பேச்சு:மின்னழுத்தம்
வரைவிலக்கணம், முதல் வரியில்
தொகுவிக்கிபீடியா நெறிமுறையின்படி முதல் வாக்கியம் தலைப்பின் definition ஆக இருக்க வேண்டும். எனவே definition -ஐ தந்து விட்டு பின் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். -- சிவகுமார் 16:56, 8 ஜூன் 2006 (UTC)
- போதிய பின்புல அறிவும், கலைச்சொல் அறிமுகமும் படிப்போருக்கு இல்லாதிருக்க வாய்ப்பிருப்பதால்
சில சொற்களுக்கு இவ்வாறு எடுத்த உடனே வரையரை தரவேண்டாம் என நினைக்கிறேன். அருமையான நல்ல வரையரை தர இயலும், எடுத்த எடுப்பிலே, ஆனால் படிப்பவர் விட்டிவிட்டு ஓடிவிடுவார். கலைக்களஞ்சிய முறைபாடுகளை நன்கு அறிவேன். பயன்பாடே முதலில் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன். விக்கியின் முறைபாடும் சற்று வேறுபாடானது. விற்பனையாகும் பொருள்களும், தொழில் நிறுவனங்களும் கூட இடம் பெறுகின்றது (இதெல்லாம் கலைகளஞ்சிய பழ மரபிலிருந்து வேறுபடுவது). கட்டாயம் தேவை என்றால், முதல் வரியை மாற்றி அமைக்கிறேன். --C.R.Selvakumar 17:22, 8 ஜூன் 2006 (UTC)செல்வா
- நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடு உண்டு. எனினும் மற்ற பயனர்களின் கருத்துக்களையும் அறிந்து தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யலாம். நன்றி.--சிவகுமார் 17:27, 8 ஜூன் 2006 (UTC)
- நீங்கள் தந்தது போல், முதல் பந்தியில் வரையறை தந்தால் சரியே என்று நினைக்கின்றேன். --Natkeeran 17:31, 8 ஜூன் 2006 (UTC)
- ஐயா மன்னிக்கவும். குறைந்தது முதல் பத்தியிலாவது வரவிலக்கணம் இருக்க வேண்டும். தற்போது முதல் பத்தியில் இருப்பதுகூட விளக்கமேயன்றி வரைவிலக்கணம் ஆகாது. (உங்களுக்குத் தெரியாததில்லை.) அதேபோல், எடுத்த எடுப்பில் ஒரு உவமானம் கொண்டு விளக்குவது எனக்கு சரியாகப் படவில்லை. முதல்வரி மட்டும் வரைவிலக்கணத்தை இணைத்தால் படிப்பவர்கள் ஓடிவிடுவார்கள் என்று தோன்றவில்லை. இரண்டாம் வரியிலிருந்து உங்கள் விளக்கத்தைத் துவக்கலாமே. -- Sundar \பேச்சு 06:48, 9 ஜூன் 2006 (UTC)
நான் சுந்தரின் கருத்துடன் உடன்படுகிறேன். விரிவான, இலகுவான வாசகர்கள் புரிந்து கொள்ளத் தக்க விளக்கங்களை விக்கி நூல்களில் தரலாம் என்பது என் கருத்து. --ரவி 08:45, 9 ஜூன் 2006 (UTC)
- ரவி, இப்பொழு நாம் விக்கிபீடியாவில் இயன்றவரை எளிய முறையில் விளக்கத்துடன் பின்புலத்தை ஏற்படுத்திகொள்ள வேண்டும். தமிழில் இத்துறையில் விக்கிபுத்தகங்கள் எல்லாம் தற்சமயம் சற்று அப்பால்தான் தெரிகின்றன. --Natkeeran 06:13, 12 ஜூன் 2006 (UTC)
- முதல் வரியில் ஒரு வகையாக விளக்கம் சேர்த்துள்ளேன். சரி பார்க்கவும்.--C.R.Selvakumar 02:38, 12 ஜூன் 2006 (UTC)செல்வா
மின் தன்மை
தொகுமின் தன்மை என்பதன் மூலம் எதைக் குறிப்பிடுகின்றீர்கள்? --Natkeeran 03:27, 12 ஜூன் 2006 (UTC)
- மின் தன்மை என்பது மின் இயல்பு கொண்ட தன்மை. மின்னூட்டம் பெற்ற பொருளின் இயல்பு. மின்னூட்டம் அல்லது மி ஏற்பு என்றால் என்னவென்று சட்டென விளங்காவிடில், ஏதோ மின் தன்மை கொண்டது என்று மட்டும் விளங்கிகொண்டாலும் போதுமென எண்ணி மின் தன்மை என்றேன். --C.R.Selvakumar 04:02, 12 ஜூன் 2006 (UTC)செல்வா
- நன்றி. இந்த எண்ணகருவை சற்று விபரமாக ஒரு சிறு கட்டுரையாக இணைத்தால் நன்று போலவும் தோன்றுகின்றது. --Natkeeran 04:23, 12 ஜூன் 2006 (UTC)
இவ்வரைவிலக்கணத்தை பரிசீலியுங்கள்
தொகுமின்னழுத்தம் என்பது மின்னூட்டப்பட்ட பொருள்களை சூழ்ந்துள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம். --Natkeeran 05:59, 12 ஜூன் 2006 (UTC)
- நல்ல வரைவிலக்கணம். மாற்றிவிடுக்ங்கள்.--C.R.Selvakumar 13:28, 17 ஜூன் 2006 (UTC)செல்வா