பேச்சு:மின்தடையம்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார் in topic சில குறிப்புகள்
மின்தடையம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

சில திருத்தங்கள் செய்துள்ளேன், சில பிழைகள் நீக்கியுள்ளேன் (ohm/cm என்பது தவறு). விளக்கங்கள் சேர்த்துள்ளேன்.படித்துப் பார்க்கவும்--C.R.Selvakumar 02:23, 12 ஜூன் 2006 (UTC)செல்வா


மின் தடைமை நல்ல சொலதான். எனினும், மின்தடுதிறன், மின்தேக்கதிறன், மின்தூண்டுதிறன் போன்ற சொற்தொடர்கள் ஒரு கருத்து கோப்பை தருவதாக் எண்ணுகின்றேன். --Natkeeran 03:16, 12 ஜூன் 2006 (UTC)

மின்னோட்டத்தைத் தடுத்தல் என்பது தவறு, ஏனென்றால் முற்றுமாய் தடுத்துவிடுவதாக, நிறுத்திவிடுவதாகப் பொருள் படும், தடை எற்படுத்துவது என்று சொல்லும் பொழுது, மின்னோட்டத்திற்கு இடர் விளைவிக்கின்றது, எதிர்ப்பு ஏற்படுத்துகின்றது என்னும் பொருள்கள் வரும். தடுத்தல் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும்.

திறன் என்பது power, efficiciency என்னும் பொருள்களிலும் வரும் ஆகையால் தவிர்க்லாம் என நினைத்தேன். மை என்னும் பின் ஒட்டு அடிப்படைத் தன்மையை, பண்பைக் காட்டும். தடைமை என்பது தடை ஏற்படுத்தும் அடிப்படைப் பண்பு (இது பொருளின் அளவுகளைப்பொருத்தது அல்ல). தடுதிறன் என்பதில், தடு என்னும் சொல் வழுவான பொருளைத் தரும். தடை ஏற்படுத்துவது என்பது சற்று வேறான பொருள் தரும் (அடிச்சொல் ஒன்றாக இருந்தாலும், பொருள் கிளைப்பு சற்று வேறானது), என்வே தடுதிறன் என்பதில் இரு குழப்பங்கள் உள்ளன\(தடு + திறன்). There is an inductor and inductance, but there is no inductivity. Similarly, there is a capacitor, capcitance, but no capacitivvity. தமிழில் மின் தூண்டி = inductor, மின் தூண்டியம் அல்லது தூண்டுமம் அல்லது தூண்டம் = inductance, மின்தேக்கி = capacitor, மின் தேக்கியம் அல்லது மின் தேக்குமம் என்பது Capacitance. மின் தேக்கம் என்பது சரையல்ல என நினைக்கிறேன். மின்கொண்மி =capacitor, மின் கொண்மம் = capcitance. என்றும் பயன்படுத்தி இருக்கிறோம். இவை பற்றி சீராக எண்ணி முடிவுக்கு வர வேண்டும்.


ஆமாம், எதிர்ப்பு என்று பொருள் தரவேண்டும். தடைமை என்ற சொல்லுக்கு உங்கள் விளக்கம் நன்றே.
மின் தூண்டி, மின் தேக்கி நோக்கி நாம் மூன்று மூன்று சொற்களை அலச வேண்டும். மின்தேக்கியை தெரிவு செய்யும் பொழுது நாம் capacitance value, capacitance capacity பார்க்கின்றோம். இதைப்பற்றி சற்று அலசி விட்டு உங்களுடன் மீண்டும் என் கருத்துக்களை பகிர்கின்றேன். --Natkeeran 04:02, 12 ஜூன் 2006 (UTC)

சில குறிப்புகள்

தொகு
  • மின்தடையம் என்பது நன்றாக உள்ளது ஆனால் இதற்கு மின்தடையாக்கி என்றும் ஒரு வழிமாற்றை உருவாக்க வேண்டும். (த.நா. பாட நூல் கழகத்தின்படி)
  • Inductance = மின்தூண்டல் எண் (Inductance represents a number)
  • Capacitance = மின்தேக்குத் திறன் (It also represents a number)
  • மின்தேக்கி என்பதே சரியான சொல்லெனக் கருதுகிறேன். எண்ணிப் பார்க்கவும். மேலும் உரையாடுக!

--சூர்ய பிரகாசு.ச.அ. 16:45, 11 சனவரி 2011 (UTC)

இலங்கை பாட நூல்களில் மின்தடையி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருத்தப்பாடு பற்றியும் ஆராய்வது நல்லது.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:53, 11 சனவரி 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்தடையம்&oldid=2302856" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மின்தடையம்" page.