பேச்சு:மின்னழுத்தமானி

முக்கியமான கட்டுரை. எழுதியதற்குப் பாராட்டுகள். ஆனால் ஒரு கருத்து. கட்டுரையில் "இரண்டு புள்ளிகளுக்கிடையில் காணப்படும் மின்னிலையை அளக்கும் கருவியாகும்" - என்னும் கருத்தைத் திருத்தி அமைக்க வேண்டும். மின்னலையை அளப்பதல்ல. மின்னழுத்த வேறுபாடுகளை அளத்தல். இங்கு அலை என்னும் சொல் பொருந்தாது. மிக அதிக அதிர்வெண் மின்னோட்டத்தில் மின் கடத்துமை சற்று வேறாக அமையும், அப்பொழுது அலைவடிவில் செல்லும் பண்புகள் தலை தூக்கும், ஆனால் அப்பொழுதும் அலையை அளப்பதல்ல. --செல்வா 21:18, 9 ஏப்ரல் 2010 (UTC)

நான் அங்கு குறிபிட்டிருகிறது மின்னலை இல்லை . மேலும் அது மின்னிலை என்பதனையும் கவனிக்க. electric potential - மின்னிலை என்று மொழிபெயர்த்துள்ளேன். ஆயினும் இங்கு electric potential difference - மின்னிலை வேறுபாடு என்று தான் வரவேண்டும் . வேறுபாடு என்ற சொல்லை நான் குறிப்பிட மறந்துவிட்டேன் . அது தான் அங்குள்ள குழப்பம் என்று எண்ணுகிறேன்.இதில் வேறு ஏதேனும் பிழை இருந்தால் தெரிவிக்கவும் . நன்றி செல்வா. -- இராஜ்குமார் 03:49, 10 ஏப்ரல் 2010 (UTC)
voltage difference (மின்னழுத்த வேறுபாடு ) , potential difference (மின்னிலை வேறுபாடு) இரண்டிற்கும் சொல் வேறுபாடு இருக்க வேண்டும் என்பதற்காக மின்னிலை என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளேன். --இராஜ்குமார் 04:10, 10 ஏப்ரல் 2010 (UTC)
மிக்க நன்றி. நான்தான் தவறுதலாக படித்துவிட்டேன். மன்னிக்கவும். மின்னிலை (மின்நிலை) என்பது அருமையான சொல். மின்னழுத்த வேறுபாடும் மின்னிலை வேறுபாடும் ஒன்றுதான். Voltage difference and Potential Difference are the same. நாம் வோல்ட்டழுதம்,மின்னழுத்தம் என வேறுபடுத்திக் காட்டலாம். --செல்வா 13:18, 10 ஏப்ரல் 2010 (UTC)

Null Balance Method தமிழில் என்ன ?

தொகு

Null Balance Method -  ???? --இராஜ்குமார் 19:26, 10 ஏப்ரல் 2010 (UTC)

Null Balance Method - இன்ம சமனாகு முறை . இது எனது சிந்தனை . --இராஜ்குமார் 19:30, 10 ஏப்ரல் 2010 (UTC)

இன்மமாக்கு முறை, இன்மப்படுத்து முறை, இன்ம நடு நிறுத்து முறை. Balance என்பதற்கு நடமியம் எனலாம். எப்புறமும் சாயாது நிற்பதற்கு (அல்லது அப்படி இயங்குவதற்கு) நடு, நடவு, நடம் என்று பெயர். தமிழில் நடத்தல் என்றாலே முன்புறமோ, பின் புறமோ, பக்கவாட்டிலோ சாய்ந்து விழுத்துவிடாமல், தம் உடல் எடையை நடு நோக்கி நிறுத்தியே முன் ஏகுதல் என்னும் பொருள் தருவது. இது ஏதோ மிகைப்பட அண்மைக்கால அறிவியல் கருத்துகளை ஏற்றிக்கூறுவது போல தோன்றலாம், ஆனால் நடு, நட என்பதன் பொருள் அத்தகையதே. நடுங்கு என்றால், நடு நோக்கி அலைவது, அசைவது, அதிர்வது oscillate. கொடியை நடு என்றால், எப்புறமும் சாயாது நிற்கச்செய்யுமாறு "நடு"வது. நடு-நட், நண், நள் என்பன நடு என்னும் பொருள் கொள்வன. நடத்தல் என்பதன் வேறு ஓர் உருவம் நடம் = ஆடல், கூத்து (dance). நடனம்என்பது தமிழ்ச்சொல். நடர் (நடன்) என்றால் கூத்தர் என்பதும் பலருக்கும் தெரியாது. ஒருபால் கோடாது நடு நின்று அறம் கூறுவதால் அறம் வழங்குவோரை நடுவர் என்கின்றோம். போட்டிகளில் தேர்வு செய்வோரையும் நடுவர் என்கின்றோம். எஅன்வே இன்மநிலை நிறுத்துதலை இன்ம நடவுதல் எனலாம் (ஆனால் இப்படியான புதுக் கலைச்சொல் ஏற்கும் பக்குவம் நமக்கு இன்னுமில்லை, துணிவும் இல்லை). --செல்வா 19:59, 10 ஏப்ரல் 2010 (UTC)
நீங்கள் சொல்வது உண்மை தான் . சமனாகுதல் - equalising என்று பொருள் படுவதை தற்போது தான் கவனித்தேன் . இன்ம நடுதல் முறை , இன்ம நடவு முறை என்பன நடுதல் , நடவு போல் நம்மோர் பயிர் நடுதல் , நடவு என்று தான் புரிந்துகொள்ளக்கூடும் . நானும் அவ்வாறே நினைத்திருந்தேன். நடுநிலை என்பது வழக்கில் உள்ளதாக தெரிகிறது . ஆகையால் இதனை இன்ம நடுநிலையாக்க முறை என்று பெயரிடலாம் என்று எண்ணுகிறேன் . வேறு பரிந்துரைகள் இருந்தாலும் கூறுங்கள் . நன்றி . --இராஜ்குமார் 10:07, 11 ஏப்ரல் 2010 (UTC)
பழ. இராஜ்குமார்! நீங்கள் பங்களிக்க வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. null என்பது zero என்ற பொருள் கொண்டதால் சுழி(யம்) என்றும் balance என்றால் தராசு என்பது முதன்மையான பொருள் - தராசில் சமநிலை எட்ட வேண்டும் (அப்போது தானே சரியான அளவு!). எனவே null balance method = சுழிச் சமநிலை முறை எனலாமே? என் தாழ்மையான கருத்து அனைவரும் எளிதில் கற்கக்கூடிய, புழங்கும்படியான சொற்கள் வேண்டும். தமிழறிந்தோரிலும் தமிழ் கற்றோரிலுமே கூட, புலமை வாய்ந்தவர்கள் எத்துணை பேர் இருப்பர்? --பரிதிமதி 10:48, 11 ஏப்ரல் 2010 (UTC)
வணக்கம் பரிதிமதி ! தங்கள் கருத்துக்கும் , பரிந்துரைக்கும் நன்றி . இன்மம் என்பது ஒன்றும் அவ்வளவு பழக்கப்படாத ஒன்றல்ல. சிறு வயதில் கணிதம் கற்றவர்கள் தான் இது போன்ற பல வகையான கருவிகளை பற்றி கறப்பார்கள் . கணிதம் , இயற்பியல் இதெல்லாம் துளிகூட தெரியாதவர்கள் யாரும் இவ்வகையான கட்டுரைகளை படிக்க மாட்டார்கள் . ஆகையால் இதனை பயன்படுத்த எந்த வித ஐயமும் தேவையில்லை என்பது என் கருத்து . மேலும் சுழியம் , சுழிய என்றால் அதன் பொருள் அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது . ஆனால் சுழி என்பது சுழித்தல் , போன்ற பொருள் கொண்டு அது எதோ ஒரு குறிகை என்று தவறாக என்னவும் தோன்றும் . சுழிய சமநிலை முறை என்பது பொருத்தமாக இருக்கக் கூடும். -- இராஜ்குமார் 11:56, 11 ஏப்ரல் 2010 (UTC)


Null Balance Method

தொகு
  1. இன்ம நடவுதல் முறை
  2. இன்ம நடுநிலை யாக்க முறை ,
  3. சுழிச் சமநிலை முறை
  4. சுழிய சமநிலை முறை
  5. இன்ம சமனாகு முறை
  6. சுழிய சமனாகு முறை
  7. இன்ம நிறுத்து முறை
  8. சுழிய நிறுத்து முறை
  9. இன்ம நடுவு முறை

எல்லா சொற்களுமே நன்றாக இருப்பதாகவே எனக்குப் படுகின்றது (4-6 ஒற்று பற்றியது). மதிப்பெண்கள் 1-10 வரை தந்தால் எல்லாமே 8-10 பெறும். சுழிசமநிலை ஆக்கல், சுழியீடு ஆக்கல்/நிறுத்து முறை, சுழியாக்கு முறை எனப் பலவும் பொருந்தும்.--செல்வா 14:22, 11 ஏப்ரல் 2010 (UTC)

இக்கட்டுரையில் சுழியமாக்கல் முறை (Null Balance Method) என்று பயன்படுத்தி உள்ளேன் . -- இராஜ்குமார் 16:36, 11 ஏப்ரல் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்னழுத்தமானி&oldid=508818" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மின்னழுத்தமானி" page.