மின்னழுத்தமானி

மின்னழுத்தமானி (Voltmeter) என்பது ஒரு மின்சுற்றில் உள்ள இரண்டு புள்ளிகளுக்கிடையில் காணப்படும் மின்னழுத்த வேறுபாடுகளை அளக்கும் கருவியாகும். ஒப்புமை மின்னழுத்தமானிகள் மின் சுற்றில் அறியப்படும் மின்னழுத்தத்திற்கு ஏற்றாற்ப் போல் ஒரு முள்ளை வரையறுக்கப்பட்ட ஒப்பளவின் மீது நகர்த்தும். எண்முறை மின்னழுத்தமானிகளில் ஓர் ஒப்பிலக்க மாற்றி இருக்கும். அதன் பயனால் மின்னழுத்தத்தை எண்களாக காட்சிப்படுத்தும்.

இயற்பியல் பாட வகுப்பில் காண்பிக்கப்படும் ஒரு மின்னழுத்தமானி

ஒரு மின்சுற்று வரைப்படத்தில் மின்னழுத்தமானியானது ஒரு வட்டத்தினுள் V என்ற எழுத்தினால் குறிப்பிடப்படும்.[1][2]

மின்னழுத்தமானியைப் பல வடிவங்களில் உருவாக்குகின்றனர். மின்னழுத்தத்தைக் கண்காணிக்க மின்னியற்றிகளில் நிரந்தரமாக மின்னழுத்தமானிகள் பொருத்தப்படுகின்றன. பொதுவாக மின்னியல் மற்றும் இலத்திரனியல் வேலைகளில் பல்பயன் அளவி போன்ற கையடக்க மானிகளைத் தான் பயன்படுத்துவார்கள். பல்பயன் அளவி பயன்படுத்த எளிதாகவும், கையடக்கமாகவும் இருப்பதினால் இது வழக்கமான சோதனைக் கருவியாக தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாறியது . எந்த ஒரு அளவையையும் மின்னழுத்தமாக மாற்றி, அதனை முன்னரே அளவுத்திருத்தம் செய்யப்பட்ட மீட்டர்களில் அளவீடலாம், உதாரணமாக, இரசாயன தொழிற்சாலைகளில் உள்ள செயல்முறை நிலைகள் மற்றும் அளவுகளான அழுத்தம், வெப்பம், மட்டம், ஓட்டம் போன்றவற்றை மின்னழுத்தமாக மாற்றி தகுந்தபடியாக கண்காணிக்க முடிகிறது.

பொதுப்பயன்பாட்டு ஒப்புமை மின்னழுத்தமானிகளின் ஒப்பளவில் சில விழுக்காடு பிழையின்மை உண்டாகலாம். அவை ஒரு வோல்ட்டு முதல் சில ஆயிரம் வோல்ட்டுகள் அளவிட பயன்படும். எண்முறை மின்னழுத்தமானிகளில் பிழையின்மை அதிகமாக 1 % மேல்வரை கொண்டதாக இருக்கும் அலை பெருக்கிகள் கொண்ட எண்முறை காட்சிமதிப்பினில் நுண்ணிய வோல்ட்டு வேறுபாடுகளையும் கண்டறிய இயலும் .

பிழையற்ற அல்லது பிழைகுறைந்த மின்னழுத்தமானிகள் உருவாக்கும் பொழுது செயல் படுத்தும் அளவுத்திருத்தங்கள் அதன் பிழையின்மையை சரிபார்க்க துணை நிற்கிறது. ஆய்வகங்களில், துல்லியமான பயன்பாட்டுக்கு வெஸ்டன் மின்கலம் தான் பயன்படுத்துவர். மின்சுற்றுகளில் துல்லிய வோல்ட்டு குறிப்புகள் பொறிக்கப்பட்டிருக்கும்.

டி அர்சொன்வல் வகை சுருள் நகர்த்தும் கால்வனோமானி.
  • சிவப்பு கம்பியானது அளக்கவிருக்கும் மின்னோட்டத்தை எடுத்துச் செல்லும்.
  • நிலை திரும்பும் சுருள்வில் பச்சை நிறம் ஆகும் .
  • N , S ஆகியவை காந்தத்தின் வட தென் துருவங்கள் ஆகும் .

ஒப்புமை மின்னழுத்தமானி

தொகு

ஒரு சுருள் நகர்த்தும் கால்வனோமானியை மின்தடையத்தோடு தொடர்நிலையாக அமர்த்தி மின்னழுத்தமானியாக செயல்படுத்த இயலும் . கால்வனோமீட்டர் என்பது ஓர் அடர்ந்த மின்புலத்தில் நுண் கம்பிகளை சுருள்களாக பொருத்துவதாகும் . மின்சாரத்தினை அந்த கால்வனோமானியிலுள்ள கம்பிச் சுருள்களின் மீது செலுத்தும் பொழுது, கம்பிச்சுருளின் காந்தப்புலமும், நிலைக்காந்தத்தின் காந்தப்புலமும், கம்பிச்சுருளை சுற்றுவதற்கான முறுக்குவிசையை உருவாக்கும், கம்பிச்சுருளின் கோணச் சுற்றும் சுருளில் பாயும் மின்சாரமும் நேர்த்தகவில் இருக்கும். முறுக்குவிசையினால் மீட்டரிலுள்ள குறிகாட்டியானது சுற்றும், மேலும் கம்பிகளான சுருள்வில்லை நெருக்கும். கம்பிச்சுருளின் விலகல் அதன்மீது செலுத்தப்பட்ட மின்னோட்டத்திற்கு நேர்விகிதத்திலிருக்கும், இதையொட்டி இந்த சுற்றிலுள்ள மின்னழுத்தமானது குறிகாட்டியால் அளவீடுகளில் காட்டப்படும்.

அளவீட்டுகருவிகளின் வடிவமைப்பு குறிக்கோள்களில் ஒன்று உபயோகத்திலிருக்கும் மின்சுற்றுக்களில் அளவீட்டு கருவிகளை செயல்படுத்த குறைந்த மின்சாரமே செலவிடும்படியாக வடிவமைக்க வேண்டும், இதன் மூலம் மின்சுற்றுகள் அதிகம் பாதிப்படையாது. இது அதீத உணர்வுள்ள ஓர் கால்வனாமீட்டரை உயர் மின்தடையத்துடன் தொடர்நிலையாக பொருத்துவதால் நிகழ்த்தமுடியும், மேலும் இதனை பரிசோதிக்கவேண்டிய மின்சுற்றுக்கு இணையாக பொருத்தி மின்னழுத்தத்தினை அளவீடலாம்.

எண்முறை மின்னழுத்தமானி

தொகு
 
இரண்டு எண்முறை மின்னழுத்தமானிகள்

முதல் எண்முறை மின்னழுத்தமானியை நேரியலற்ற அமைப்புகளைக் சேர்ந்த அன்றியூ கே (மற்றும் கேப்ரோ வின் பிற்கால நிறுவனரும்) 1952 இல் கண்டறிந்து உருவாக்கினர்.

எண்முறை மின்னழுத்தமானிகள் பெரும்பாலும் ஒப்பிலக்க மாற்றி போன்று தனி ரக வடிவமாக அமைப்பார்கள். மின்னழுத்தமானியின் பிழையின்மையானது வெப்பம் , கொடுக்கப்படும் மின்னழுத்தம் போன்ற பல காரணிகளால் பாதிக்கிறது. மின்னழுத்தமானிகளின் காட்சிமதிப்பு உற்பத்தியாளரின் பிழை பொறுத்தல் தன்மைக்குள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, காலமுறை தோறும் வெஸ்டன் மின்கலம் போன்ற நியம மின்னழுத்தங்களுடன் அளவு திருத்தங்கள் செய்தல் வேண்டும்.

மின்னிலைமானி

தொகு

மேலும் ஒரு முறையில் மின்னழுத்தத்தை அளவிட முடியும் அது சுழியமாக்கல் முறையில் (Null Balance Method) மின்னிலைமானியை பயன்படுத்துதல் ஆகும். இன்மம் உணர்த்தி, இரண்டு மின்சுற்றுகளுக்கு இடையே சுழிய மின்னழுத்தம் உடையதாக காண்பிக்கும் வரையில் மின்னிலைமானியின் தடையம் (மின்தடையம்) மாறுதல் அடைந்து கொண்டே இருக்கும்.

 

இதில்,

  • V_{t}t என்பது சோதனைப் புள்ளிகளுக்கிடையே மின்னழுத்தம்.
  • V_{k} என்பது அறிந்த மின்னழுத்தம்.
  • R_{e} என்பது ஒரு முனையத்தில் இருந்து மறு முனையம் வரை உள்ள மின்னிலைமானிய தடையம்.
  • R_{w} என்பது தடவுப் பொருளுக்கும் முனையத்துக்கும் உள்ள மின்னிலைமானிய தடையம்.

மின்னழுத்தமானியின் வரைபடக் குறிகை

தொகு

கீழுள்ள உதாரண மின்சுற்று வரைபடத்தில் மின்னழுத்தமானியின் குறிகையைக் காணலாம். இந்தச் சிறிய தொடர்நிலை மின்சுற்று வரைபடத்தில் மின்னழுத்தமானியின் V குறிகை மின்னழுத்தத்தையும், மின்னோட்டமானியின் A குறிகை மின்னோட்டத்தையும் குறிக்கிறது.

 

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Markoff, John (5 Sep 2014). "Andrew Kay, Pioneer in Computing, Dies at 95". Obituary. New York Times. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.
  2. "What is RMS Voltage". Electrical4U (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-21. பார்க்கப்பட்ட நாள் 2023-04-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னழுத்தமானி&oldid=4101907" இலிருந்து மீள்விக்கப்பட்டது