பேச்சு:மின்முனை

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

மின்வாயி என்றால் electrical source என்று பொருள்படும். எனவே மின்முனை என்று சொல்வது பொருந்தும்.--செல்வா 19:25, 31 மே 2011 (UTC)Reply

ஆங்கில விக்கிப்பீடியாவில் தந்துள்ள கட்டுரையில், முதல் வரியே மிகவும் பிழையானது! மின்முனை (electrode) என்பது ஒரு மின்னுறுப்பினுள் (மின் அமைப்பினுள்) மின்னோட்டம் உள்நுழைந்து பாயவும், வெளியேறிப்போகவும் இணைப்புகள் தரும் கடத்திகளால் ஆன மின் முனைகள். ஓர் உறுப்பினுள் மின்னழுத்தம் உருவாக்கவும் இவ்வகை மின்முனைகள் உதவுகின்றன. இவற்றை மாற்றி அமைக்கின்றேன். பிறகு ஆங்கிலத்திலும் திருத்துகின்றேன்!!--செல்வா 21:17, 31 மே 2011 (UTC)Reply
உங்கள் அவதானிப்புக்கு மிக்க நன்றிகள் செல்வா. உட்பொருளைக் கவனிக்காது ஆங்கில விக்கியை அப்படியே பயன்படுத்தியது எனது தவறே. மன்னிக்கவும்.

electrode- மின்வாயி, Diode-இருவாயி எனும் சொற்பயன்பாடுகள் இலங்கை பாடநூல்களில் உள்ளன. நேர் மின்முனை-Anode எனவும் மறை மின்முனை- Cathode ஆகவும் பயன்படுத்திவருகிறோம். இவை தவறா? விளக்கம் தரவும்.--சஞ்சீவி சிவகுமார் 23:40, 31 மே 2011 (UTC)Reply

சஞ்சீவி சிவகுமார், மன்னிக்கவும் இப்பொழுதுதான் உங்கள் கேள்வியைப் பார்க்கின்றேன். வாயி என்பது source என்பது போல் பொருள் சுட்டுகின்றது. தவறு என்று சொல்ல முடியாது (ஏன் எனில் வாய் என்றால்தான் source.). நேர்முனை, எதிர்முனை என்று பயன்படுத்துவதால் மின்முனை (electrical terminal) என்பது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. டையோடு என்பதையும் இருமுனையம் என்று பொதுவாகப் பயன்படுத்துகின்றோம் (ஈரி என்பது இன்னும் சுருக்கமான பலவிதமாக பொருள் பொருத்தம் தரும் சரியான சொல்! (என் கணிப்பில்)) --செல்வா (பேச்சு) 21:27, 8 மார்ச் 2012 (UTC)
கருத்துக்களுக்கு நன்றி செல்வா. ஆயினும் இலங்கைப் பயனர்களையும் கருதி வழிமாற்றுப் பக்கம் ஒன்றை ஆக்குவதே சரி எனக் கருதுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:37, 9 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்முனை&oldid=1938990" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மின்முனை" page.