பல்பயன் அளவி

பல்பயன் அளவி அல்லது பல்பயன் கருவி என்பது வோலட்டு/ஓம் மீட்டர் அல்லது VOM என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மின்னணுசார் அளக்கின்ற கருவி ஆகும். இதில் பலவகையான செயல்பாடுகள் ஒரே அலகில் இணைந்திருக்கின்றது. குறிப்பிடத்தக்க பல்பயன் அளவிகல் மின்னழுத்தம், மின்னோட்டம் மற்றும் மின்தடை போன்றவைகளை அளக்கும் திறன் போன்ற சிறப்புக்கூறுகள் உள்ளடங்கியிருக்கும். பல்பயன் அளவிகள் இரண்டு பகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது, தொடர் முறை பல்பயன் அளவிகள் மற்றும் எண் முறை பல்பயன் அளவிகள் . (DMM அல்லது DVOM என்பது அதன் சுருக்கங்கள்).

எண்முறை பல்பயன் அளவி

பல்பயன் அளவி என்பது கையில் அடக்கமாக அமைந்திருக்கக்கூடிய, பயனுள்ள அடிப்படை குற்றங்காணல் கருவி ஆகும். இதை புலப் பணிக்காகவும் மற்றும் பலகை கருவியாகவும், மிக அதிக பாகையுள்ள பிழையின்மையை அளவிட முடிகிறது. இதனை பெரிய அளவில் வரிசைப்படுத்தப்பட்ட தொழிலக மற்றும் வீட்டு உபயோக சாதனங்களில் உள்ள குறைகளையும் சரிபார்க்கப் பயன்படுத்தலாம். அதாவது மின்கலங்கள், மோட்டார் கட்டுப்பாடு, பயன்படு கருவி, திறன் வழங்கல் மற்றும் கம்பியிணைப்பு அமைப்பு.

பல்பயன் அளவிகல் மிகப் பெரிய வீச்சிலான சிறப்புக்கூறுகள் மற்றும் விலையில் கிடைக்ககூடியவையாகும். கீழ்த்தரமான பல்பயன் அளவிகள் US$ 2 என்ற விலையிலும் கூட கிடைக்கும். மேலும் அதிக விலை கொண்ட அளவிகள் US$ 5000 க்கும் மேலாக இருக்கும்.

வரலாறு

தொகு
 
அவோமானி

குறித்த காலத்திற்கு முன்பு விஞ்ஞானிகள் மின்சாரத்தை அளவிட கால்வனோ அளவிகலை உபயோகப்படுத்தினார் . கால்வனோ அளவியை கொண்டு மின்தடை (தெரிந்த மின்னழுத்தம் கொடுக்கும் நிலையில்) மற்றும் மின்னழுத்தம் (மாற்றமில்லாத மின்தடை கொடுக்கம் நிலையில்) போன்றவைகளை அளவிட, ஒரு கம்பியின் உதவியால் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் தொடக்கநிலை ஆய்வகத்தில், ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு மாற்ற இது ஏற்றதாக தென்படவில்லை.

பல்பயன் அளவிகள் 1920 ஆம் ஆண்டிற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் ரேடியோ பெரும் கருவிகள் மற்றும் பிற வெற்றிடக்குழாய் மின்னணுசார் கருவிகள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக பல்பயன் அளவிகளை உருவாக்கியதை அஞ்சல் அலுவலக பொறியாளர் திரு.டொனால்டு மகாடி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் இவர் அதிருப்தி அடைந்தார். ஏனெனில் இவர் மற்ற அறிய வகை கருவிகளை, தொலைதொடர்பு சுற்றுகளின் பராமரிப்புக்காக, கூடவே எடுத்துக்கொண்டு செல்கிற நிலமை ஏற்பட்டது. பிறகு மகாடி மற்றொரு கருவியை உருவாக்கினார். அதில் ஆம்பியர்ஸ், வோல்ட்ஸ் மற்றும் ஓம்ஸ் போன்ற பல வகை செயல்பாடுகளை அளவிட முடிந்தது. பின்னர் அதற்கு அவோமீட்டர் என்று பெயரிடப்பட்டது.[1] அவ்வகை அளவியில், ஒரு கால்வனோ மீட்டர், மின்னழுத்தம் மற்றும் மின்தடைக்கான குறிப்புகள், மற்றும் அளவிட உள்ளீடுகளுக்கு ஏற்ற சுற்று பகுப்பை தேர்ந்தெடுக்க ஒரு ஆளி இருக்கும்.

மகாடி தன் சிந்தனையை ஆட்டோமேடிக் காயில் வையிண்டர் மற்றும் எலெக்ட்டிரிகல் எகுப்மெந்த (ACWEEC, ஏறக்குறைய 1923 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது) தொழிற்சாலைக்கு கொண்டு சென்றாரர்.[2] முதல் AVO 1923 ஆம் ஆண்டு விற்பனைக்காக வைக்கப்பட்டது. எனினும், இது முதலாவதாக DC மட்டுமே உபயோகிக்கும் கருவியாக இருந்தது. இதன் பல சிறப்புக்கூறுகள், இப்போதைய மாடல் 8 இல் இன்னும் மாற்றப்படாமலே காணப்படும்.

எவ்வாறு நவீன முறை கருவிகள் மிக கடினமாக செயல்ப்படுகிறதோ, அதைபோல் பல்பயன் அளவியும் அவ்வித முறைகளுக்கு ஏற்றதாக கடினமாக உருவாக்கபடுகின்றது. இதனை தொழில்நுட்ப வல்லுநர்களின் கருவி கலப்பெட்டியில் சிறப்பு கருவியாக இணையப்படுகிறது. எ.கா, பொதுவாக பயன்படுத்தும் பல்பயன் அளவிகள் குறுஞ்சுற்றுகள், கடத்தி மின்தடை மற்றும் காப்பிடல் திறனின் சில உருநயமற்ற அளவுகளை கொண்டு, நவீன தொழில்நுட்ப வல்லுநர்கள், பிணையம் மின் இணைப்பான்களின் செயல்பாடை, கையில் அடக்கமாக அமைந்த பகுப்பாய்வியை பல கூறலவுகளை அளக்க பயன்படுத்துவார்கள். [3]

அளவிடும் கணியங்கள்

தொகு

நவீன பல்பயன் அளவிகளின் உதவியால், பல வகை எண்ணிக்கைகளை அளவிட முடியும். அவற்றில் சில பொதுவான வகைகள்:

கூடுதலாக, கீழ்கண்டதையும் பல்பயன் அளவிகளினால் அளவிட முடியும்:

  • கொண்மம் ஃபேரட்சில்
  • கடத்துவலு சீமென்சில்
  • டேசிபெல்ஸ்
  • சதவிதமாக பணிசுழற்சி
  • அதிர்வெண் ஹெர்ட்சில்
  • வெப்பநிலை டிகிரி செல்சியசில் அல்லது பாரன்ஹீட்டில்

இலக்க முறை பல்வகை அளவிகலில் கீழ்க்கண்டவைகளின் வரைகோடுகளும் உள்ளடக்கமாகி உள்ளன:

  • வரைகோடின் கடத்தகூடிய திறனை தெரிவிக்கும்படி அதாவது தொடர்ச்சியை குறிக்க பீப் ஒலி
  • இருமுனையம் மற்றும் டிரான்சிஸ்ட்டர்
  • சாதாரண 1.5 மற்றும் 9V மின்கலத்தை சோதிக்க முடிகிறது. இதில் காணப்படும் வாசிப்பை சாதாரண குறைந்த ஒப்பளவு DCV செயல்பாடுடன் துல்லியமாக செயல்பட வைக்க முடியும். இதை பல வகையான அளவிகளில், வீட்டில் உபயோகிக்கும் மற்றும் "தானே செய்யும்" பயனர்களின் வசதிக்காக, உள்ளடக்கப்பட்டுள்ளது.

பலவகையான உணரிகளும் இத்தகை பல்பயன் அளவிகளில் இணைக்கப்பட்டு கீல்கண்டவைகளை அளக்க முடிகிறது. அவைகள்:

  • ஒழி மட்டம்
  • அமிலத்தன்மை/காரத்தன்மை (ph)
  • காற்றின் வேகம்
  • ஒப்பு ஈரப்பதம்

பகுப்பு

தொகு

டிஜிட்டல் (எண்முறை)

தொகு

பல்பயன் அளவியின் பகுப்பை, பகுப்பின் "இலக்கம்" என்றே அடிக்கடி குறிக்கப்படுகிறது. எ.கா, ஐந்தரை இலக்கம் என்கிற சொல், பல்பயன் அளவியின் திரையில் காணப்படும் இலக்கத்தின் எண்ணிக்கையை குறிக்கிறது.

மரபு வழியாக, பூஜ்யம் அல்லது ஒன்று என்பதை அரை இலக்கம் காண்பிக்கும். அதைப்போலவே, ஒன்பது இல்லாமல் ஒன்றுக்கு மேலான எண்களை முக்கால் இலக்கமாக காண்பிக்கும். பொதுவாக, முக்கால் இலக்கம் என்பது மூன்று அல்லது ஐந்து என்கிற அதிகபட்ச எண்களைக் குறிக்கிறது. காண்பிக்கும் பெறுமதியில் அதிக கணிசமான இலக்கம், பகுதியான இலக்கம் ஆகும். ஐந்தரை இலக்கம் கொண்ட பல்பயன் அளவியில் முழுதாக ஐந்து எண்கள், பூஜியத்திலிருந்து ஒன்பது வரை மற்றும் ஒன்றரை இலக்கத்தில் பூஜ்யம் அல்லது ஒன்று ஆகிய எண்கள் மட்டுமே காண்பிக்குப்படுகிறது.[4] அவ்வகையான அளவிகளில், பூஜியத்திலிருந்து 199,999 வரையில் நேர் அல்லது எதிர் பெறுமதி எண்களும் தெரிவிக்கப்படும். உற்பத்தியாலார்களைப் பொருத்து, மூன்றரை அளவிகளில் பூஜியத்திலிருந்து 3,999 அல்லது 5,999 வரை எண்களைக் காட்டும்.

எண்முறை காண்பித்தலை துல்லியமாக எளிதில் நீடிக்க வைக்கும் அதே நேரத்தில், கூடுதலான எண்களை மதிப்பிட தேவை இல்லை. இதனால் பல்பயன் அளவியின் தொடர்முறை பகுதிகளில் வடிவமைப்பு மற்றும் அளவுதிருத்தலில் கவனம் செலுத்த தேவை இருக்காது. கருவிகளின் விவரக்கூறுகளை நன்கு புரிந்து கொள்ளுதல், அளவுகளின் நிபந்தனைகளை நன்கு கட்டுபடுத்துதல் மற்றும் கருவிகளின் அளவுதிருத்தலை ஆராய்ந்து கண்டுபிடித்தல், ஆகியவை அர்த்தமுள்ள உயர்ந்த-நுணுக்கம் கொண்ட அளவுகளுக்கு தேவைப்படுகின்றது.

"டிஸ்ப்ளே கவுண்ட்ஸ்" என்று குறிப்பதே நுணுக்கத்தைக் குறிப்பிட செய்ய மற்றொரு வழியாகும். பலபயன் அளவியில் டிஸ்ப்ளே கவுண்ட்ஸ் என்பது பெரிய எண்களைக் கொடுக்கும், அல்லது பெரிய எண் கூட்டல் ஒன்று (ஆகையால் கவுன்ட் எண்கள் பார்வைக்கு நன்றாக இருக்கும்) என்று காண்பிக்கும். இது பதின்மம் பிரிப்பானை புறக்கணித்து காண்பிக்கும். எ.கா., ஐந்தரை பல்பயன் அளவுகளை 199999 டிஸ்ப்ளே கவுன்ட் அல்லது 200000 டிஸ்ப்ளே கவுன்ட் பல்பயன் அலவிகளாக குறிக்கலாம். அடிக்கடி டிஸ்ப்ளே கவுன்ட்டை, பல்பயன் அளவி விவரக்கூற்றுகளின் எண்ணிக்கை என்று கூறலாம்.

அனலாக் (தொடர் முறை)

தொகு

தொடர் முறை பல்பயன் அளவிகளின் நுணுக்கங்களை, தராசின் சுட்டிக்காட்டியின் அகலம், சுட்டிக்காட்டியின் அதிர்தல், தராசிலுள்ள அச்சடித்தலின் பிழையின்மை, எண்களின் குறிப்பிட்ட எல்லை மற்றும் இயந்திரமயமான காண்பித்தலின் தடையில்லாத பயன்பாட்டில், பிழைகள் ஏதேனும் இல்லாமல் அளவிட செய்யலாம். பிரிவு குறிமுறையை தவறாக எண்ணியோ, மனக்கணிதத்தில் தவறுகள், இடமாறு தோற்றம் கவனிப்பாய்வின் தவறுகள் மற்றும் பூரணமான கண்பார்வை வீட குறைந்த, போன்ற பிழையின்மையை அடிக்கடி விட்டு கொடுக்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. கண்ணாடியிட்ட கோல்கள் மற்றும் பெரிய மீட்டர் அசைவுகளை சீர்திருத்த பயன்படுத்தப்படுகின்றது; இரண்டரை அல்லது மூன்று எண்களுக்கு ஏற்ற நுணுக்கங்கள் வழக்கமானது (மற்றும் உண்மையாக அதிக அளவுகளுக்கு தேவைப்படும் எல்லைக்குட்பட்ட துல்லியத்துக்கு இது போதுமானதாகும்).

மின்னழுத்த அளவீடுகள், குறிப்பாக, உருமாதிரியான மின்னழுத்த அளவுகளினால் குறைந்த துல்லியத்தைக் கொண்டவை ஆகும். இதுவே உயர்ந்த மின்னழுத்த மதிப்புகளில் கோலை மிகுதியாக அழுத்தும். மலிவான தொடர்முறை அளவிகளில் ஓர் ஒற்றைய மின்னழுத்த கோல் மட்டுமே காணப்படும். துல்லியமான அளவிடுகளின் எல்லைகளைப் இதுவே கட்டுப்படுத்தும். குறிப்பிடத்தக்கதாக ஓர் தொடர்முறை அளவிகள், மீட்டரின் மின்கலத்தின் மாறும் மின்னழுத்தத்தை ஈடுசெய்ய, பூஜ்யம்-ஓம்ஸ் அளவு குறித்தலை அமைக்க அடைசுபலகை சீர்படுத்துகையைக் கொண்டிருக்கும்.

துல்லியம்

தொகு

தொடர்முறை ஒத்த பகுதிகளை ஒப்பிடும் பொழுது எண்முறை பல்பயன் அளவிகள் பொதுவாக மேன்மையாக பிழையின்மையான அளவுகளை எடுக்கும்.[5] தொடர்முறை பல்பயன் அளவிகள் குறிப்பிடத்தக்கதாக மூன்று சதவீத பிழையின்மையுடன் அளவெடுக்கும். தரமான எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய எண்முறை பல்பயன் அளவிகள், DC மின்னழுத்த எல்லைகளில் 0.5% பிழையின்மை கொண்ட அளவுகளை எடுக்க கூடிய திறமை கொண்டவை ஆகும். முக்கியமான போக்கு மேஜை-மேல் வைக்க கூடிய பல்பயன் அளவிகள், ±0.01% ஐ விட மிக சிறந்த பிழையின்மையை அளிக்க கூடும்.ஆயிவகம் தரம் கொண்ட கருவிகள், ஓர் பகுதிகளுக்கு மில்லியன் வடிவங்கள் என்ற கணக்கில் பிழையின்மையை கொடுக்க கூடியவை ஆகும்.[6]

ஓர் பல்பயன் அளவியின் சுட்டப்பட்ட பிழையின்மை குறைந்த (mV) DC எல்லையாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அது "அடிப்படை DC வோல்ட்டின் பிழையின்மை" என்று அழைக்கப்படுகின்றது. உயர்ந்த DC மின்னழுத்த எல்லைகள், மின்சாரம், மின்தடை, AC மற்றும் மற்ற எல்லைகள், அடிப்படை DC வோல்ட்ஸ் வாசிப்பை விட பொதுவாக குறைந்த பிழையின்மையை மட்டுமே கொண்டவை ஆகும்.

உற்பத்தியாளர்கள் அளவு குறித்தல் பணிகளை வழங்குவதனால், அளவுகளை தேவைக்கு ஏற்ற தரத்தில் சரிசெய்து, அதை குறிக்கும் படியாக அளவு குறித்தல் சான்றிதழுடன் புதிய அளவிகளை பெற முடியும். எ.கா., தீ அமெரிக்கன் இன்ஸ்டிடியுட் ஆப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் டேக்நோலோஜி, அல்லது மற்ற தேசிய தர ஆய்வகம். இவர்களை போன்ற உற்பத்தியாளர்கள் அளவு குறித்தல் பணிகளை விற்பனைக்கு பிறகும் வழங்குவார்கள். அதுமட்டுமில்லாமல், இதனால் பழைய கருவியை புதிய மறு சான்றிடப்படலாம். உய்யநிலை அளவிடுகளுக்காக உபயோகப்படும் பல்பயன் அளவிகள், அளவு குறித்தலை உறுதி கூற அளவியல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

உணர்திறன் மற்றும் உள்ளிட்ட மின்மறுப்பு

தொகு

மின்சாரத்தின் பாரம் அல்லது சோதனையிடப்படும் சுற்றில் இருந்து எவ்வளவு மின்சாரம் எடுக்கப்படுகின்றது என்பதை பல்பயன் அளவியின் பிழையின்மையைப் பாதிக்கும். குறைந்த அளவு மின்சாரத்தை இழுப்பத்தின் விளைவாக பொதுவாக துல்லியமான அளவிட முடிகிறது. தவறான முறையில் உபயாக படுத்துவதோ அல்லது அதிக அளவில் மின்சாரத்தை ஏற்றுவதன் மூலம், ஒரு பல்பயன் அளவி சேதமடைந்து விடலாம். ஆகையால் அளவுகளை நம்பகமமில்லாமலும் மற்றும் தரக்குறைவாகவும் வழங்கும்.

மின்னணுவியல் ஒலி பெருக்கி கொண்ட அளவிகள் (எல்லாவித எண்முறை பல்பயன் அளவிகள் மற்றும் சில தொடர்முறை பல்பயன் அளவிகள்) உள்ளிட்ட மின்மறுப்பைக் கொண்டிருக்கும். அது பொதுவாக மிக அதிகளவில் சோதனையிடும் எற்றுகளை பாதிக்காது என்று ஆலோசிக்கப்படுகின்றது. மேலும் தேர்ந்தெடுத்த எல்லைகள் சாராமல் இருக்கும். இது பொதுவாக, பத்து இலட்சம் ஓம்ஸ், அல்லது ஒரு கோடி ஓம்ஸ் ஆகும். தரமான உள்ளிட்ட மின்மறுப்பு புற சோதனைக் கோள்களை நேர் மின்சாரத்தை அளவிடும் எல்லைகள் பத்திலிருந்து ஆயிரம் வோல்ட்ஸ் வரை நீட்டி உபயோகத்திற்கு அனுமதிக்கின்றது.

அசையும் குறிமுள் கொண்ட பல தொடர்முறை பல்பயன் அளவிகள் இடைத்தாங்காததாகும். மேலும் அளவி குறிமுள் விலக்குவதற்காக மின்சாரத்தை சோதனை இடும் சுற்றிலிருந்து இழுக்கும். அளவியின் மாறுமின் மறுப்பு மாற்றுப்படுவது அளவியின் அசைவில் அடிப்படை உணர்திறனை மற்றும் அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லையை சார்ந்திருக்கும். எ.கா. 20,000 ஓம்ஸ்/வோல்ட் உணர்திறனை கொண்ட ஒரு அளவி, இருபது லட்சம் ஓம்ஸ் உள்ளிட்ட மின்தடையை 100 வோல்ட் எல்லைக்குள் கொண்டதாகும். (100 வோல்ட் * 20,௦௦௦ ஓம்ஸ்/வோல்ட் = 2,000,000 ஓம்ஸ்) எல்லாம் எல்லைகளில், எல்லையின் முழு கோல் மின்னழுத்தத்தில், அளவியின் அசைவுக்காக முழு மின்னளவையும், சோதனையிடும் சுற்றிலிருந்து எடுக்கப்படும். திறன் கொண்ட சுற்றுகளில் அளவியின் மாறுமின் மறுப்பை வீட ஆதாரம் மாறுமின் மறுப்பு குறைவாக இருந்தால், குறைந்த உணர்திறன் கொண்ட அளவிகளை பொதுப் பயன் சோதனைக்காக பயன்படுத்தப்படும் . அறிகுறி சுற்றுகளில் சில அளவிடுகள் அதிக உணர்திறனை கோரிக்கையிடுகிறது. இதனால் மீட்டர் மறிப்புடன் சோதனையிடும் சுற்றுகளின் சுமை ஏற்று கொள்ள கூடாது.[7]

சிலநேரம் உணர்திறனை, அளவியின் நுணுக்கத்துடன் திகைக்க வைக்கக்கூடும். அதுவே அளவீடுகளின் வாசிப்பைக் குறைந்த மின்னழுத்தமாகவோ, குறைந்த மின்சாரமாகவோ அல்லது மின்தடையில் மாற்றமாகவோ விவரிக்கப்படுகின்றது. பொதுப்பயன் எண்முறை பல்பயன் அளவிகளுக்கு, ஒரு முழு-கோல் எல்லையின் பல நூறு மில்லி வோல்ட்ஸ் AC அல்லது DC என்பது பொதுவானது. ஆனால் தாழ்வான முழு-கோல் மின் எல்லை பல நூறு மில்லி ஆம்பியர்ஸ் ஆக இருக்கும். பொது பயன் எண்முறை அளவிகளில், இருகம்பி மின்தடை அளவுகள் கொண்டிருப்பதால், ஈய கம்பி மின்தடையின் தாக்கத்தை ஈடுசெய்தல் முடியாது. சில பத்துகள் அளவில் ஓம்ஸை விடக் குறைவாக இருக்கும் அளவுகளை, மிக குறைந்த பிழையின்மையுடன் அளவெடுக்கப்படும். உற்பத்தியாளரை பொருத்து, பல்பயன் அளவிகளில் அளவு எல்லைகளின் மேலான அந்தம் மாறுப்படலாம். பொதுவாக, 1000 வோல்ட்ஸுக்கு மேலாக, 10 ஆம்பிர்ஸுக்கு மேல் அல்லது 100 மெகா ஓம்ஸ்-க்கு மேலாக இருக்கும் அளவுகளை அளவெடுக்க பிரத்யேகமான சோதனை கருவி தேவைப்படுகிறது. மின்சாரத்தின் ஒரு மைக்ரோ ஆம்பியர் அல்லது அதை விடக் குறைந்த மின் அளவை துல்லியமாக அளவெடுக்க, இக்கருவி உதவும்.

உட்கரு மின்னழுத்தம்

தொகு

DC மற்றும் அச என்கிற இரண்டு மின்சார எல்லைகளிலும், ஒரு பல்பயன் அளவி சோதனையிடும் சுற்றில் மின்னழுத்த இறக்கத்தை உண்டாக்கும். அடிப்படையாக, அளவிட பயன்படும் மின் இணைத்தடம் தடையினால் இந்நிலை உருவாகும். இவ்வகை மின்னழுத்த வீழ்ச்சியை உட்கரு மின்னழுத்தம் என்று அறியப்படும். இதை வோல்ட்ஸ்/ஆம்பீயரில் குறிப்பிடப்படும். பல்வேறு எல்லைகள் பொதுவாக பல்வகை இணைத்தடம் தடையினை உபயோகப்படுத்துவதால், அளவி தேர்ந்தெடுக்கும் எல்லையைப் பொருத்து பெறுமதி மாறக்கூடும்.[8]

மாறுதிசை மின்னோட்டத்தின் உணர்வு

தொகு

அடிப்படை காட்டி அமைப்பில் தொடர்முறை அல்லது எண்முறை அளவிகள் DC யை மட்டும் ஏற்கும் நிலையில், மாறுதிசை மின்சாரத்தை அளவெடுக்க, ஓர் பல்பயன் அளவியை AC இல் இருந்து DC ஆக மாற்ற சுற்றைக் பெற்றவையாகும்.அடிப்படை பல்பயன் அளவிகள் {0}சீராக்குஞ்சுற்று{/0} என்பதைப் பயன்படுத்தும். திருத்தப்பெற்ற சைன் வடிவ அலையின் சராசரிப்பெறுமான்மை மதிப்பிட அளவுதிருத்தப்படுகிறது. இவ்வகை அளவிகளுக்கு பயனர் கையேடு சில எளிதான அலைபடங்களைச் சரி செய்யும் காரணிகளைக் கொண்டிருக்கும். சராசரி-பதிலளிக்கும் மீட்டருக்கு சரியான இரு மடங்கு மூலம் (RMS) க்கு சமானமான மதிப்பைக் கணக்கிட அனுமதிக்கின்றது. மிக விலை உயர்ந்த பல்பயன் அளவிகள், பெரிய அளவில் சாத்தியமான அலைப்படங்களின் RMS மதிப்புக்கு தகுந்த செயலாற்றும் AC இலிருந்து DC ஆக மாற்றும் கருவியைக் கொண்டது; அளவிகளின் பயனர் குறிப்பேடு முடிக்காரணியின் எல்லையை மற்றும் மீட்டரின் அளவு குறித்தலின் முறைப்படி அமைந்த அதிர்வெண்ணைச் சுட்டிக்காட்டும். சைன்வளைகோடு இல்லாத அளவுகளுக்கு, RMS உணர்வு அறிதலை அளவிட தேவைப்படுகிறது. அதாவது, ஒலி அறிகுறிகளில் அல்லது நிலையில்லா-அதிர்வெண் இயக்கியில் இது காணப்படும்.

எண்முறை பல்பயன் அளவிகள் (DMM அல்லது DVOM)

தொகு

நவீன பல்பயன் அளவிகள், பிழையின்மை, நிலைப்பு மற்றும் கூடுதலான‌ சிறப்புக்கூறுகள் போன்ற காரணத்தால் பெரும்பாலும் எண்முறை வகையென்று கூறப்படுகின்றது. எண்முறை பல்பயன் அளவிகளில் சோதனையிடக் கூடிய குறிப்பலையை மின்னழுத்தமாக மாற்றப்படுகின்றது. மேலும் மின்னணுவியற் முறையில் கட்டுப்படுத்திய நயம் கொண்ட ஒரு மிகைப்பியின் உதவியால் குறிப்பலையைப் பக்குவப்படுத்தப்படுகின்றது. ஓர் எண்முறை பல்பயன் அளவி, அளவிட்ட அளவை ஓர் எண்ணாகக் காண்பிக்கும். அது இடமாறு தோற்றப் பிழைகளைத் தடுக்கும்.

நவீன பல்பயன் அளவிகளில் உட்பொதிக்கப்பட்ட கணிப்பொறி இருக்கலாம். இதனால் மிக சௌகரியமான சிறப்புகூறுகளைப் பெறலாம். பொதுவாக கிடைக்கின்ற அளவிடு உயர்த்தல்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

  • தானே-வீச்சம், கணிசமான எண்களைக் காண்பிப்பதற்காக சோதனைக்கு வைத்திருக்கும் அளவையைப் பயன்படுத்தி சரியான எல்லைக்குள் தேர்ந்தெடுகின்றது. எ.கா., ஓர் நான்கு-எண் பல்பயன் அளவி தானே ஓர் ஏற்ற எல்லையைத் தேர்ந்தெடுத்து 0.012 க்கு பதிலாக 1.234 என்பதைக் காண்பிக்கும். தானே-வீச்சம் அளவிகள் பொதுவாக குறிப்பிட்ட எல்லைக்குள் அளவிகளை "பிரீஸ்" என்ற வசதியைக் கொண்டிருக்கும். ஏனெனில், தொடர்ச்சியாக எல்லை மாறுதலை உண்டாக்கும் அளவுகள் பயனரின் கவனத்தைத் திருப்பும். மற்ற காரணிகள் சரிசமமாக இருக்கும் நிலையில் தானே இயங்கா வீச்சத்தை ஒப்பிடும்போது, ஓர் தானே-வீச்சம் அளவியில் அதிக மின்சுற்றுகைகள் இருக்கும். மேலும் அதனால் அதன் விலையும் அதிகமாக இருக்கும் நிலையிலும் அதை பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்.
  • தானே-முனைக் குறியீடு, நோ மின்சாரம் வாசிப்புகளுக்காக, பயனுறு மின்னழுத்தம் நேராகவோ (மீட்டர் வகித்த சீட்டுகளுடன் ஒத்துபோகும்) அல்லது எதிரானதாகவோ (மீட்டர் வகிக்க எதிரான முனைக்-குறியீடு) காட்டும்.
  • சாம்பல் அண்ட் ஹோல்ட் , சோதனையிடும் சுற்றிலிருந்து பரிசோதனைக்காகக் கருவியை அகற்றிய பின், மிக அண்மைய வாசிப்புகளைத் தாழ் இடும்.
  • மின்-மட்டிட்ட சோதனைகள் அரைக் கடத்தி சந்திப்புகளில் மின்னழுத்தம் வீழ்ச்சிக்காக டிரான்சிஸ்ட்டர் சோதிப்பானுக்கு மாற்று வைப்பாக இல்லாமல், இருமுனையம் மற்றும் பல வகையான டிரான்சிஸ்ட்டர்களைச் சோதனையிட இடர்பாடுகளை எளிதாக்குகிறது.[9][10]
  • சோதனைக்காக வைத்திருக்கும் அளவின் வரைபட அமைப்பு , சட்டவரைப்படமாக தெரிவிக்கும். இது சோதனை செய்வதை செல்/செல்லாதது என்று சுலபமாக்கும், மேலும் வேகமாக-இயங்கும் நடைமுறைகளைக் கண்டுகொள்ள அனுமதிக்கிறது.
  • குறை கற்றை அகலம் அலைவுகாட்டி .[11]
  • தானுந்து சுற்று சோதிப்பான், தானுந்து நேரக் கணிப்பான் மற்றும் வாசம் செய்யும் தெரிசைகைகளுக்கான சோதனை.[12]
  • சாதாரணம் தரவு கையகப்படுத்துதல் என்பது குறிப்பிட்ட காலத்தில் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்சம் வாசிப்புகளைப் பதிவு செய்வதைக் குறிக்கிறது அல்லது நிலையான இடைவேளைகளில் மாதிரிகளை எடுப்பது.[13]
  • சாமானங்கலுடன் தொகுத்தலுக்காக மேற்பரப்பு-ஏற்றுகை தொழில்நுட்பம் .[14]
  • சிறிய அளவு SMD மற்றும் முழுத்துளை பொருட்களுக்காக ஒரு கூட்டு LCR மீட்டர் .[15]

நவீன அளவிகள், நேர்முக கணிப்பொறியுடன் இடைமுகக்கப்படலாம். அதற்கு IrDA இணைப்புகள், RS-232 தொடர்புகள், USB அல்லது IEEE-488 போன்ற கருவி பாட்டைகள் தேவைப்படும். இவ்வகை இடைமுகங்கள், கணிப்பொறி அளவுகளைப் பதிவு செய்ய உதவுகிறது. சில DMM கள், அளவுகளைச் சேகரித்து அதனை மற்றொரு கணிப்பொறியில் பதிவேற்றும்.[16]

முதல் எண்முறை பல்பயன் அளவி 1955 ஆம் ஆண்டில் நான் லினியர் சிஸ்டம்ஸ்சினால் உருவாக்கப்பட்டது.[17][18]

அலைமருவி பல்பயன் அளவிகள்

தொகு

ஓர் பல்பயன் அளவியை, கல்வனோமானி மீட்டரின் அசைவால் செயற்படுத்த முடியும். ஓர் சட்டவரைப்படத்துடன் அல்லது LCD அல்லது வெற்றிடம் உடனொளிர் காட்டல் போன்ற போலியான குறிமுள்ளுடன் செயற்படுத்த முடியலாம். எண்முறை பல்பயன் அளவிகளைப் போலவே தரமான தொடர்முறைக் கருவிகள், விலையில் ஒன்றாக இருந்தாலும் தொடர்முறை பல்பயன் அளவிகளே பொதுவானதாகும். தொடர்முறை பல்பயன் அளவிகள், துல்லியம் மற்றும் வாசிப்பின் பிழையின்மை கட்டுப்பாடுகளைக் கொண்டவை ஆகும். மேலும் இதனால் இதனை எண்முறை கருவிகள் போலவே பிழையின்மையை அழிக்காதபடி கட்டும்.

சில நேரங்களில் தொடர்முறை அளவிகள் வாசிப்பின் மாறு வீதத்தை ஆய்ந்து காண மிகச்சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இந்த நோக்கத்திற்காக, சில எண்முறை பல்பயன் அளவிகள் வேக-பதில்கொடுக்கும் சட்டவரைப்படத்தைக் காண்பிக்கும். வடிகட்டி கொள்ளளவியின் சாதாரண நல்ல/நல்லதல்லாத சோதனை என்பதே ஓர் உருமாதிரியான எடுத்துக்காட்டாகும். இதுவே தொடர்முறை மீட்டரின் மிக விரைவான மற்றும் எளிதான சோதனையாகும் (எண்முறை மீட்டரின் பிழையின்மையை விட குறைந்தே காணப்படும்). தொடர்முறை பல்பயன் அளவிகள் அடிக்கடி ரேடியோ அதிர்வெண் குறுக்கீட்டுக்கு குறைந்த அளவே சுலபமாய் பாதிக்கப்படும் என்று ARRL கைப்புத்தகம் அறிவுறுத்துகிறது.[19]

அசையும் குறிமுள் கொண்ட தொடர்முறை பல்பயன் அளவியில் மீட்டர் அசைவு வழக்கத்தில் எப்போதும் டி'அற்சொன்வல் வகையின் அசைசுருட் கல்வனோமானி என்றதாகவே இருக்கும். அடிப்படை தொடர்முறை பல்பயன் அளவியில், சுருட் மற்றும் குறிமுள்ளை விலக்க தேவையான மின்சாரம், அளவிடப்படும் சுற்றிலிருந்து இழுக்கப்படுகின்றது; இது பொதுவாக சுற்றிலிருந்து இழுக்கப்படுகின்ற மின்சாரத்தின் அளவைக் குறைக்க உதவியாக இருக்கும். தொடர்முறை பல்பயன் அளவியின் உணர்திறனை ஓம்ஸ்/வோல்ட் என்ற அலகில் கொடுக்கப்படும். எ.கா., ஓர் மலிவான பல்பயன் அளவி 1000 ஓம்ஸ்/வோல்ட் என்ற உணர்திறனும் மற்றும் முழு கோல் அளவிட்ட மின்னழுத்தத்தில் சுற்றிலிருந்து ஒரு மில்லி ஆம்பியர் மின் அளவும் கொண்டிருக்கும்.[20] மிக விலை உயர்ந்த, (மற்றும் அதிக நுண்மையான) பல்பயன் அளவிகள், 20,000 ஓம்ஸ்/வோல்ட் அல்லது இன்னும் உயர்ந்த உணர்திறனை, 50,000 ஓம்ஸ்/வோல்ட் மீட்டர்ரோடு (20 மைக்ரோ-ஆம்பிர்ஸ் மின்சாரத்தை முழு கோலில் இழுத்தல்) கொண்டவை ஆகும். இதுவே மேல் அளவு கொண்ட எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய, பொதுப் பயன், பெருக்காத தொடர்முறை பல்பயன் அளவி ஆகும்.

மீட்டர் அசைவால் மின் அளவை அளவிடும் சுற்றின் சுமையைத் தவிர்க்க, சில தொடர்முறை பலபயன் அளவிகள், அளவிடும் சுற்று மற்றும் மீட்டர் அசைவிற்கு நடுவில் ஓர் மிகைப்பியைப் பயன்படுத்தும். அதே நேரம், இது அளவியின் விலை அதிகரித்தது. மேலும் மிகைப்பியை இயக்க திறன் வழங்கி தேவைப்படும். வெற்றிட வால்வு மற்றும் புல விளைவு டிரான்சிஸ்டரை உபயோகிப்பதால் உள்ளிட்ட மின்தடையை மிக அதிகமாக மற்றும் மீட்டர் அசைவு சுருட்டை இயக்க சார்பற்ற மின்சாரத்தை அளிக்க முடியும். இந்தவகை மிகைப்பிய பல்பயன் அளவிகள், VTVMs (வெற்றிடக்குழாயுவோற்றுமானி), TVMs (டிரான்சிஸ்டர் வோற்றுமானி), FET-VOMs என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

சோதனைக் கோல்கள்

தொகு

சுற்றை இணைக்க பலவித சோதனை கோல்களை ஓர் பல்பயன் அளவி உபயோகப்படுத்தலாம். முதலை பிடிப்பான்கள், பின்னிழுக்கக் கூடிய கொக்கி மற்றும் குறிப்பிட்ட கோள்கள் ஆகியவற்றை மூன்று வித பற்றுகைகள் ஆகும். பொருத்திகள் நெகிழ்வுடைய, மீட்டருக்கு பொருத்தமான பொருத்தியுடன் அடர்த்தியாக காப்பிடப்பட்ட இழுதுகளினால் முடிக்கப்பட்ட இணைப்பால் இணைந்திருக்கிறது. கையில் அடக்கமாக அமைந்த அளவிகள் குறிப்பிடத்தக்கதாக சவச் சீலையிட்ட அல்லது இடுக்காக்கிய வாழைவடிவத் திருகுபொறிகளைப் பயன்படுத்தும், அதே நேரம் மேஜைமேல் வைக்கும் அளவிகள், வாழைவடிவத் திருகுபொறிகளை அல்லது BNC பொருத்திகளை உபயோகப்படுத்தும். 2mm செருகிகளும், காடமைப்பு தூண்களும் சில சமையம் பயன்படுத்தப்படும். ஆனால் இன்றைய பயன்பாட்டில் பொதுவாக உபயோகப்படுத்துவதில்லை.

மிக உயர்ந்த மின்னழுத்தத்தை அல்லது மின்சாரத்தை அளவிடும் அளவிகள், பாதுகாபிற்காக பிழையின்மையை அடைய, தொடர்பு இல்லாத பொருத்தி இயங்கமைப்பைப் பயன்படுத்தலாம். கிடுக்கி அளவிகள், ஓர் சுருட்டை அளிக்கும். இது கடத்தியை சுற்றி கிடுக்கி, அதில் மின்ப்பாய்ச்சலை அளவிட செய்கிறது.

பாதுகாப்பு

தொகு

மிக அதிக மலிவான பல்பயன் அளவிகள், ஓர் உருகி அல்லது இரண்டு உருகிகளை உள்ளடக்கியது. இது சில நேரங்களில் பல்பயன் அளவியை அதிக சுமையினால் சேதப்படுத்தும். இருப்பினும், உருகி, அடிக்கடி பல்பயன் அளவியின் அதிக மின் எல்லையை மட்டுமே காப்பாற்றுகிறது. பல்பயன் அளவியை இயக்கும் பொழுது பொதுவாக செய்யும் தவறு, மீட்டரை மின்னழுத்தம் அல்லது மின்தடையை அளக்க அமைப்பது, பிறகு குறைந்த மாறுமின் மறுப்பு மின்னழுத்த மூலத்தில் நேரடியாக இணைப்பதுதான்; பாதுகாப்பு இல்லாத அளவிகள், இவ்வகை தவறுகளால் மிகவும் சீக்கிரமாக சேதமாகிறது. மேலும் சில நேரங்களில் வெடித்து சிதறி பயனரை காயப்படுத்தலாம். அளவிகளில் பயன் படுத்தும் உருகிகள், கருவியின் அதிக அளவிடும் மின்சாரத்தைக் கொண்டிருக்கும். ஆனால், இயக்குபவர் தவறு குறைந்த மின் மறுப்பு வழுவை வெளிப்படுத்தினால், வழுநீக்கும் என்று கருதப்படுகிறது.

கணிப்பொறியுடன் இடைமுகப்பு செய்ய அனுமதிக்கும் அளவிகளில், கணிப்பொறியை மற்றும் இயக்குநரை அளவிடும் சுற்றின் உயர்ந்த மின்னழுத்தத்திலிருந்து ஒளியியல் தனித்திருத்தல் பாதுகாப்பு அழிக்கிறது.

எண்முறை அளவிகள் பகுப்பு அறுதியின் கருதிய உபயோகத்தை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது. இது CEN EN61010 தரத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.[21] அங்கே நன்கு பகுப்புகள் உள்ளன:

  • பகுப்பு 1  : மின்சாரத்தின் மட்டம் குறைவாக இருக்கும் நிலையில் பயன்படுத்தப்படும்.
  • பகுப்பு 2  : வதிவிடம் கிளை சுற்றுகளில் பயன்படுத்தப்படும்.
  • பகுப்பு 3 : வினியோக குழுக்கள், இயக்கிகள் மற்றும் பயன்படு கருவிகளின் வெளியேற்றும் குழாய்கள் போன்ற நிரந்தரமானா பொருத்திய ஏற்றுகளில் உபயோகப் படுத்தப்படுகிறது.
  • பகுப்பு 4 : மின்சாரத்தின் அளவு அதிகமாக இருக்கும் இண்டங்களில் அதாவது, பணி நுழைவுகளில், முக்கிய பலகங்களில் மற்றும் வீட்டின் அளவைக் கருவிகளில் உபயோக படுத்தப்படும்.

ஒவ்வொரு பகுப்புகலும் அளவியின் குறிப்பிட்ட அளவிடல் எல்லைகளின் அதிகபட்சம் நிலையற்ற மின்னழுத்தத்தை குறிக்கிறது.[22][23] பகுப்பு-மதிப்பிடப்பட்ட அளவிகளில் மிகை மின்னோட்டம் பிழைகளிலிருந்து பாதுகாப்பு வழங்கும் சிறப்பையும் கொண்டது.[24]

DMM பதிலீடுகள்

தொகு

உணர்திறனின் கருத்தியல் எல்லைகளைத் தாண்டி ஒரு மில்லிவோல்ட் அல்லது மில்லி ஆம்பியரை விட அதிகமாகவோ அல்லது ஒரு ஜிகாஓமை விட குறைவாகவோ இருக்கும் குறிப்பலைகளை அளவிட, ஓர் பொதுப் பயன் DMM பொதுவாக போதுமானதாகக் கருதப்படுகிறது. மிக சிறிய அல்லது மிகப் பெரிய அளவுகளை அளவிட, மற்ற கருவிகள் துல்லியமான அளவிடுக்காகப் பயன்படுத்துகிறது. இதில் நானோ மின்னழுத்த அளவிகள், மின் அளவிகள் மற்றும் பைகோ அம்பியர்மானிகள் போன்றவைகள் இவ்வகையை சேர்ந்ததாகும். வேண்டுகோளின் தேவைப்படி, அதிக மின்னழுத்த உணர்திறன் மற்றும் குறைந்த மூல மின்தடை இருந்தால் ஓர் நானோ மின்னழுத்த அளவி, அளவுகளின் அறிமுறை வரம்பின் மிக அருகில் உள்ள மட்டத்திற்கு அளவிட தகுதி பெற்றதாகும்.

மின்னழுத்தத்தின் மிக உயர்ந்த மூல மின்தடை மதிப்பீடுகளை (ஒரு டெரா-ஓம் போன்றவை) அளவிட, ஓர் மின்மானி என்பதே பொதுவாக சிறந்த விருப்ப பேரம் ஆகும். கீழ் மட்ட மின் அளவீடுகளை மின்மானி அல்லது பைகோமீட்டரின் உதவியால் அளவிடப்படுகிறது.

மின்கலம்

தொகு

கையில் அடக்கமாக அமைந்த அளவிகள், மிக குறைந்த மின்கலம் அல்லது மின்கலங்களை, தொடர் மற்றும் மின்னழுத்த வாசிப்புகளைக் காண்பிப்பதற்காக பயன்படும். மெலும் ஓர் எண்முறை பல்பயன் அளவியை அல்லது FET-VOM இல் ஓர் மிகைப்பியை, இவ்வகை மின்கலம் சக்தி அழிக்கலாம். இதனால், ஓர் கருவி தன் முக்கிய மூல திறனில் இருந்து துண்டிக்கப்பட்டாலும் அதற்கு தன் குறைந்த மின்னழுத்தத்தைக் கொடுத்து மீட்டரை அளவிட உதவுகிறது. ஓர் 1.5 வோல்ட் AA மின்கலம் உருமாதிரியானதாகும்; கூடுதல் திறப்பாடுடைய மிக அதிநவீன அளவிகளும் பொதுவாக ஓர் ஒன்பது வோல்ட் மின்கலத்தைக் கூடுதலாக சில வகை வாசிப்புகளுக்காக பயன்படுத்தும். அல்லது உயர்ந்த மின்தடை சோதனையிட உயர்ந்த மின்னழுத்த மின்கலங்களைப் பயன்படுத்தும். இடர்விளையக்கூடிய இருப்பிடங்களில் அல்லது வெடிப்பு சுற்றுகளில் சோதனைக்காகக் கருதபடும் அளவிகளில், அதன் பாதுகாப்பு வீதத்தைத் தொடர்ந்து செயலாக்க, உற்பத்தியாளரைக் குறிக்கும் மின்கலம் தேவைப்படலாம்.

மேலும் காண்க

தொகு
  • மின்னோட்ட அளவி
  • அவோமானி
  • மின்னணு பரிசோதனை உபகரணம்
  • அளவி (மின்னணுவியல்)
  • ஓம்மானி
  • மின்னழுத்தமானி
  • உவாற்றுமானி

மேற்குறிப்புகள்

தொகு
  1. http://www.glias.org.uk/news/237news.html
  2. www.gracesguide.co.uk / AVO
  3. Fluke Manufacturing. "Fluke DTX CableAnaylzer Series". Archived from the original on 2007-04-08. பார்க்கப்பட்ட நாள் 2007-01-28.
  4. "Digital Multimeter Measurement Fundamentals". National Instruments. Archived from the original on 2011-05-27. பார்க்கப்பட்ட நாள் 2008-01-26.
  5. Milton Kaufman. Handbook of electronics calculations for engineers and technicians. McGraw-Hill.
  6. Agilent Technologies. "Agilent 3458A Digital Multimeter Data Sheet" (PDF). Archived from the original (PDF) on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2007-01-28.
  7. Horn, Delton (1993). How to Test Almost Everything Electronic. McGraw-Hill/TAB Electronics. pp. 4–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0830641270.
  8. "A Precision Current Adapter for Multimeters (Silicon Chip magazine April 2009)". alternatezone.com. பார்க்கப்பட்ட நாள் 2009-09-22.
  9. Hewes, John. "Testing a diode with a multimeter". பார்க்கப்பட்ட நாள் 2007-01-28.
  10. Goldwasser, Samuel. "Basic Testing of Semiconductor Devices". பார்க்கப்பட்ட நாள் 2007-01-28.
  11. Extech Instruments. "Extech 5 MHz Dual Channel Multiscope". Archived from the original on 2006-12-08. பார்க்கப்பட்ட நாள் 2007-01-28.
  12. Snap-on Incorporated. "MT596AK Automotive Digital Multimeter". Archived from the original on 2007-03-11. பார்க்கப்பட்ட நாள் 2007-01-28.
  13. Extech Instruments. "Extech Dual Channel, Datalogging multimeter". Archived from the original on 2006-12-08. பார்க்கப்பட்ட நாள் 2007-01-28.
  14. Siborg Systems Inc. "Digital Multimeter Smart Tweezers from Siborg". பார்க்கப்பட்ட நாள் 2008-04-23.
  15. Advance Devices Inc. "Smart Tweezers LCR Digital Multimeter" (PDF). Archived from the original (PDF) on 2007-01-09. பார்க்கப்பட்ட நாள் 2009-01-20.
  16. Fluke Manufacturing. "Logging and analyzing events with FlukeView Forms Software" (PDF). Archived from the original (PDF) on 2007-03-18. பார்க்கப்பட்ட நாள் 2007-01-28.
  17. "Gauging the impact of DVMs". EETimes.com. Archived from the original on 2008-08-27. பார்க்கப்பட்ட நாள் 2008-01-26.
  18. Dyer, Stephen (2001). Survey of Instrumentation and Measurement. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 047139484X.
  19. Wilson, Mark (2008). The ARRL Handbook For Radio Communications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0872591018.
  20. பிரான்க் ஸ்பிட்சர் மற்றும் பாரி ஹவ்ராத் நவீன கருவி மயமாக்கத்தின் கொள்கைகள் , ஹோல்ட் , ரைன்ஹர்ட் மற்றும் வின்ஸ்டன் கூட்டுப்பதிவு, நியூயார்க் 1972, எண் ISBN, காங்கிரசின் நூலகம் 72-77731, பக்கம் 39
  21. Safety requirements for electrical equipment for measurement, control and laboratory use. General requirements. 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0580224333.
  22. Dyer, Stephen (2001). Survey of Instrumentation and Measurement. p. 285. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 047139484X.
  23. "Anatomy of a high-quality meter". Archived from the original on 2006-10-18. பார்க்கப்பட்ட நாள் 2008-01-26.
  24. Mullin, Ray (2005). Electrical Wiring: Residential. Thompson Delmar Learning. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1401850200.

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Multimeters
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்பயன்_அளவி&oldid=3714306" இலிருந்து மீள்விக்கப்பட்டது