மின்சுற்று

மின்சுற்றானது (electric circuit) மின்கூறுகளான மின்தடை, மின்தூண்டி, மின்தேக்கி, நிலைமாற்றி போன்றவற்றின் இணைப்பாகும். இது தேசிய மின்வழங்கலோ அல்லது தொலைத் தொடர்பாடல் வலையமைப்புப் போன்றோ பெரிதாக இருக்கலாம்.

மின்சுற்று மாதிரிகள் தொகு

இயற்கையில் இருப்பவற்றை இயற்பியல் கோட்பாடுகள் மூலம் ஒப்பு நிறுத்தி, அந்த இயற்பியல் கோட்பாடுகளையும் விதிகளையும் மின்சுற்று உறுப்புகளாக ஒருங்கே முன்னிறுத்தப்படுகின்றது. மின்சுற்று நிலையில் ஒப்புநிறுத்தும் பொழுது நாம் இயற்கையை நேரடியாக கையாளவேண்டிய தேவையை தவிர்த்து கொள்ளலாம்.

இயற்கைக்கும் இயற்பியல் விதிகளுக்கும் இருக்கும் தொடர்பும் இயற்பியல் விதிகளுக்கும் மின்சுற்று உறுப்புகளுக்கு இருக்கும் தொடபை துல்லியமாக அறிந்ததன் மூலமே இந்த ஒப்புநிறுத்தல் சாத்தியமானது. இது அறிவிலாளினதும் நுட்பவிலாளர்களினதும் நீண்ட உழைப்பின் பயனாகும்.

இந்த மின்சுற்று உறுப்புகளில் இருந்து சிக்கலான மின்சுற்றுக்களும் மேல் நிலை ஒப்பு நிறுத்தலும் உண்டு.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்சுற்று&oldid=3371499" இலிருந்து மீள்விக்கப்பட்டது