என்ற சுருக்கம் மிகவும் பொருத்தமாகவும் எளிதாகவும் உள்ளது. இத்தகைய சொல்லாக்கங்களை சீர்படுத்த வேண்டும்.ஒவ்வொரு பயனரும் ஒரே ஆங்கிலக் கலைச்சொல்லிற்கு புதிய சொற்களை பயன்படுத்துவதும் அறிவியல் தமிழ் வளர தடையாக உள்ளது.

அனைவருக்கும் நன்றி!

தொகு

இப்பேச்சுப் பக்கத்தில் கருத்து கூறி இச்சிறுவனை ஊக்குவித்த நிர்வாகிகளுக்கு நன்றி! திரு. செல்வாவின் நொமிசெகள் எனும் மொழியாக்கம் நான் இன்னும் சிறுவன் தான் என்பதை உணர வைக்கிறது. என்னால் என்னென்ன முடியுமோ அத்தனையும் நான் தமிழ் விக்கிகுச் செய்ய அணியமாக உள்ளேன். திரு. மணியன் அவர்களே உங்கள் அவாப் படியே மிதப்புப் புள்ளி என்ற கட்டுரையை நான் எழுதுகிறேன். என்றென்றும் உங்கள் நல்வாழ்த்துடன் விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 12:17, 18 நவம்பர் 2010 (UTC)Reply

Return to "மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள்" page.